Friday, September 17, 2010

அடோப் ஃபிளாஷ் (38) - Special picture effect

தேவையான படங்களை லைப்ரரிக்கு கொண்டு வரவும். இந்த எபக்டை கொண்டு வர நாம் சில செட்டிங்குகளை புரிந்து கொள்ள வேண்டும். நம் எபக்ட் உள்ளே வர 20 பிரேம்கள், படம் மட்டும் காண்பிக்க 15 பிரேம்கள். எபக்ட் வெளியே செல்ல 20 பிரேம்கள் மொத்தம் ஒரு படத்திற்கு 55 பிரேம்கள் தேவைப்படுகிறது. படம் முழுமையாக  காண்பிக்கப்படுவது 15க்கும் 35க்கும் இடைப்பட்ட பிரேம்களில்தான். (இந்த பிரேம் கணக்கில் நீங்கள் விருப்பம்போல் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ளலாம்.)



நான் இங்கே மூன்று படங்களை பயன்படுத்துகிறேன். எனவே முதல் பிரேமில் ஒரு படத்தை இன்சர்ட் செய்யவும். பிறகு 20, 35, 55 ஆகிய பிரேம்களில் ரைட்கிளிக் செய்து கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 56வது பிரேமில் ரைட்கிளிக் செய்து insert blank keyframeஐ கிளிக் செய்யவும். பிறகு உங்கள் இரண்டாவது படத்தை கொண்டு வரவும். பிறகு அதிலிருந்து +20, +15, +20 என 76, 91, 111 ஆகிய பிரேமில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். இவ்வாறு அடுத்தது படங்களை சேர்க்கலாம். (பிரேம் கணக்கு ஒரு மாதிரிக்குதான் இது உங்கள் விருப்பம்போல் இருக்கலாம்)




முதல் லேயரை லாக் செய்து கொள்ளவும். புதிய லேயரை உருவாக்கவும். ஒரு நீண்ட செவ்வகத்தை வரையவும். பிறகு செலக்சன் டூலால் நீள நீளமாக செலக்ட் செய்து செவ்வகத்தில் குறுக்காக நிறைய மெல்லிய செவ்வகங்களை உருவாக்கி டெலிட் பட்டனை அழுத்தி அதை அழிக்கவும். நீண்ட செவ்வகத்தின் அடிப்பகுதியில் கிட்டத்தட்ட படம் அளவிற்கு செவ்வகப் பகுதியை மிச்சம் வைக்கவும். அதை செலக்ட் ஆல் கொடுத்து ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்து கொள்ளவும். typeல் graphicஐ தேர்ந்தெடுக்கவும்.



முதல் படத்திற்கான எஃபக்ட்: இப்போது மெல்லிய செவ்வகங்கள் பகுதியின் ஓரம் படத்தின் கீழ் ஓரத்தில் உள்ளது. 20வது பிரேமில் ரைட்கிளிக் செய்து கீபிரேமை இன்சர்ட் செய்யவும். நீண்ட செவ்வகத்தை மேல் நோக்கி நகர்த்தவும். படமும் நீண்ட செவ்வகத்தில் மிச்சமுள்ள செவ்வகப் பகுதியும் பொருந்தும் வரை நகர்த்தவும். பிறகு 35 மற்றும் 55வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 35வது பிரேமில் எதுவும் செய்ய வேண்டாம். 55வது பிரேமில் 1வது பிரேமில் இருந்தவாறு செவ்வகத்தை (அது படத்தை விட்டு வெளியே வரும் வரை) கீழ்நோக்கி நகர்த்தவும். (அல்லது 1வது பிரேமை காப்பி செய்து 55வது பிரேமில் பேஸ்ட் செய்யவும்.)  பிறகு 1க்கும் 20க்கும் இடையிலும் 35க்கும் 55க்கும் இடையிலும் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும். இதேபோல் மற்ற படங்களுக்கும் செய்யவும்.



நீண்ட செவ்வகத்தை எந்த பக்கமிருந்தும் கொண்டு வரலாம். பிறகு கடைசியாக இரண்டாவது லேயரை ரைட்கிளிக் செய்து Mask என்பதை கிளிக் செய்யவும்.
பிரேம் ரேட் அதிகமாக இருந்தால் எஃபக்ட் கொஞ்சம் நன்றாக இருக்கும். இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:



11 comments:

  1. நண்பா

    வியப்பின் உச்சம். குழந்தைகள் தூங்கிக் கொண்டுருக்கிறார்கள். நிச்சயம் இந்த தலைப்பு மற்றும் ஜால வித்தை படங்களை இன்று மாலையில் காட்டுவேன்.

    உங்கள் தொழில்நுட்ப திறமையை இதுவரையிலும் வேறு எங்கும் பார்க்க வில்லை. காலை வணக்கத்துடன் கூடிய நல்வாழ்த்துகள்.

    நீங்கள் சொல்லிக்கொண்டு வரும் விசயங்கள் தேவைப்படும் சமயத்தில் ஆங்கில அகராதி போல வந்து பார்த்துக் கொள்வதுண்டு.

    ReplyDelete
  2. ஓட்டுப்பட்டை தேவையில்லாமல் இருக்கலாம். பக்கவாட்டில் தமிழ்வெளி மற்றும் இன்ட்லி பொருத்தலாமே? அப்படியும் அழகு கெட்டுப் போய் விடுமா என்ன?

    தேடல் உள்ளவர்கள் நிறைய பேர்கள் இங்கு உண்டு. இணைய அரட்டை மக்களுக்காவது இது பார்வையில் பட ஒவ்வொரு முறையும் கூகுள் பஸ்ஸில் இணைத்துவிடுங்கள் எஸ்கே.

    ReplyDelete
  3. பாராட்டுக்கள் ;)

    ReplyDelete
  4. அட கலக்கலா இருக்கு .. அப்படியே மின்னி மின்னி மறையுது ..
    நல்லா இருக்குங்க ..!!

    ReplyDelete
  5. //ஜோதிஜி said... //
    Google Buzzல் இணைத்து விட்டேன். இனி தொடர்ந்து இணைக்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  6. //Sugumarje said... //
    பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார்.

    //ப.செல்வக்குமார் said... //
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. //அலைகள் பாலா said... //
    நன்றி நண்பரே

    //அன்பரசன் said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete
  8. மிகவும் அருமை நன்றி நண்பரே....

    ReplyDelete
  9. //Thomas Ruban said...//
    மிக்க நன்றி!

    ReplyDelete