Friday, July 30, 2010

கடைசி வாய்ப்பு - 4 - எஸ்.கே


”நீ எனக்காக ஒரு பொருளை திருடிகிட்டு வரணும்”

ஜான் இதை எதிர்பார்த்திருந்தான்.

எதை திருட வேண்டும் என்பது போல் அவன் பார்த்தான்.
பாஸ்கர் பேச ஆரம்பித்தார்.

”நீ எதை எப்போ திருடனும்கிறதை நான் பிறகு சொல்றேன். அதுக்கு முன்னாடி நீ என்னைப் பற்றி நல்லாத் தெரிஞ்சிக்கோ.”
”இப்போ ஒருத்தர் வருவார். அவர் வந்த பிறகு நான் எல்லாத்தையும் சொல்றேன்.” என்றார் பாஸ்கர்.


ஜான் யோசித்தான். இதுநாள்வரை என்ன செய்வது எங்கே செல்வது என தெரியாமல் திக்கு தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தவனை ஒருவர் எதற்காகவோ கூப்பிடுகிறார். இந்த தனக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக ஜான் நினைத்தான்.

கதவை யாரோ தட்டினார்கள். பாஸ்கர் உள்ள வரச்சொன்னார். ஒருவர் கால் தாங்கி நடந்தபடி வந்தார்.

”உட்கார் சரவணா” என அவரிடம் சொன்னார். சரவணன் ஜானை புதிதாக பார்த்தார். ஜானுக்கு அவரை பார்த்தவுடன் சிறிது பயம்தான் ஏற்பட்டது. அவர் முகத்திலேயே கொஞ்சம் முரட்டுத்தனம் இருந்தது.

”சரவணா இவன்தான் நான் சொன்ன பையன். பேர் ஜான்” “ஜான் இவர் பேரு சரவணன் என்னோட ஒரே நெருங்கிய நண்பன்”

சரவணன் ஜானை நன்றாக பார்த்தார். “பாஸ் நீ எடுத்த முடிவு சரிதானா, இவனப் பத்தி நமக்கு முன்ன பின்ன தெரியாது. நம்ம வேலைக்கு இவன் சரிப்பட்டு வருவான ஒருவேளை மாட்டிகிட்டா நமக்கு ஏதாவது பிரச்சினை வந்தா என்ன செய்யறது”

”சரவணா இவனும் நம்மை போல யாருமில்லாதவன். இவன் நல்ல திருடுவான் நான் நம்புறேன். ஏன்னா என்கிட்டேயே பஸ்ல திருடுனது எனக்கே தெரியலை. மத்தபடி விசுவாசத்தை காண்பிக்கறது இவன் கையிலதான் இருக்கு.”

ஜான் இருவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான். “சார் எனக்குனு யாருமில்லை. எந்த நிர்பந்தமுமில்லை. இதுநாள் வரை எப்படியோ இருந்தேன். இனி நீங்க சொல்றபடி நடக்கிறேன் சார். நீங்க சொல்ற வேலையில நான் மாட்டிகிட்டா கூட நிச்சயம் உங்களை காட்டிக் குடுக்க மாட்டேன்” ஜான் உறுதியாக சொன்னான்.

சரவணனும் பாஸ்கரும் அவனை நம்பிக்கையுடன் பார்த்தனர்.

No comments:

Post a Comment