Saturday, July 31, 2010
கனவுகள் - அறிமுகம்
வணக்கம்
என் பிளாகை கண்டு வரும் அனைவருக்கும் நன்றி!
இனிவரும் வரும் பதிவுகள் கனவுகளை பற்றி உளவியல் ரீதியாகவும் சாதாரண மக்களின் பார்வையிலிருந்தும் உலகம் முழுவதுள்ள கருத்துக்களையும் ஆய்வுகளையும் பற்றி தொடராக எழுதப் போகிறேன்.
கனவுகள் நம் வாழ்வில் இடம் பிடிக்க தவறியதே இல்லை. சிறுவயது முதல் முதிர்வயது வரை அனைவருக்கும் கனவுகள் வரும். கனவிலும் நல்ல கனவு கெட்ட கனவு என்று உண்டு. கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம்.
கனவைப் பற்றி நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்?
கனவு காண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
கனவுகள் பலிக்குமா?
கனவுகள் என்பது வெறும் கற்பனையா?
கனவுகளை திரும்ப நினைவுபடுத்தி பார்க்க முடியுமா?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்த தொடரில் உங்களுக்கு விடை கிடைக்கும்.
தொடரை தொடங்கும் முன் ஒரு சம்பவத்தை பார்ப்போம்.
ஏப்ரல் 1865ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் எழுதியது.
பத்து நாட்களுக்கு முன் மிகவும் முக்கியமான வேலைகளின் காரணமாக, நான் மிகவும் தாமதமாக படுக்கைக்கு சென்றேன். மிகுந்த களைப்பின் காரணமாக எனக்கு சரியாக உடனே தூங்கி விட்டேன். அன்று எனக்கு ஒரு கனவு வந்தது.
அங்கே மரண அமைதி இருந்தது. பிறகு நான் விசும்பல்களை கேட்டேன், பலர் அழுது கொண்டிருந்தனர். நான் என் படுக்கையிலிருந்து எழுந்து படிகளில் கீழே இறங்கி வந்தேன் என நினைக்கிறேன். அங்கே அதே அழுகையால் அமைதி கலைந்தது. ஆனால் அழுபவர்களை காண முடியவில்லை. நான் ஒவ்வொரு அறையாக சென்றேன்; எங்கும் யாருமே தென்படவில்லை. எல்லா அறையிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எல்லா பொருட்களும் எனக்கு பழக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் துக்கம் கொண்டாடும் அழுவும் நபர்கள் எங்கே? எனக்கு குழப்பமாகவும் அச்சமாகவும் இருந்தது. இதற்கு என்ன அர்த்தம்? நான் பார்த்த சூழ்நிலைகள் மிகவும் விசித்திரமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. எனக்கு அப்படித்தான் இருந்தது கிழக்குப் பக்க அறைக்கு செல்லும் வரை. நான் அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கே நான் ஒரு ஆச்சரியத்தை கண்டேன். எனக்கு முன்னால் ஒரு சவப்பெட்டியை ஏற்றிச் செல்லும் வண்டி இருந்தது. அதன் மேல் ஈமச்சடங்களுக்கான உடையணியப்பட்ட ஒரு பிணம் இருந்தது. அதைச் சுற்றி படைவீரர்கள் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தணர். அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் பிணத்தை பார்த்து அழுது கொண்டிருந்தனர். அந்த பிணத்தின் முகம் மூடப்பட்டிருந்தது. நான் ஒரு படைவீரனிடம் கேட்டேன் “யார் வெள்ளை மாளிகையில் இறந்து விட்டார்?” படைவீரன் பதில் சொன்னான் “ஜனாதிபதி”; “அவர் ஒருவனால் கொல்லப்பட்டார்”. பிறகு கூட்டத்திலிருந்து பெரும் அழுகை ஏற்பட்டது. நான் விழித்துக் கொண்டேன். நான் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. அது வெறும் கனவுதான் என்றபோதிலும், எனக்கு இதுவரை அதுதான் விநோதமாக தொல்லை தந்தது.
ஏப்ரல் 14 ஆப்ரகாம் லிங்கன் ஒருவனால் சுடப்பட்டார். அவருடைய உடல் மக்களின் பார்வைக்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பக்க அறையில் கிடத்தப்பட்டிருந்தது.
(கனவுகள் தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
ஆச்சிரியமாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி தங்கள் வரவேற்பை தொடர்ந்து இத்தொடரை தொடர்கிறேன்!
ReplyDeleteI too heard about HIS DREAM about his own DEATH.
ReplyDeleteதகவலுக்கு நன்றி!
ReplyDeleteகனவு 1 படித்து விட்டேன். இந்தக் கனவு கண்டு சரியாக எத்தனையாவது நாள் சுடப்பட்டார் என்று தெரிந்தால் நலம். இதனை எழுதியவுடனேயா அல்லது பிறகா என்று அறிய ஆவல்.
ReplyDelete//vasan said...//
ReplyDeleteஆமாம்! இது கொஞ்சம் பிரபலமான செய்திதான்!
//பழமைபேசி said...//
நன்றி சார்!
//அரபுத்தமிழன் said...//
கனவு கண்டு சுமார் 2 வாரங்கள் கழித்து அவர் சுடப்பட்டார்!