Tuesday, February 22, 2011

அடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect

முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும்.
100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.

மீண்டும் 1வது பிரேமை கிளிக் செய்து, சிம்பலை கிளிக் செய்யவும். பிறகு, கீழே பிராப்பர்ட்டி பேனலில் Filtersஐ கிளிக் செய்யவும். பின் +ஐ கிளிக் செய்து Blurஐ சேர்க்கவும். அந்த பூட்டு போன்று இருப்பதை கிளிக் செய்து விடவும். பின் Blur X: 49, Blur Y:73 என கொடுக்கவும்.



பிறகு மீண்டும் Filtersல்  +ஐ கிளிக் செய்து Adjust Colorஐ சேர்க்கவும். அதில், Brightness: -100, Contrast: 100, Hue: 0, Saturation: 0 என கொடுக்கவும்.


இப்போது 1 மற்றும் 100வது பிரேம்களுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.

புதிய லேயரை உருவாக்கவும்.

ஒரு பெரிய வட்டத்தை வரையவும். ஸ்டேஜை விட மிகப்பெரியதாக இருத்தல் நலம்.
பின் 100 வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். அந்த வட்டத்தை சிறியதாக்கவும். ஆனால் அது ஸ்டேஜை விட பெரியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அது ஸ்டேஜின் மையத்தில் இருக்கிறதா என சரி பார்க்கவும்.


பின் இப்போது 1 மற்றும் 100வது பிரேம்களுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create
shape tween என்பதை கிளிக் செய்யவும். அது ஸ்டேஜின் மையத்தில் இருக்கிறதா என சரி பார்க்கவும்.

கடைசியாக அந்த இரண்டாவது லேயரை ரைட்கிளிக் செய்து mask என்பதை தேர்ந்தெடுக்கவும்.


பிறகு உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
பிறகு இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO :







33 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பரே :)

    ReplyDelete
  3. ஆபிஸ்ல எதுவும் பார்க்க முடியல.. வீட்ல போய் பார்க்கிறேன்!

    ReplyDelete
  4. நீங்க சொன்ன தகவல் படி செஞ்சு பாத்தேன் சூப்பர்... நன்றி நண்பரே

    ReplyDelete
  5. மிக்க நன்றி ....
    ரொம்ப பயனுள்ள பகிர்வு .///

    ReplyDelete
  6. சூப்பர் எஃபெக்ட் நண்பா,நன்றி

    ReplyDelete
  7. //மாணவன் said...//
    மிக்க நன்றி நண்பரே!

    //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...//
    மிக்க நன்றி நண்பரே!

    //வைகை said...//
    மிக்க நன்றி நண்பரே!
    பார்த்துட்டு சொல்லுங்க!

    ReplyDelete
  8. //சங்கவி said...//
    ரொம்ப நன்றிங்க!

    //ரேவா said...//
    மிக்க நன்றிங்க! செஞ்சு பார்த்ததுக்கு ரொம்ப நன்றி!

    //அரசன் said...//
    மிக்க நன்றி!

    //|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...//
    ரொம்ப நன்றி நண்பரே!

    //கக்கு - மாணிக்கம் said...//
    ரொம்ப ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  9. விளக்கத்துக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  10. ஐ அண்ணனுக்கு இப்படி ஒரு ப்ளாக் இருக்குறது நியாபகத்துல தான் இருக்கும் போல . ஹி ஹி

    ReplyDelete
  11. ஒரு பதிவுக்காக எவ்வளவு சிரமப்படுகிறீர்கள் என்பது தெரிகிறது மிக்க நன்றி... தங்கள் பணி தொடரட்டும்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  12. மிக்க நன்றி.. பயனுள்ளதாக இருந்தது தங்களின் பதிவு

    ReplyDelete
  13. உங்களை நீங்கள் ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள்.உங்களை நான் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக தொடர்பு கொள்ள விரும்புகின்றேன். தயவு செய்து உங்களை தொடர்புகொள்ளும் தொடர்பு இலக்கம் அல்லது மின்னஞ்சல் முகவரியைத் தரமுடியுமா? நீங்கள் அதனை எனது தனிமடலிற்கும் அனுப்பி வைக்கலாம். அல்லது வாசகர்கள் யாரேனும் கூட மொழிபெயர்ப்பு அனுபவம் இருப்பின் உங்களை தொடர்புகொள்ளக்கூடிய விபரங்களை எனது மின்னஞ்சலிற்கு தெரிவிக்கவும். aleamtthw3@gmail.com
    நன்றி.

    ReplyDelete
  14. தெளிவாக விளக்குகிறீர்கள் நண்பரே..தங்களது பணியும்,சேவையும் இன்றைய தலைமுறைக்கு அளப்பரியது...அருமை

    ReplyDelete
  15. அருமையான விளக்கம் நன்றி

    ReplyDelete
  16. அருமையான விளக்கம். உடன செய்து பார்த்தேன். நன்றி சகோதரா

    ReplyDelete
  17. தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

    http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

    ReplyDelete
  18. போட்டோ ஷாப் தான் இன்னும் பழகல எப்படியாவது இங்க கத்துக்கனும்

    ReplyDelete
  19. மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.எனக்கு இவ்வாறான பதிவுகள் மிகவும் பிடிக்கும்.
    பதிவுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  20. பயனுள்ள பதிவுங்க..

    ReplyDelete
  21. தங்களின் 300 -வது Followers (300) ஆக இணைத்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  22. வணக்கம்! அடோப் பிளாஷ் கற்றுக் கொள்ள விரும்பி, தற்போதுதான் உங்களை கண்டு பிடித்தேன். உங்களின் பணி போற்றுதலுக்குரியது ... தங்களிடமிருந்து இது போன்று மேலும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks


    <a href="http://anushka-shetty.com>anushka shetty</a>

    ReplyDelete
  24. நல்ல பாடம்.பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  25. அன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்
    அல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை
    எனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்
    அனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்
    உங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்
    அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.

    பி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.
    சில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு
    பயப்படுகிறேன்!...
    http://www.kaleelsms.com/2011/07/blog-post_8960.html

    ReplyDelete
  26. வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

    காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு

    ReplyDelete
  27. மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.நன்றி !!!

    ReplyDelete