Saturday, July 31, 2010

கடைசி வாய்ப்பு - 7

இப்போது ரவிச்சந்திர குமார் வாசலை நோக்கி போனார். பின் ஒருவருடன் வந்தார்.

இருவரும் ஒரு மேஜையின் அருகில் உட்கார்ந்தனர். ஜானுக்கு அவர்கள் உட்கார்ந்திருந்த இடம் சரியாக தெரியவில்லை. அவன் கொஞ்சம் நகர்ந்தான். 

அந்த ரிஷப்ஷன் ஹால் வழக்கமானதை போல இல்லை. மேடையில் மணமக்கள் இருந்தனர். ஆனால் இங்கே ஹோட்டல் போல மேஜைகளை போட்டிருந்தனர். ஆங்காங்கே ஒரு சில பேர் இருந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஜானுக்கு குழப்பமாக இருந்தது. ஒரு பணக்காரரின் வீட்டுத் திருமணத்திற்கு இவ்வளவுதான் கூட்டமா?

சரி நாம் நம்முடைய வேலையை பார்ப்போம். ஒரு குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு ரவிச்சந்திர குமாரை பார்க்கும் வகையில் ஒரு மேஜையில் உட்கார்ந்தான். ஆனால் அவன் துரதிர்ஷ்டம் அங்கே அவனுக்கு எதிர் நாற்காலியில் ஒருவன் ஏற்கனவே உட்கார்ந்திருந்தான்.
சரி. அவனுடம் பேசுவோம் என ஜான் அங்கே சென்று, பிரதர் நான் இங்கே உட்காரலாமா என கேட்க நினைத்தான். பிறகு கூடாது என்று சொல்லிவிட்டால், அதனால் அவனே போய் உட்கார்ந்தான்.

அந்த மனிதன் ஜானை பார்த்தான். பார்த்த உடனேயே அவன் கண்கள் விரிந்தன. மூக்கு விடைத்தன. மிகவும் கோபப்படுவதாய் தோன்றியது ஜானுக்கு. என்ன இது சும்மா உட்காரத்தானே செய்தேன். இதற்கு எதற்கு கோபம்.

ஆனால் அவன் ஜானிடம் எதுவும் பேசவில்லை.

தன் கையில் குடிப்பதற்காக வைத்திருந்த காப்பியை குடிக்கலாமென வாய்க்கு கொண்டு போனவன் அதை செய்யாமல் வைத்து விட்டான்.

ஜானுக்கு அவன் செய்கைகள் விசித்திரமாக இருந்தாலும். தன் வேலை கவனமாக செய்துகொண்டிருந்தான்.

ரவிச்சந்திர குமார் இப்போது ஒரு குண்டான நபரிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தார். அவர் ரவிச்சந்திரக் குமாரிடம் ஒரு பெட்டியை தந்தார்.

அப்போது நேரம் 8 மணி.

No comments:

Post a Comment