ஃபிளாஷ் ஃபைலை திறக்கவும்.
படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். அதை ரைட் கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதை டபுள் கிளிக் செய்யவும்.
படத்தை கிளிக் செய்து அதை மீண்டும் சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். டைம்லைனில் ஏழு கீபிரேம்களை இன்சர்ட் செய்யவும்.
2,4,6 ஆகிய கீபிரேம்களில் கீழ்கண்டதை செய்யவும். அதாவது, படத்தை கிளிக் செய்து கீழே filter பேனலில் + ஐ கிளிக் செய்து Adjust Colorஐ கிளிக் செய்யவும். அதில் Saturation 31 என கொடுக்கவும். 1, 3,5,7 ஆகிய கீபிரேம்களில் படத்தை எதுவும் செய்ய வேண்டாம். கடைசியாக 60 பிரேமில் ரைட்கிளிக் செய்து insert frameஐ கிளிக் செய்யவும்.
பிறகு scene 1ஐ கிளிக் செய்யவும். முதல் லேயரை லாக் செய்து கொள்ளவும். புதிதாக ஒரு லேயரை உருவாக்கவும். பென்சில் டூலை தேர்ந்தெடுக்கவும். மின்னல் போல ஒன்றை வரையவும். அதை மொத்தமாக செலக்ட் செய்து, ரைட் கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதை டபுள் கிளிக் செய்யவும்.
7வது பிரேம் வரை கீபிரேமை கிளிக் செய்யவும். ஒவ்வொரு பிரேமிலும் மின்னலை கிளிக் செய்து அதை டெலீட் செய்து விட்டு அதைப் போல புதிதாக ஒன்றை வரையவும். பிறகு scene 1ஐ கிளிக் செய்யவும்.
கீழ்காணும் செட்டிங்களை கவனமாக செய்யவும். முதல் லேயரில் 60 பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Frameஐ கிளிக் செய்யவும். இரண்டாவது லேயரில் 7வது பிரேமை ரைட்கிளிக் செய்து Insert Frameஐ கிளிக் செய்யவும். 8வது பிரேமை கிளிக் செய்து Insery Blank Keyframe என்பதை கிளிக் செய்யவும். மின்னலை கிளிக் செய்து கீழே filter பேனலில் + ஐ கிளிக் செய்து Glowஐ கிளிக் செய்யவும். வெள்ளை நிறத்தை தேர்ந்தெடுத்துஅதில் Blur 10 என கொடுக்கவும்.
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO:
Really appreciate your practical knowledge of this field.
ReplyDelete//ஜோதிஜி said... //
ReplyDeletePleasure to hear this from great peoples like you.
அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே....
ReplyDeleteஇதை லினக்சில் உருவாக்க என்ன மென்பொருள் தேவை. நான் லினக்ஸ் மட்டுமே பயன்படுத்துகிறேன்.
ReplyDelete//Thomas Ruban said...//
ReplyDeleteமிக்க நன்றி!
//suthanthira-ilavasa-menporul.com said...//
ReplyDeleteஇதோ லினக்ஸிற்கான ஃபிளாஷ் மென்பொருள். ஓப்பன் சோர்ஸ்
F4L
எஸ்கே மிக அருமையான் பகிர்வு.
ReplyDeleteதொடரட்டும் மேலும்.
//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said... //
ReplyDeleteமிக்க நன்றி!
பாராட்டுக்கள்... ஜமாய் ;)
ReplyDeleteஇது எல்லாமே எனக்குப் புதியதுதான் .. தொடர்ந்து எழுதுங்க ..!!
ReplyDelete//Sugumarje said...//
ReplyDeleteஉங்களை மாதிரி சிறந்த டிசைனர் கிட்ட இருந்து பாராட்டு வாங்குறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி!
//ப.செல்வக்குமார் said... //
ReplyDeleteமிக்க நன்றி!
//எஸ்.கே said...
ReplyDelete//suthanthira-ilavasa-menporul.com said...//
இதோ லினக்ஸிற்கான ஃபிளாஷ் மென்பொருள். ஓப்பன் சோர்ஸ்
F4L
//
ஆஹா. லினக்சிலும் உங்கள் ஞானம் விரிவடைந்து இருப்பது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி.
//Blogger suthanthira-ilavasa-menporul.com said//
ReplyDeleteநண்பரே நானும் சில காலம் விண்டோ லினக்ஸ் இரண்டையும் பயன்படுத்தினேன். வேலைக்கு விண்டோ பழகிவிட்டதால் அதை மட்டும் இப்போது பயன்படுத்துகிறேன்.