Monday, September 27, 2010

அடோப் ஃபிளாஷ் (47) - Ink outline effect

Ink outline எஃபக்ட் செய்ய ஒரு புகைப்படம் மற்றும் அந்த புகைப்படத்தில் ink outline செய்யப்பட்ட மற்றொரு புகைப்படம் தேவை. இந்த எஃபக்டை போட்டோஷாப்பில் செய்யலாம்.

உங்கள் படத்தை போட்டோஷாப்பில் எடுத்துக் கொள்ளவும். பிறகு filters->Brush Strokes -> Ink Outlines என்பதை கிளிக் செய்தால் போதும். அதில் Stroke length, Dark intensity, Light Intensity ஆகியவற்றை விருப்பம்போல் அமைத்துக் கொள்ளவும். பிறகு okஐ அழுத்தி படத்தை வேறு பெயரில் சேமிக்கவும்.

ஃபிளாஷில் சாதாரண படம் மற்றும் எஃபக்ட் உள்ள படம் இரண்டையும் லைப்ரரியில் ஓபன் செய்து கொள்ளவும்.

எஃபக்ட் உள்ள படத்தை முதல் பிரேமில் எடுத்துக் கொள்ளவும். 120வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்து கொள்ளவும்.


பிறகு புதிய லேயரை உருவாக்கவும். 75வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்து கொள்ளவும். அதில் சாதாரண படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Typeல் Movie clipஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

120வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். மீண்டும் 75வது பிரேம கிளிக் செய்யவும். பிறகு கீழே பிராப்பர்ட்டி பேனலில் colorல் Alphaவை தேர்ந்தெடுத்து 0%ஐ கொடுக்கவும். 75 மற்றும் 120வது பிரேமுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tweenஐ கிளிக் செய்யவும்.

பிரேம் ரேட் அதிகமாக இருக்கட்டும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:



9 comments:

  1. //அன்பரசன் said... //
    நன்றி நண்பா!

    ReplyDelete
  2. அப்படியே மங்கலா இருந்து தெளிஞ்சு வருது ..
    நல்லா இருக்கு ..!!

    ReplyDelete
  3. //ப.செல்வக்குமார் said...//
    நன்றி நண்பா!

    ReplyDelete
  4. It's nice to such effort to give these details. Good Work.

    ReplyDelete
  5. It's nice to see such effort to give these details. Good Work. (Corrected)

    ReplyDelete
  6. //தகவல் பொறுக்கி said... //
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. நல்லாயிருக்கு... நன்றி.

    ReplyDelete
  8. //Thomas Ruban said...//
    நன்றி நண்பா நன்றி!

    ReplyDelete