எளிய ஸ்க்ரோல் பேன்:
முதலில்Inset->New Symbolஐ கிளிக் செய்யவும். அதற்கு ஏதாவது ஒரு பெயர் கொடுக்கவும்.Typeல் Movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதில் Export for Actionscript என்பதை டிக் செய்யவும். Identifier என்பதிலும் சிம்பலின் அதே பெயர் உள்ளதா என பார்க்கவும்.
பிறகு சிம்பல் விண்டோ தோன்றியவுடன் அதனுள்ளே நீங்கள் ஸ்க்ரோல் பேனுக்குள் வைக்க விரும்பும் டெக்ஸ்ட், படங்களை சேர்க்கவும்.
Scene 1ஐ கிளிக் செய்யவும். பிறகு மேலே windowவில் components என்பதை கிளிக் செய்யவும் ஒரு பெட்டி தோன்றும். அதில் user interfaceஐ கிளிக் செய்யவும். அதில் Scrollpane என்பதை ஸ்டேஜுக்கு இழுத்துவரவும். ஸ்க்ரோல்பேன் அளவை தேவையானபடி free transform tool மூலம் அமைத்துக் கொள்ளவும்.
பிறகு ஸ்க்ரோல்பேனை கிளிக் செய்து கீழே Parameters என்பதை கிளிக் செய்யவும். அதில் contentPath என்பதற்கு அருகே Movieclip-க்கு என்ன பெயர் கொடுத்தீர்களோ அதை எழுதவும். அவ்வளவுதான்!
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
நாமாக ஸ்க்ரோல்பார் ஸ்டைலை வடிவமைக்கும் custom scrollbarஐ சாதாரணமாக அமைக்க முடியாது. அதற்கு ஆக்சன்ஸ்கிரிப்ட் தேவை. அதைப் பற்றி வேறொரு பதிவில் காண்போம்.
DEMO:
அருமை,பகிர்வுக்கு நன்றி நண்பரே....
ReplyDelete// நாமாக ஸ்க்ரோல்பார் ஸ்டைலை வடிவமைக்கும் custom scrollbarஐ சாதாரணமாக அமைக்க முடியாது. அதற்கு ஆக்சன்ஸ்கிரிப்ட் தேவை. அதைப் பற்றி வேறொரு பதிவில் காண்போம்.//
எதிர்பார்க்கிறேன்..நன்றி.
//Thomas Ruban said...//
ReplyDeleteநிச்சயம் வரும்!