Saturday, July 31, 2010

அடோப் ஃபிளாஷ் (6)- Zoom effect

முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.
உங்களுக்கு தேவையான வடிவத்தை வரையவும்.

வடிவத்தை ரைட் கிளிக் செய்து Convert to Symbol என்பதை கிளிக் செய்து அதில் Graphic என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது 20வது பிரேமில் ரைட்கிளிக் Insert Keyframe என்பதன் மூலம் கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.

மீண்டும் 1வது கீபிரேமுக்கு செல்லவும். பின் வடிவத்தின் அளவை தேவையான அளவு குறைக்கவும்.

மீண்டும் 20 வது பிரேமுக்குச் சென்று வடிவத்தை கிளிக் செய்து அதன் நிறத்தில் Alpha அளவை 20%க்கு குறைக்கவும்.

பிறகு 1 முதல் 20 வரை உள்ள பிரேமில் எங்காவது ரைட் கிளிக் செய்து Create Motion Tween என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும். இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

Demo:

No comments:

Post a Comment