Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Thursday, July 29, 2010

உடலை அறிவோம் - கண் (பாகம் 3)

சாதாரண பார்வை
படத்தில் காட்டியுள்ளபடி, இணையான திசையில் தொலைவிலுள்ள பொருள்களிலிருந்து செல்லும் ஒளி சிலியரி தசை முழுவதுமாக தளர்ந்த நிலையில் இருக்கும்போது, ரெட்டினாவில் குவிக்கப்படுகிறது. அதாவது சாதாரண கண்ணால் தொலைவிலுள்ள அனைத்து பொருட்களையும் அதன் சிலியரி தசைகள் தளர்வாக இருக்கும்போது, தெளிவாக காண முடியும்.

உடலை அறிவோம் - கண் (பாகம் 2)

கண்பார்வை:

ஒரு பொருளின் மீது படும் ஒளி பிரபதிலிக்கப்படுகிறது. இந்த ஒளி கண்ணில் லென்ஸ் வழியே ஊடுருவிச் சென்று ரெடினாவில் (விழித்திரை) தலைகீழ் பிம்பமாக விழுகிறது. பின் அது நரம்பு வழியே செய்திகளாக மூளைக்கு செல்கிறது. மூளை அந்த பொருளை பார்த்து உணர்கிறது.

உடலை அறிவோம் - கண் (பாகம் 1)

கண் என்பது நம் பார்வைக்கான உறுப்பு. இது மண்டையோட்டில் கருக்கோளக் குழிக்குள் அமைந்துள்ளது. கண் புருவங்கள் கண்ணிற்கு நிழலை அளிக்கின்றன. மேலும் இவை வியர்வை கண்ணுக்குள் சென்று எரிச்சலை ஏற்படுத்தாதவாறு தடுக்கின்றன. கண் இமைகளும், இமை முடிகளும் கண்ணுக்குள் தூசி எதுவும் விழாமல் தடுக்கின்றன. கண் இமைக்கு செயலால் கண்ணீர் கண்ணின் மேல் பகுதியில் பரவி உராய்வு தடுக்கப்படுகிறது. இந்த கண்ணீர் உராய்வினை மட்டும் தடுக்கவில்லை, இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளை கொள்ளும் நொதிகளும் உப்புகளும் உள்ளன.