Friday, July 30, 2010

கடைசி வாய்ப்பு - 3 - எஸ்.கே


ஜான் சாப்பிட்டு முடித்தான். அவன் சாப்பிடும் வரை அவர் அவன் எதிரிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அவரைப் பற்றி அவர் அவனிடம் ஒன்றுமே சொல்லவில்லை வீட்டுக்கு கூட்டி வந்தார் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.
அதுவரை அமைதியாக இருந்தவர். பேச ஆரம்பித்தார். “என் பேர் பாஸ்கர். சுருக்கமாக பாஸ் என்று கூப்பிடுவார்கள். இப்போதைக்கு எனக்கு யாருமே இல்லை”
ஜானுக்கு புரியவில்லை. எதற்காக இவர் நம்மை கூட்டி வந்தார் தன்னைப் பற்றி சொல்கிறார்.


”உன்னைப் பற்றிச் சொல்” என்றார் பாஸ்கர்.
ஜானுக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது. தன்னைப் போன்ற ஒரு திருடனை இப்படி ஒரு பெரிய மனிதர் ஏன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்து விபரம் கேட்கிறார்.
”சொல்லுப்பா உன் குடும்பம் பற்றி சொல்”
ஜான் தன்னைப் பற்றி சொல்ல ஆரம்பித்தான்.


என் பெயர் ஜான். திருச்சி அருகே ஒரு சிறிய கிராமத்தில் நான் பிறந்தேன். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்தே என் அம்மா அப்பா இருவரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். எதற்காக சண்டை போடுகிறார்கள் என்பது எனக்கு என்றுமே புரிந்ததில்லை.

எனக்கு பத்து வயது இருக்கும்போது வழக்கம்போல என் அம்மா அப்பா சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அப்போது என் அப்பாவிடம் எதையோ கேட்டேன். அவர் என்னை கோபமாக திட்டினார்.

நான் தன் அம்மாவிடம் கேட்டான். அவரோ அவனிடம் மொத்த கோபத்தையும் காண்பித்து அடித்து விட்டார்கள். அவர்கள் இருவருமே தினமும் வேலைக்கு போகிறவர்கள். அந்த சண்டைக்கு பிறகு வேலைக்கு சென்று விட்டார்கள். ஜானுக்கு அழுகையாக வந்தது. பள்ளிக்கு செல்லாமல் ஊருக்கு வெளியே உள்ள ஒரு மண்டபத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன்.

மாலை. வீட்டிற்கு போக பயமாய் இருந்தது. மீண்டும் அடிப்பார்களோ! பசித்தது. வீட்டிற்கு சென்றேன். வீட்டில் யாரும் இல்லை. பக்கத்து வீட்டிலிருந்து ஒருவர் வந்தார் உங்கப்பா உங்கம்மாவ கொன்னுட்டாருடா போலீஸ் வரை புடிச்சுட்டு போயிருச்சு என்றார்.
எனக்கு அழுகையாய் வந்தது. எங்கே போவது என்ன செய்வது என்றே தெரியவில்லை. எங்கெங்கோ ஓடினேன். சாப்பிடவும் தங்குவதற்கும் மிகவும் கஷ்டப்பட்டேன். ஏதேதோ ஊருக்கெல்லாம் சென்றேன். இதோ இங்கே சென்னைக்கு வந்து ஏழெட்டு வருடம் ஆயிருக்கும். சின்ன சின்ன வேலை செய்வேன். அப்பப்ப இப்படி ஏதாவது திருடுவேன். 
  


ஜான் தன் வாழ்க்கை பற்றி ஏதேதோ கூறினான். பாஸ்கர் பொறுமையாக் கேட்டார்.


”நீ நல்லா திருடுவியா”
ஜான் ஆச்சரியப்பட்டான். அவன் திருடுவதில் அவனுக்கே நம்பிக்கையில்லை. அவன் திருட்டுக்களில் பலமுறை அவனுக்கு தோல்வியே கிடைத்துள்ளது.


ஒரு வாரம் முன்பு கூட ஒரு பேருந்து நிலையத்தில் ஒருவர் தன்னிடம் உள்ள பணத்தை பற்றி போனில் பேசுவதை கேட்டான். அவர் அசந்த நேரம் பார்த்து வெடுக்கென அந்த பையை பறித்துக் கொண்டு ஓடினான். ஒரு திருப்பத்தில் எதிரே வந்த ஒருவன் மீது மோதி விட்டான். மோதியவன் முகத்தைக் கூட பார்க்கவில்லை. பணத்தை தேடினால் அது எங்கே விழுந்தது என்றே தெரியவில்லை. பின்னாலோ “பிடிங்க பிடிங்க” என்ற சத்தம் அவனுக்கு பயம் அதிகமாகி அந்த பணத்தை கூட எடுக்காமல் ஓடி விட்டான்.


இருந்தும் அவன் அவரிடம் தான் நன்றாக திருடுவதாகவே கூறினான்.


அவர் புன்னகைத்தார்.


ஜானுக்கு புரிந்தது அவர் தன் மூலம் எதையே எதிர்பார்க்கிறார்.

No comments:

Post a Comment