Thursday, July 29, 2010

உடலை அறிவோம் - கண் (பாகம் 2)

கண்பார்வை:

ஒரு பொருளின் மீது படும் ஒளி பிரபதிலிக்கப்படுகிறது. இந்த ஒளி கண்ணில் லென்ஸ் வழியே ஊடுருவிச் சென்று ரெடினாவில் (விழித்திரை) தலைகீழ் பிம்பமாக விழுகிறது. பின் அது நரம்பு வழியே செய்திகளாக மூளைக்கு செல்கிறது. மூளை அந்த பொருளை பார்த்து உணர்கிறது.

கண் ஒரு கேமரா:
கண் ஒரு ஒளிப்படக்கலை கேமரா போலவே செயல்படுகிறது. இதில் ஒரு லென்ஸ் அமைப்பு உள்ளது. துளை (பாவை) உள்ளது. மேலும் ஃபிலிமாக ரெடினா செயல்படுகிறது.





மேலே படத்தில் படம் 1-ல் பாவை துளை சிறியதாக உள்ளது படம் 2-ல் பாவை துளை பெரியதாக உள்ளது. இரண்டு படங்களிலும் கண்களுக்கு முன்னால் இரண்டு சிறிய ஒளி மூலங்கள் உள்ளன. அந்த ஒளி பாவை துளை வழியே சென்று ரெடினாவில் விழுகிறது. இரண்டு படங்களிலும் ரெடினா மிகச்சரியான குவியத்தில் பார்க்கிறது. படம் 1ல் ரெடினா முன்னே அல்லது பின்னே நகர்ந்தால் அளவில் பெரிதான மாறுபாடு ஏற்படாது. ஆனால் படம் 2ல் ரெடினா நகர்ந்தால்,  அளவு அதிகரித்து ஒரு மங்கலான வட்டமாகி விடும். அதாவது முதல் படத்தில் இரண்டாவது படத்தை விட ஆழமான குவியம் உள்ளது. இதன் காரணத்திலாயே படம் 1ல் பாவைத் துளை சிறியதாகவும் படம் 2ல் பாவைத் துளை பெரியதாகவும் உள்ளது.

பார்வைக் கூர்மை
மனித கண்ணிற்கான சாதாரண பார்வை திறனை கண்டறிய ஸ்னெல்லன் சார்ட் (படத்தை பார்க்க) பயன்படுகிறது.




இதில் ஒரே அளவிலான எழுத்துக்கள் 20 அடி தூரத்தில் உள்ள நபரிடம் காண்பிக்கப்படுகின்றன. 20/20 பார்வை உள்ளவரே சாதாரண பார்வை உடையவராக க்ருதப்படுவார். அவர் அந்த எழுத்துக்களை 200 அடி தூரத்தில் பார்த்தால் அவரின் பார்வை 20/200 ஆகும். இதை காணவே 20 அடி தூரத்தில் வெவ்வேறு அளவிலுள்ள எழுத்துக்களை காண்பிக்கின்றனர்.
மெட்ரிக்

மெட்ரிக்      ஸ்னெல்லன்
6/3             20/10
6/4.5          20/15
6/6             20/20
6/7.5          20/25
6/9             20/30
6/12           20/40
6/15           20/50
6/30          20/100
6/60          20/200
இது ஸ்னெல்லன் சார்டின் பார்த்தப்டி ஒவ்வொரு அளவிற்கு தேவையான தோராயமான லென்ஸ் திருத்தம் ஆகும்:

ஸ்னெல்லன்   கணக்கிடப்பட்ட அளவு
20/10          ப்ளேனோ (பூச்சியம்) 
20/15          ப்ளேனோ
20/20         ப்ளேனோ முதல் -0.25 வரை
20/30         -0.50
20/40         -0.75
20/50         -1.00 முதல் -1.25 வரை
20/100        -1.75 முதல் -2.00 வரை
20/200        -2.00 முதல் -2.50 வரை 

     

டெப்த் பெர்சப்ஷன்

ஒரு பொருளின் பரிமாணத்தை கண்டறிவது கண் செய்யும் மற்றொரு வேலையாகும். ஒரு நபர் சாதாரணமாக பொருளின் தூரத்தை மூன்று வழிகளில் கண்டறிகிறார். 1. தெரிந்த பொருள்களின் அளவு. 2. இணையாக நகரும் அமப்பு 3. ஸ்டிரியோப்சிஸ். இந்த திறன் டெப்த் பெர்சப்சன் என அறியப்படுகிறது.




தெரிந்த பொருள்களின் அளவுகள் மூலம் தூரத்தை அறிதல்
6 அடி உயரமுள்ள ஒருவரை காணும்போது, அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை கணக்கிட முடியும். ஏனெனில் ரெடினாவில் பதியும் நபரின் உருவத்தின் அளவை வைத்து மூளை மற்ற பரிமாணங்களை கணக்கிடும்.
இணையாக நகர்தல் மூலம் தூரத்தை அறிதல்
ஒருவர் 1 அங்குலம் தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்கிறாஎ பின் தன் தலையை 1 அங்குலம் பக்கவாட்டி நகர்த்தினால் பொருளும் அவ்வளவு தூரம் ரெடினாவில் நகரும். ஆனால் 200 அடி தூரத்தில் உள்ள பொருள் அதே அளவில் நகராது. இந்த முறையில் ஒரு கண்ணை மூடிக் கொண்டும் நாம் பொருளின் தூரத்தை கணக்கிடலாம்.
ஸ்டிரியோப்சிஸ் மூலம் தூரத்தை அறிதல்
மற்றொரு முறை பைனாகுலர் விஷன் ஆகும். ஒரு கண் மற்றொரு கண்ணின் ஒரு பக்கத்தை விட 2 அங்குலங்கள் அதிகமாக உள்லது. எனவே இரண்டு ரெடினாக்களிலும் விழும்  பிம்பம் மாறுபடலாம். உதாரணமாக, மூக்கிற்கு 1 அங்குலம் முன்னால் உள்ள ஒரு பொருளை பார்க்கும் போது அதன் பிம்பம் இடது கண்ணின் இடது பக்கத்திலும் வலது கண்ணின் வலது பக்கத்திலும் விழும் (படத்தை பார்க்க). ஆனால் 20 அடி தூரத்திலுள்ள ஒரு சிறிய பொருளின் பிம்பம் ரெடினாவின் நடுப்பகுயில் விழும். இதன் மூலமாக ஒரு இரு பொருள்களை சார்பு படுத்தி அவற்றிற்கு இடையே உள்ள தூரத்தை அறிகிறார். ஆனால் ஸ்டிரியோப்சிஸ் 50 முதல் 200 அடிக்கு மேல் உதவாது.


No comments:

Post a Comment