Thursday, July 29, 2010

அடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்

ஏதாவது தொழிற்நுட்ப பதிவுகள் போடலாம் என்று இந்த பிரிவை ஆரம்பித்து 4 பதிவு போட்டுட்டேன். அப்புறம் என்ன பண்ணலாம்னு தெரியலை, நிறைய பேர் புதிய வெப்சைட்டுகள், அப்புறம் ஃபோட்டோஷாப்  மற்ற விஷயங்கள்னு நிறைய மிகச்சிறப்பா எழுதிகொண்டு வராங்க.

சரி புதுசா எதாவது எழுதனும்னு யோசிச்சேன். எனக்கு கொஞ்சம் ஃபிளாஷும் 3D அனிமேஷனும் தெரியும் (எல்லாம் சொந்தமா கற்றுக் கொண்டது). மேலும் தமிழில் இதுவரை யாரும் இவற்றை பற்றி எழுதியது போல் தெரியவில்லை. அதனால் நான் இனிமேல் இங்கே ஃபிளாஷை பற்றி நான் கற்றுக் கொண்டவை, படித்தவை பார்த்தவைகளை பற்றி தமிழில்  எழுதப் போகிறேன்.


தங்களுக்கு உபயோகமாக இருந்தால் மிகவும் சந்தோசப்படுவேன். பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.

இது வரை என் பிளாகிற்கு வந்து விமர்சனம் அளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி!

நான் இங்கே தரப்போகும் அனைத்து விஷயங்களுமே அடோப் ஃபிளாஷ் CS3யில் செய்யப்படுபவை. எனவே உங்களிடம் சிஸ் 3 இருந்தால் நல்லது. இல்லையென்றால் எந்த வெர்சனாக இருந்தாலும் பிரச்சினையில்லை. உங்களுக்கு பிளாஷ் கற்றுக் கொள்ள ஆர்வமிருந்து உங்களிடம் ஃபிளாஷ் மென்பொருள் இல்லையென்றால் இதோ இங்கே(112mb) கிளிக் செய்து அடோப் சிஸ் 3 ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இது ஒரு போர்டபிள் மென்பொருள். எனவே இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. மேலும் தயார் செய்த மூவிக்களை பார்க்க அடோப் பிளாஷ் பிளேயர் தேவை எனவே அதை இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ளவும்.

முதல் பதிவில் ஃபிளாஷில் கிழமை, தேதி வருடத்தை எப்படி உருவாக்குவது என பார்ப்போம்.


முதலில் அடோப் பிளாஷ் சிஎஸ் 3ஐ திறக்கவும். அதில் Create New என்பதில் Flash File (ActionScript 2.0)  என்பதை கிளிக் செய்யவும்.
இப்படி ஒரு விண்டோ திறக்கும்.


அதில் Text Toolஐ கிளிக் செய்து வெள்ளை விண்டோவில் சதுரம்போல் இழுத்து விடவும். அது இப்படி இருக்கும்.
பிறகு அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் செட்டிங்குகளை அமைக்கவும்.
1. Dynamic Text 2. Font உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கலாம்.
3. Var: என்ற இடத்தில் theDate என்று டைப் செய்யவும்.
4. உங்களுக்கு விருப்பமான நிறம், ஃபோண்ட் சைஸ் போன்றவற்றை கொடுக்கலாம்.

அதை தேர்ந்தெடுத்துக் கொண்டு, F8ஐ அழுத்தி அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். அதில் Movie Clip என்பதை தேர்ந்தெடுக்கவும். இல்லையென்றால் Modify என்பதில் convert to symbol என்பதை கிளிக் செய்து Movie Clipஐ கிளிக் செய்யவும்.

பிறகு நடுவில் நீங்கள் இழுத்து விட்ட செவ்வகத்தை ரைட் கிளிக் செய்து Actions என்பதை தேர்ந்தெடுக்கவும். அங்கே உள்ள காலியிடத்தில் கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.

onClipEvent (load){
weekdays = ["Sunday","Monday","Tuesday",
"Wednesday","Thursday","Friday","Saturday"];
months = ["Jan","Feb","Mar","Apr","May","Jun","Jul",
"Aug", "Sep", "Oct","Nov","Dec"];
}
onClipEvent (enterFrame){
myDate = new Date();
tDay = weekdays[myDate.getDay()];
tMonth = months[myDate.getMonth()];
tDate = myDate.getDate();
tYear = myDate.getFullYear();
theDate = tDay+", "+ tMonth+" "+tDate+", "+tYear;
}

பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
பிறகு இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

இதை தமிழில் செய்ய Font என்பதில் Latha என்பதை தேர்ந்தெடுக்கவும். கீழ்காணும் ஆக்சன்ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
onClipEvent (load){
weekdays = ["ஞாயிறு","திங்கள்","செவ்வாய்",
"புதன்","வியாழன்","வெள்ளி","சனி"];
months = ["ஜனவரி","பிப்ரவரி","மார்ச்","ஏப்ரல்","மே","ஜூன்","ஜூலை",
"ஆகஸ்டு", "செப்டம்பர்", "அக்டோபர்","நவம்பர்","டிசம்பர்"];
}
onClipEvent (enterFrame){
myDate = new Date();
tDay = weekdays[myDate.getDay()];
tMonth = months[myDate.getMonth()];
tDate = myDate.getDate();
tYear = myDate.getFullYear();
theDate = tDay+", "+ tMonth+" "+tDate+", "+tYear;
}


DEMO

21 comments:

 1. Me the first!Very useful and informative post.

  ReplyDelete
 2. //Thenral said...
  Me the first!Very useful and informative post.//
  மிக்க நன்றி!

  ReplyDelete
 3. Thanks for giving flash cs3 portable. i ve searched for that many sites.now i find that it. thanks for u.

  ReplyDelete
 4. //பொன்மலர் said... //
  நன்றி!

  ReplyDelete
 5. thanks friend.. very nice... will download this in my office tomorrow. great resource ....thanks thanks thanks

  ReplyDelete
 6. //யூர்கன் க்ருகியர் said... //
  மிக்க நன்றி!

  ReplyDelete
 7. Very very thankssssssssssssssss Mr. SK

  ReplyDelete
 8. Thank you for coming and sharing thoughts.

  ReplyDelete
 9. நண்பா ,, வணக்கம் ..

  //பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.//

  இதை செய்யும் பொழுது வெறும் வெள்ளை கட்டம் மட்டும் பாப் அப் ஆகிறது.

  மேலும் என்னுடைய கணினியில் swf கோப்பாக சேமித்த பின்னரும் என்னால் பார்க்க இயலவில்லை.(seems Windows is not recognising the file !)

  என் கணினியில் "Adope Flash Player 10 Active X" நிறுவி உள்ளேன்.

  என்னவாய் இருக்கும் ?

  நன்றி நண்பா ..

  ReplyDelete
 10. நண்பரே

  வெள்ளை கட்டம் மட்டும் தெரிந்தால் ஆக்சன்ஸ்கிரிப்டில் ஏதேனும் விட்டு போயிருக்கலாம்.

  swf ஃபைல்களை பிரவுசர் மூலமே பார்க்க முடியும். எனவே அதை ரைட்கிளிக் செய்து பிராப்பர்டியை கிளிக் செய்து அதில் opens with என்பதில் changeஐ கிளிக் செய்து பிரவுசர்(firefox or chrome) பெயரை தேர்ந்தெடுக்கவும்.

  ReplyDelete
 11. //வெள்ளை கட்டம் மட்டும் தெரிந்தால் ஆக்சன்ஸ்கிரிப்டில் ஏதேனும் விட்டு போயிருக்கலாம்/

  இப்பொழுது வேலை செய்கிறது நண்பரே  var என்ற இடத்தில theDate என்பதற்கு பதிலாக the Date என்று உள்ளீடு செய்து விட்டேன் ..
  மேலதிக பாடங்களை படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது
  மிக்க நன்றி

  ReplyDelete
 12. //யூர்கன் க்ருகியர் said... //
  நானும் உங்களைப் போல தானக கற்றுக் கொண்டவன்தான். அதனால் ஆர்வமிருந்தால் எளிதில் கைகூடும்.

  ReplyDelete
 13. ரொம்ப நாளா பிளாஸ் கத்துக்கனும் என்று ஆசை. ஒரு குரு கிடைத்துவிட்டார். இனி உங்களுக்கு மாணவர்களின் பட்டியலில் என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

  நன்றி ஆசானே.

  http://sagotharan.wordpress.com/

  ReplyDelete
 14. //ஜெகதீஸ்வரன். said...//
  என்ன சார் நீங்க! என்னை போய் குருன்னு சொல்லிகிட்டு! இந்த பிளாக் உங்கள்க்கு பயன்பட்ட எனக்கு அது போதும்!

  ReplyDelete
 15. சொல்லிக் கொடுக்கறவர் குருதான். அது உலக நியதி.

  ReplyDelete
 16. நண்பர்களிடம் இணைய இணைப்பினை தந்திருக்கிறேன். பார்த்துவிட்டு கருத்துகூறுவதாக சொல்லியிருக்கின்றார்கள்.

  ReplyDelete
 17. //ஜெகதீஸ்வரன். said... //
  இதை நான் சொல்லிக் கொடுப்பதாக நினைக்கவில்லை. நண்பர்களுக்கு தெரிவிக்கின்றேன் அவ்வளவுதான்!

  மற்ற நண்பர்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி!

  ReplyDelete
 18. //இசைப்பிரியன் said...//
  நன்றி நண்பரே!

  ReplyDelete
 19. நான் இன்றுதான் உங்களின் தளம் பார்க்க நேர்ந்தது இவ்வளவு காலமும் பார்க்க முடியவில்லை என்பது மிக பெரும் கவலையாக இருந்தாலும் இன்றாவது இந்த அறிய வாய்ப்பு பார்த்து கற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது.. மிக மிக நன்றி நண்பரே... இந்த மிக அறிய பணிக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது.. எனவே மிக நன்றி..

  ReplyDelete
 20. //முஹம்மது மபாஸ் said... //
  மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete