Sunday, September 12, 2010

அடோப் ஃபிளாஷ் (37) - Another photo effect

பிளாஷ் மூலம் பல ஃபோட்டோ எஃபக்ட்களை செய்யலாம். ஏற்கனவே சிலவற்றை பார்த்துள்ளோம். இனிவரும் பதிவுகளிலும் அவ்வப்போது ஃபோட்டொ எஃபக்ட்களை பற்றி காண்போம்.

முதலில் உங்கள் படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும் அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் Movie Clipஐ தேர்ந்தெடுக்கவும்.



பிறகு 25, 50, 75, 100 ஆகிய பிரேம்களில் ரைட்கிளிக் செய்து கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.

1வது பிரேமில் கிளிக் செய்து பிறகு படத்தை கிளிக் செய்யவும் கீழே பேனலில் filtersஐ தேர்ந்தெடுக்கவும். + பட்டனை கிளிக் செய்து அதில் Adjust Colorஐ தேர்ந்தெடுக்கவும். இப்படி அமைக்கவும். Brightness: 100, Contrast: 100, Hue: 0, Saturation: 0 என கொடுக்கவும். இப்படியே 25, 50, 75 ஆகிய பிரேம்களிலும் தரவும். (100ஐ எதுவும் செய்ய வேண்டாம்). ஆனால் செட்டிங்ஸ் மாறுபடும்.

1வது பிரேமுக்கு:
Brightness: 100, Contrast: 100, Hue: 0, Saturation: 0

25வது பிரேமுக்கு:
Brightness: 68, Contrast: 40, Hue: 0, Saturation: 0

50வது பிரேமுக்கு:
Brightness: 68, Contrast: -4, Hue: 0, Saturation: 0

75வது பிரேமுக்கு:
Brightness: 8, Contrast: -4, Hue: 0, Saturation: 0


பிறகு புதிய லேயரை உருவாக்கவும். அதன் 75வது பிரேமில் ரைட்கிளிக் செய்து கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.

நீங்கள் உருவாக்கிய movie clip சிம்பலை லைப்ரரியிலிருந்து ஸ்டேஜுக்கு இழுத்து விடவும்.  அதை சரியாக ஸ்டேஜில் பொருத்தவும்.

பிறகு 100வது பிரேமிலும் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் 75வது பிரேமில் கிளிக் செய்து ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் shiftஐ அழுத்திக் கொண்டே கர்சரை இழுத்தால் படம் நான்கு புறமும் சமமாக பெரிதாகும். (நீங்கள் சமமில்லாமலும் பெரிதாக்கி கொள்ளலாம்.) தேவையான அளவு பெரிதாக்கவும்.

பிறகு படத்தை கிளிக் செய்து, பிராபர்டிஸ் பேனலில் Colorல் Alphaவை தேர்ந்தெடுத்து 0%ஐ அளிக்கவும்.


பிறகு எல்லா கீபிரேம்களுக்கு (1&2 லேயர்) இடையிலும் ரைட்கிளிக் செய்து Create Motion Tween என்பதை கிளிக் செய்யவும்.


பிரேம் ரேட்டை(fps) அதிகம் வைத்தால் எஃபக்ட் நன்றாக இருக்கும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.



DEMO:





9 comments:

  1. முதல்ல எனக்கு தெரியல .. அப்புறம்தான் அங்க கார்னர்ல இருக்குற பட்டன கிளிக் பண்ணி தெரிஞ்சுகிட்டேன்.. தொடர்ந்து எழுதுங்க ..!!

    ReplyDelete
  2. //ப.செல்வக்குமார் said... //
    நன்றி! நன்றி!

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. //Thomas Ruban said...//
    மிக்க நன்றி!

    //சௌந்தர் said...//
    மிக்க நன்றி!

    ReplyDelete
  5. கலக்குறீங்க தலைவா... எனக்கும் flash இல் நிறைய கத்துக்க ஆர்வம்..

    ReplyDelete
  6. //Lucky Limat லக்கி லிமட் said... //
    தங்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  7. அருமை நண்பரே...நானும் அடோப் ஃபிளாஷ் வரைகலைஞன்..உங்கள் ஆக்கங்கள் படித்தேன்..அருமையாகவும்,பயனுள்ளதாகவும்,இருக்கிறது..தொடருங்கள் உங்கள்பணியை..

    ReplyDelete
  8. //padaipali said...//
    நன்றி நண்பரே. நான் தங்களை போல புரொஃபஷனல் டிசைனர் அல்ல. ஏதோ தானாக கற்றுக் கொண்டதுதான். தங்களை போன்றவர்கள் இதை பாராட்டுவது எனக்கு பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது!

    ReplyDelete