முதலில் உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் Movieclipஐ தேர்ந்தெடுக்கவும்.
25வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். முதல் பிரேமில் மீண்டும் கிளிக் செய்த பிறகு படத்தை கிளிக் செய்து கீழே பிராப்பர்ட்டி சேனலில் Alphaவில் 0வை தேர்ந்தெடுக்கவும்.
புதிய லேயரை உண்டாக்கவும். லைப்ரரியிலிருந்து நீங்கள் உருவாக்கிய சிம்பலை இழுத்து விடவும் அது சரியாக படத்துடன் பொருந்துமாறு வைக்கவும். பிறகு 25வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். முதல் பிரேமில் மீண்டும் கிளிக் செய்த பிறகு படத்தை கிளிக் செய்து கீழே பிராப்பர்ட்டி சேனலில் Alphaவில் 0வை தேர்ந்தெடுக்கவும். இப்போது கூடுதலாக படத்தை கிளிக் செய்து transform டூல் மூலம் shift அழுத்திக் கொண்டே பெரிதாக்கவும்.
முதல் இரண்டு லேயர்களை லாக் செய்து கொள்ளவும். புதிதாக ஒரு லேயரை உருவாக்கவும். செவ்வக வடிவத்தை தேர்ந்தெடுத்து ஒரே அளவுள்ள மெலிதான நான்கைந்து செவ்வகங்களை வரையவும். அதனை வெவ்வேறு இடைவெளிகளில் வைக்கவும். பிறகு செலக்ட் ஆல் கொடுத்து ரைட்கிளிக் செய்து convert to symbolஐ தேர்ந்தெடுக்கவும். typeல் Movieclipஐ தேர்ந்தெடுக்கவும்.
25வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். படத்தை கிளிக் செய்து transform டூல் மூலம் shift அழுத்திக் கொண்டே பெரிதாக்கவும். எல்லா லேயர்களிலும் கீபிரேம்களுக்கு இடையே ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை தேர்ந்தெடுக்கவும்.
செவ்வக லேயரை ரைட்கிளிக் செய்து Mask என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO:
ரொம்ப அருமைங்க.. தொழில்னநுட்ப்பத்தையும் சொல்லி அதுக்கு ஒரு சம்பிளும் கொடுத்தீங்க பாருங்க, அருமை அருமை.. வாழ்த்துக்கள்.
ReplyDelete// ருத்ர வீணை® said...//
ReplyDeleteமிக்க நன்றி.
நன்றி தொடரட்டும் உங்கள் சேவை....
ReplyDelete//Thomas Ruban said... //
ReplyDeleteதொடர்வோம். நன்றி!