இதற்கு சூரிய உதய புகைப்படம் தேவை. எனவே அப்படிப்பட்ட ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதை ஸ்டேஜில் சரியாக வைக்கவும். பிறகு ரைட் கிளிக் செய்து அதை சிம்பலாக மாற்றவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும்.
புதிய லேயரை உருவாக்கவும். ஓவல் டூலால் ஒரு வட்டத்தை சூரியன் அளவிற்கு வரையவும் அதை சரியாக சூரியன் மீது வைக்கவும். அதையும் ரைட் கிளிக் செய்து அதை சிம்பலாக மாற்றவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும்.
மீண்டும் முதல் லேயருக்கு வந்து அதன் 45வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு மீண்டும் 1வது பிரேமில் கிளிக் செய்து படத்தை கிளிக் செய்யவும். பிறகு ட்ரான்ஸ்ஃபார்ம் டூலால் படத்தை பெரிதாக்கவும். அதன் பின் கீழே filters பேனலில் +ஐ கிளிக் செய்து Adjust colorஐ தேர்ந்தெடுக்கவும். brightness= 100, contrast=100, saturation=0, hue=0 என அளிக்கவும்.
2வது லேயருக்கு செல்லவும். அதன் 45வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு ட்ரான்ஸ்ஃபார்ம் டூல் மூலம், வட்டத்தை படத்தை (ஸ்டேஜை) விட பெரிதாக ஆக்கவும்.
இரண்டு லேயர்களிலும் 1 மற்றும் 45வது பிரேம்களுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும். பிறகு இரண்டாவது லேயரில் ரைட்கிளிக் செய்து Maskஐ கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO:
Nice..
ReplyDeleteநன்றாகவே உள்ளது நன்றி நண்பரே..
ReplyDeleteரொம்ப அருமையா இருக்குங்க....
ReplyDelete//அன்பரசன் said...//
ReplyDelete//Thomas Ruban said...//
//இவன் சிவன் said...//
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே!
தொடர்ந்து கலக்கலான பதிவுகள் எனக்கு மிகவும் பயன் தருகிறது பாதி இந்த சாஃப்ட்வேரை நோண்டவே சரியாக இருக்கிறது
ReplyDelete//ஆர்.கே.சதீஷ்குமார் said...//
ReplyDeleteதங்களுக்கு பயன்பட்டால் மகிழ்ச்சியே!