முதலில் ஒரு ஃபிளாஷ் ஃபைலை திறந்து கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். முதல் லேயரை லாக் செய்து கொள்ளவும். பிறகு புதிய லேயரை உருவாக்கவும். பிரஷ் டூலை தேர்ந்தெடுக்கவும். வெள்ளை நிறத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
பிரஷ்ஷால் வளைவு வளைவாக கிறுக்கவும். பிறகு அது அனைத்தையும் செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் Movieclip அளிக்கவும்.
அதை டபுள்கிளிக் செய்யவும். இப்போது இப்படி இருக்கும்.
அதை காபி செய்து அருகில் பேஸ்ட் செய்யவும். control +Aஐ கிளிக் செய்து அனைத்தையும் செலக்ட் செய்து மீண்டும் ரைட்கிளிக் செய்து அவற்றை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் Movieclip அளிக்கவும்.
100 வது பிரேமில் கிளிக் செய்து கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 1 முதல் 100க்கு இடையில் ரைட் கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.
மீண்டும் 100வது பிரேமை கிளிக் செய்யவும். இப்போது இரண்டு படமும் ஒன்றாக செலக்ட் ஆகும். அதை கிளிக் செய்து இடது பக்கமாக வலது முனை வலது ஓரம் வரும் வரை நன்றாக நகர்த்திக் கொள்ளவும்.
scene 1ஐ கிளிக் செய்யவும். இப்போது control + enterஐ கிளிக் செய்தால் இப்படி இருக்கும்.
சிம்பலை கிளிக் செய்து, கீழே filter பேனலை கிளிக் செய்து + ஐ கிளிக் செய்து Blurஐ சேர்க்கவும். Blur அளவாக 60-80க்குள் கொடுக்கலாம். பிறகு properties பேனலை கிளிக் செய்து colorல் Alphaவின் அளவாக 70-90க்குள் கொடுக்கவும். தேவைப்பட்டால் transform tool மூலம் அளவை மாற்றிக்கொள்ளலாம்.
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO:
புதியவர்களுக்கும் புரியும்படி பயனுள்ள பதிவுகளை தரும் உங்களுக்கு நன்றிகள்.ஒரு சின்ன கோரிக்கை
ReplyDelete(நேரம்மிருந்தால்)ஃபிளாஷ் பாடங்களை வீடியோயோவாக தந்தால் இன்னும் எளிமையாக பயனுள்ளதாக இருக்கும் நன்றி நண்பரே.....
//Thomas Ruban said... //
ReplyDeleteஎனக்கும் வீடியோ தர விருப்பம்தான். ஆனால் என்னிடம் உள்ள ஹெட்போன் சிஸ்டம் சரியில்லை. அதனால் ஒலியில்லாத விடீயோக்களைதான் எடுக்க முடியும்.
இருப்பினும் அடுத்ததாக 3டி அனிமேஷன் டுடோரியல் ஆரம்பிக்கும்போது அதை வீடியோவாகவே தருவேன்.
//அடுத்ததாக 3டி அனிமேஷன் டுடோரியல் ஆரம்பிக்கும்போது அதை வீடியோவாகவே தருவேன்.//
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே....
கலக்கிறிங்க பாஸ் பதிவுகள் அனைத்தும் சுப்பர் தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDelete//யாழ் பறவை said... //
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!