Monday, September 20, 2010

அடோப் ஃபிளாஷ் (39) - Circle shape blure picture effect

உங்களுக்கு தேவையான படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வாருங்கள். அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக மாற்றுங்கள். typeல் movie clipஐ தேர்ந்தெடுங்கள். 70வது பிரேமை கிளிக் செய்து கீபிரேமை இன்சர்ட் செய்யுங்கள்.


மீண்டும் முதல் பிரேமை கிளிக் செய்து படத்தை கிளிக் செய்யவும். பிறகு filters பேனலை கிளிக் செய்து அதில் + ஐ கிளிக் செய்து blurஐ தேர்ந்தெடுக்கவும். அதில் 49% அளிக்கவும். பிறகு properties பேனலை கிளிக் செய்து அதில் colorsஐ கிளிக் செய்து Alphaவை தேர்ந்தெடுக்கவும். அதில் 0% கொடுக்கவும்.

1வது மற்றும் 70வது பிரேம் இரண்டுக்கும் இடையில் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.
முதல் லேயரை லாக் செய்து கொள்ளவும். புதிய லேயரை உருவாக்கவும். லைப்ரரியிலிருந்து நீங்கள் உருவாக்கிய மூவிகிளிப் சிம்பலை ஸ்டேஜுக்கு இழுத்து விடவும். அந்த படத்தை கிளிக் செய்து control+B ஐ இருமுறை கிளிக் செய்யவும்.
70வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு ஓவல் டூலை கிளிக் செய்து பெரிது சிறிதாக சில வட்டங்களை (வேறு வடிவத்தை கூட வரையலாம்) வரையவும். பிறகு வட்டங்களை மட்டும் தேர்ந்தெடுத்து டெலீட் செய்யவும். இப்போது படம் இப்படி இருக்கும்.


1வது மற்றும் 70வது பிரேம் இரண்டுக்கும் இடையில் ரைட்கிளிக் செய்து create shape tween என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:





7 comments:

  1. //அன்பரசன் said... //
    மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  2. தொடர்ச்சியான ஹிட் அடிக்கறீங்க தல..

    ReplyDelete
  3. அப்படியே பெட்டி பெட்டிய வந்து திறக்குதுங்கோ ..!!
    நல்லா இருக்கு ..!!

    ReplyDelete
  4. //ஆர்.கே.சதீஷ்குமார் said... //
    மிக்க நன்றி சார்.

    //ப.செல்வக்குமார் said... //
    நன்றிங்கோ!

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  6. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete