பீட்டரும் ரோஸியும்
எழுதியவர்: எஸ். கே
நாங்கள் மேரியின் வீட்டில் குடியிருந்தோம். எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரிதுதான். ஆனால் எங்களுக்கு சாப்பாட்டு எந்த கஷ்டமும் இருந்ததில்லை. நாங்கள் மேரியின் வீட்டில் மிகவும் சந்தோசமாகத்தான் இருந்தோம், பீட்டர் வரும் வரை.
பீட்டர் வந்த நாள் முதல் எங்களுக்கு அவனை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவனுக்கும் எங்களை பிடிக்கவில்லை. அவன் மிகவும் முரட்டுத்தனமானவன். அவன் முரட்டுத்தனம் நாளடைவில் எங்களை பயமுறுத்தியது. இப்பொழுதெல்லாம் அவன் வீட்டில் இருக்கும்போது நாங்கள் வெளியே செல்வதில்லை.
பீட்டர் எப்போது அந்த வீட்டை விட்டு செல்வான்? அவன் செல்வது நடக்காது ஏனென்றால் மேரிக்கு பீட்டரை மிகவும் பிடிக்கும். ஆனால் பீட்டருக்கோ ரோஸியைத் தான் மிகவும் பிடிக்கும்.
ரோஸி எதிர்வீட்டில் இருந்தாள். மிகவும் அழகானவள். அவளும் பீட்டரை காதலித்தாள். பீட்டரும் அவளும் காதலிப்பது எனக்கு எப்படி தெரியுமென்றால்....
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. அது யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை திருட்டுத்தன்மாக சாப்பிடுவது. ஒரு நாள் இரவு அப்படித்தான் யாருக்கும் தெரியாமல் சமையலைறைக்கு சாப்பிடச் சென்றேன். அப்பொழுதுதான் சமையலறை ஜன்னல் வழியாக அந்த காட்சியை பார்த்தேன்.
பீட்டரும் ரோஸியும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். மிகவும், மிகவும், மிகவும்.....
ஒரு நாள் அவர்களின் காதல் விளையாட்டு வெளியுலகத்திற்கு தெரிந்தது. ரோஸி கர்ப்பமானாள்.
காலங்கள் உருண்டோடின. பீட்டர்-ரோஸி காதலிற்கு பரிசாக குழந்தைகள் பிறந்தன. ஒன்றல்ல நான்கு! அவர்கள் காதல் மிகவும் வலிமையானது போல!
அதுவரை நன்றாக இருந்த வாழ்க்கை அன்று முடிவுக்கு வந்தது, குழந்தை பிறந்த சில நாளிலேயே ரோஸி ஏதோ ஒரு நோயால் இறந்து போனாள்.
அதுநாள் வரை இருந்த பீட்டர் மாறிப் போனான். ரோஸி இறந்த சோகம் அவனை வாட்டிற்று. ஒரு நாள் அவன் ரோட்டில் பரிதாபமாக ஒரு சாலை விபத்தில் இறந்தான்....
பீட்டர்-ரோஸியின் காதல் வாரிசுகள் இன்று அநாதையாய்...
ரோஸியின் வீட்டார் அந்த வாரிசுகளை வளர்க்க விரும்பவில்லை. ஆனால் மேரி விரும்பினாள். மேரி தன் தந்தை தாமஸிடம் சொன்னாள். அவர்தான் தன் மகளின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டவராயிற்றே. நாளை முதல் அந்த வாரிசுகள் இதோ இங்கே தாமஸிடம் வீட்டில் வளரப்போகின்றன.
மேரி சந்தோசமாக இருந்தாள். ஆனால் நாங்கள் பயப்பட்டோம்....
சரி, பீட்டராய் இருந்தால் என்ன? ரோஸியாய் இருந்தால் என்ன? எங்களைப் போன்ற எலிகளுக்கு எல்லாப் பூனைகளை கண்டாலும் பயம்தான். சமாளிப்போம் என்று எண்ணியபடியே யாருக்கும் தெரியாமல் சமையலறைக்குள் நுழைந்தேன்.
வாவ்!! ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருந்தது!!
ReplyDelete//கோவை ஆவி said... //
ReplyDeleteஎன் கதைக்கு முதல் கமெண்ட் உங்களுடையதுதான் மிக்க நன்றி!
உங்கள் கதை அருமையாக இருந்தது.
ReplyDelete