Wednesday, September 22, 2010

அடோப் ஃபிளாஷ் (41) - Advance picture transformation

முதலில் தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ரைட்கிளிக் செய்து  சிம்பலாக மாற்றுங்கள். typeல் movie clipஆக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.


40, 80, 120 ஆகிய பிரேம்களில் கீபிரேமை இன்சர்ட் செய்யுங்கள். 1வது பிரேமை கிளிக் செய்து படத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் படத்தை சிறிது பக்கவாட்டில் மட்டும் பெரிதாக்கி கொள்ளுங்கள்.

பிறகு கீழே filters பேனலில் +ஐ கிளிக் செய்து blurஐ தேர்ந்தெடுங்கள் அதில் பூட்டு சிம்பலை கிளிக் செய்து x, y ஐ பிரித்துக் கொள்ளுங்கள். இப்போது xல் 61,  yல் 0 என கொடுக்கவும்.


இப்போது 1வது பிரேமில் ரைட்கிளிக் செய்து copy frames என்பதை கிளிக் செய்யவும். 120வது பிரேமில் ரைட்கிளிக் செய்து paste frames என்பதை கிளிக் செய்யவும்.

1 மற்றும் 40வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும். 80 மற்றும் 120வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.


புதிய லேயரை உருவாக்கவும். லைப்ரரியிலிருந்து படத்தை (மூவிகிளிப் சிம்பலை அல்ல) ஸ்டேஜுக்கு எடுத்து விடவும். Align panel மூலம் படத்தை ஸ்டேஜில் சரியாக வைக்கவும். பிறகு control + Bஐ அழுத்தவும். படம் இப்படி இருக்கும்.


40, 80, 120 ஆகிய பிரேம்களில் கீபிரேமை இன்சர்ட் செய்யுங்கள். 1வது பிரேமை கிளிக் செய்து படத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் படத்தை இந்த வீடியோவில் உள்ளது போல் படத்தை சிறியதாக இழுத்து மேலும் இழுத்து படம் திரும்பி இருப்பது போல் வைக்கவும். (கொஞ்சம் கவனமாக செய்யவும்.) (வீடியோ தெளிவின்மைக்கு மன்னிக்கவும்.)




இப்போது 1வது பிரேமில் ரைட்கிளிக் செய்து copy frames என்பதை கிளிக் செய்யவும். 120வது பிரேமில் ரைட்கிளிக் செய்து paste frames என்பதை கிளிக் செய்யவும். 1 மற்றும் 40வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create shape tweenஐ கிளிக் செய்யவும். 80 மற்றும் 120வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create shape tweenஐ கிளிக் செய்யவும்.

DEMO:







8 comments:

  1. அப்படியே சுத்தி சுத்தி வருது ...!! நல்லா இருக்கு .., நானும் பழகனும்னு தான் நினைக்கிறன் . முயற்சிக்கிறேன் ..!!

    ReplyDelete
  2. //ers said...//
    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  3. //ப.செல்வக்குமார் said...//
    முயற்சி செய்து பாருங்கள். ஆர்வம் அதிகமாகும்.

    ReplyDelete
  4. வணக்கம்
    தங்களது வலைத்தளத்தை எனது வலைப்பக்கத்தில் இணைப்புக்கொடுத்துள்ளேன்.

    நன்றி

    ReplyDelete
  5. அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி நண்பரே....

    ReplyDelete
  6. //Thomas Ruban said...//
    எல்லா போஸ்டுக்கும் கமெண்ட் போட்டதற்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  7. செமயா இருக்கு நண்பா.

    ReplyDelete
  8. //அன்பரசன் said... //
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete