Tuesday, September 28, 2010

அடோப் ஃபிளாஷ் (49) - Solarize effect

இந்த எஃபக்டிற்கு ஒரு சாதாரண படம் மற்றும் solarize effect உள்ள படம் என இரண்டு படங்கள் தேவை.

solarize effectஐ ஃபோட்டோஷாப்பில் எளிதில் செய்யலாம்:
உங்களுக்கு தேவையான புகைப்படத்தை ஃபோட்டோஷாப்பில் எடுத்துக் கொள்ளவும். பிறகு Filters-> Stylize-> Solarizeஐ கிளிக் செய்யவும். வேறு பெயரில் படத்தை சேமித்துக் கொள்ளவும்.

பிளாஷில் சாதாரண படம், எஃபக்ட் உள்ள படம் இரண்டையும் லைப்ரரியில் எடுத்துக் கொள்ளவும். முதலில் சாதாரண படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். பிறகு 5 பிரேம்கள் வரை தொடர்ச்சியாக கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.

பின், 2, 4 ஆகிய பிரேம்களில் கிளிக் செய்து டெலீட் பட்டனை அழுத்தி கீபிரேமை டெலீட் செய்யவும்.


புதிய லேயரை உண்டாக்கவும். எஃபக்ட் உள்ள படத்தை எடுத்து வரவும். பிறகு 5 பிரேம்கள் வரை தொடர்ச்சியாக கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பின், 1, 3, 5 ஆகிய பிரேம்களில் கிளிக் செய்து டெலீட் பட்டனை அழுத்தி கீபிரேமை டெலீட் செய்யவும். அவ்வளவுதான்!

DEMO:





13 comments:

  1. கணணு வலி வந்துடும் போலிருக்கே.

    ReplyDelete
  2. நானும் போட்டோ டிசைன் பண்ண கத்துகிட்டு இருக்கேன் எதாவது சந்தேகம் வந்தா சொல்லி கொடுங்க பிளிஸ்...

    இப்போதைய டவுட்டு திருமண விழாக்களில் எடுத்த போட்டோக்களை விடியோவாக மாற்ற எதாவது இலவச சாப்ட்வேர் இருக்கா?

    ReplyDelete
  3. கண்ணு போச்சு. ஏங்க இப்படி? ;)

    ReplyDelete
  4. அப்படியே மின்னல் அடிக்குது ..?
    நான் கிளம்புறேன் ..!!

    ReplyDelete
  5. //ஜோதிஜி said...//
    //அருண் பிரசாத் said...//
    //ப.செல்வக்குமார் said...//
    :-))

    ReplyDelete
  6. //ஏதோ ஒரு ஜீவன் said...//
    என் மின்னஞ்சல் psych.suresh@gmail.com
    எப்போதும் தொடர்பு கொள்ளலாம்.

    Slideshow உருவாக்க இதை முயற்சிக்கவும்.
    http://download.cnet.com/Flash-Slideshow-Maker/3000-6676_4-10541568.html

    ReplyDelete
  7. ப்ளாஷ் அடிக்கிறது நண்பா..அருமை

    ReplyDelete
  8. மின்னல் மின்னுவது போல் உள்ளது பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  9. //padaipali said... //
    நன்றி நண்பரே!

    //Thomas Ruban said... //
    நன்றி நண்பா!

    ReplyDelete
  10. எஸ்.கே சார்.. அருமையா இருக்குங்க . நான் ஏற்கெனவே ரொம்ப டாலடிக்கிறேனா.. இதுல என் படம் தக தகன்னு.. nice

    ReplyDelete
  11. //மோகன்ஜி said... //
    இந்த டெக்னிக்குகளை நாம் தொழில்ரீதியாக, வியாபாரரீதியாக பயன்படுத்த விட்டாலும் ஒரு விளையாட்டாய் செய்து பார்த்து மகிழ்ச்சியடையலாம். :-)

    ReplyDelete
  12. அருமையான பதிவுகள் நண்பரே... எக்காரணம் கொண்டும் நிறுத்தி விடாதீர்கள்... தொடர்ந்து எழுதவும்.. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. //Sukumar Swaminathan said... //
    மிக்க நன்றி சார்! தங்களைப் போன்றவரின் ஊக்கங்கள் தொடர்ந்து எழுத வைக்கிறது!

    ReplyDelete