Thursday, September 23, 2010

அடோப் ஃபிளாஷ் (43) - Bouncing photo effect

மூன்று படங்களை லைப்ரரிக்கு எடுத்துக் கொள்ளவும். பேக்ரவுண்ட் நிறமாக ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். படங்கள் வெவ்வேறு அளவில் இருந்தால் எஃபக்ட் சிறப்பாக இருக்கும். மேலும் ஸ்டேஜ் அளவு படங்களின் அளவை விட அதிகமாக இருந்தால் நல்லது.


முதல் படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். Align டூல் மூலம் அதை ஸ்டேஜுக்கு நடுவில் கொண்டு வரவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக மாற்றவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 10வது பிரேமில் ரைட்கிளிக் செய்து ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும்  முதல் பிரேமை கிளிக் செய்யவும். படத்தை ஸ்டேஜுக்கு வெளியே கொண்டு செல்லவும். படத்தை கிளிக் செய்யவும். கீழே பிராப்பர்ட்டி பேனலில் colorல் Advancedஐ தேர்ந்தெடுக்கவும். அருகில் settingsஐ கிளிக் செய்து கீழ்காணுமாறு அமைக்கவும். 1 மற்றும் 10வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.


புதிய லேயரை உண்டாக்கவும். 8வது பிரேமில் ரைட்கிளிக் செய்து insert keyframeஐ கிளிக் செய்யவும். அதில் இரண்டாவது படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். Align டூல் மூலம் அதை ஸ்டேஜுக்கு நடுவில் கொண்டு வரவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக மாற்றவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 18வது பிரேமில் ரைட்கிளிக் செய்து ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும்  8வது பிரேமை கிளிக் செய்யவும். படத்தை ஸ்டேஜுக்கு வெளியே கொண்டு செல்லவும். படத்தை கிளிக் செய்யவும். கீழே பிராப்பர்ட்டி பேனலில் colorல் Advancedஐ தேர்ந்தெடுக்கவும். அருகில் settingsஐ கிளிக் செய்து மேலே சொன்னவாறு அமைக்கவும். 8 மற்றும் 18வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.


மூன்றாவதாக ஒரு புதிய லேயரை உண்டாக்கவும். 16வது பிரேமில் ரைட்கிளிக் செய்து insert keyframeஐ கிளிக் செய்யவும். அதில் மூன்றாவது படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். Align டூல் மூலம் அதை ஸ்டேஜுக்கு நடுவில் கொண்டு வரவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக மாற்றவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 26வது பிரேமில் ரைட்கிளிக் செய்து ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும்  16வது பிரேமை கிளிக் செய்யவும். படத்தை ஸ்டேஜுக்கு வெளியே கொண்டு செல்லவும். படத்தை கிளிக் செய்யவும். கீழே பிராப்பர்ட்டி பேனலில் colorல் Advancedஐ தேர்ந்தெடுக்கவும். அருகில் settingsஐ கிளிக் செய்து மேலே சொன்னவாறு அமைக்கவும். 16 மற்றும் 26வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.


இதுவரை மூன்று படங்கள் வரும் எஃபக்டை கொண்டு வந்து விட்டோம். இனி வெளியேறும் எஃபக்டை செய்யப் போகிறோம். கடைசி லேயரின்(மூன்றாவது) படத்தின் உள்வரும் எஃபக்ட்டின் முடிவிற்கும் வெளியேறும் எஃபக்ட்டின் ஆரம்பத்திற்கும் இடையில் உள்ள அளவு 30 பிரேம்கள் ஆகும். அதாவது இங்கே 55 வது பிரேம் ஆகும். எனவே 30 பிரேம்களின் நடுப்பகுதியான 40வது பிரேமில் ஒரு கீபிரேமை எல்லா லேயர்களிலும் இன்சர்ட் செய்து கொள்ளவும்.  உள்வரும் எஃபக்ட்டின் முடிவிற்கும் இந்த நடுப்பகுதிக்கும் இடையே உள்ள பிரேம்கள் அளவும், இந்த நடுப்பகுதிக்கும் வெளியேறும் எஃபக்ட்டின் ஆரம்பத்திற்கும் இடையில் உள்ள பிரேம்களின் அளவும் சமமாக இருக்க வேண்டும்.


மேற்சொன்னவற்றின் அடிப்படையில், முதல் லேயரில் 78, 88லும்; இரண்டாவது லேயரில் 62, 72லும்; மூன்றாவது லேயரில் 55, 65வது பிரேமிலும் கீபிரேம்களை இன்சர்ட் செய்யவும். முதல் லேயரின் கடைசி பிரேமில் கிளிக் செய்து படத்தை கிளிக் செய்து, ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம் படத்தை பக்க வாட்டில் பெரிதாக்கவும். பிறகு கீழே பிராப்பர்ட்டி பேனலில் colorல் Alphaவை தேர்ந்தெடுத்து 0%ஐ கொடுக்கவும். இப்படியே மற்ற லேயர்களின் கடைசி பிரேமிலும் செய்யவும். முதல் லேயரில் 78, 88க்கு இடையிலும்; இரண்டாவது லேயரில் 62, 72க்கு இடையிலும்; மூன்றாவது லேயரில் 55, 65வது பிரேம்களுக்கு இடையிலும் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.


பிரேம் ரேட் அதிகமாக இருந்தால் எஃபக்ட் கொஞ்சம் நன்றாக இருக்கும். இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:





6 comments:

  1. அட ரொம்ப ரசிக்கக்கூடியவர்களை போட்டு இருக்கீங்க

    ReplyDelete
  2. //ஜோதிஜி said...//
    எனக்க்கு இந்த படம் போடுறதுலதான் குழப்பமே. அது மற்றவங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று! :-)

    ReplyDelete
  3. மூணு பேருமே சூப்பர் ஹீரோ போட்டோ போட்டிருக்கீங்க.
    எஃபெக்ட் நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. மிகவும் அருமை பகிர்வுக்கு நன்றி சார்.

    நான் பயன்படுத்திய அளவில்
    http://oron.com/ovdyrl1jfxb2/wondershare.video.converter.ultimate.rar.html
    வீடியோ கன்வேர்ட்டர் நன்றாக உள்ளது.


    இந்த http://hotfile.com/dl/58246841/ae7745a/WOVICOUL_Portable.rar.html
    போர்ட்டபிள் வீடியோ கன்வேர்ட்டர் நன்றாக உள்ளது.உங்களுக்கு பயன்படுமா என்று தெரியவில்லை நண்பரே...

    ReplyDelete
  5. வகுப்புக்கு வந்தேன் ஐயா
    சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
    ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
    http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

    ReplyDelete
  6. //அன்பரசன் said...//
    மிக்க நன்றி! :-)

    //Thomas Ruban said...//
    தகவலுக்கு நன்றி நண்பரே! பயன்படுத்தி பார்க்கிறேன்!

    //ம.தி.சுதா said...//
    வருகைக்கு நன்றி சகோதரா! அப்பதிவை நேற்றே பார்த்து ஓட்டுப் போட்டு கருத்து தெரிவித்து விட்டேனே!

    ReplyDelete