Saturday, September 4, 2010

அடோப் ஃபிளாஷ் (33) - Invisible Button

Invisible Buttonஐ பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஆனால் தன் மற்றொரு பயனை இங்கே பார்ப்போம். சில படங்களில் குறிப்பிட்ட பகுதிகளை கிளிக் செய்யும்போதோ அல்லது கர்சரை கொண்டு வரும்போதோ எழுத்துக்கள் தோன்றுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதை செய்வதை இங்கே பார்ப்போம். இந்த பயன்பாடு பல விளையாட்டுகளில் பயன்படுகிறது.

முதலில் உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக்கொள்ளவும்.




பிறகு அது உள்ள லேயரை லாக் செய்து விட்டு புதிய லேயரை உண்டாக்கவும் பிரஷ் டூலை தேர்ந்தெடுத்து நீங்கள் பட்டனாக்க விரும்பும் பாகத்தில் பிரஷ்ஷால் வரையவும். வரைந்தது இப்படி இருக்கும்.


அதை அப்படியே ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Typeல் Buttonஐ தேர்ந்தெடுக்கவும்.

பிறகு அந்த பட்டனை டபுள்கிளிக் செய்யவும் அங்கே முதலில்(Up) இருக்கும் கீபிரேமை கடைசிக்கு(Hit) இழுத்து விடவும்.

பிறகு மீண்டும் scene 1ஐ கிளிக் செய்து பார்த்தால் இப்படி இருக்கும்.

பிறகு பட்டனை ரைட்கிளிக் செய்து  Actonsஐ கிளிக் செய்து அதில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
on (rollOver) {
gotoAndPlay (5)
}
on (rollOut) {
gotoAndPlay (1)
}
பட்டனை கிளிக் செய்தால்  எழுத்து தோன்ற வேண்டுமானால் rollOver மற்று ம் rollOut என்பதற்கு பதிலாக press மற்றும் release என்பதை எழுதவும்.

முதல் இரண்டு லேயர்களின் இரண்டாவது பிரேம்களில் ரைட்கிளிக் செய்து Insert Frameஐ கிளிக் செய்யவும். இதனால் படமும் பட்டனும் மறையாது. புதிய லேயரை உருவாக்கவும். அதன் இரண்டாவது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Keyframeஐ கிளிக் செய்யவும். பிறகு நாம் எழுத விரும்புவதை எழுதவும்.

கடைசியாக ஒரு லேயரை உருவாக்கி அதன் முதல் பிரேமிலும் இரண்டாவது பிரேமிலும் ரைட்கிளிக் செய்து Actonsஐ கிளிக் செய்து அதில் stop(); என பேஸ்ட் செய்யவும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:



5 comments:

  1. // வெறும்பய said...//
    மிக்க நன்றி

    // மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. // வெறும்பய said...//
    மிக்க நன்றி

    // மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அருமை,பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  4. //Thomas Ruban said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete