Wednesday, September 8, 2010

அடோப் ஃபிளாஷ் (35) - Simple & Easy photo effect

இந்த எஃபக்ட் ஸ்டைலான படங்களை உருவாக்கவும் அப்ஸ்ட்ராக்ட் படங்களுக்கும் பெரிதும் பயன்படும்.

முதலில் உங்களுக்கு தேவையான் படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும். பிறகு அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் Movie clipஐ தேர்ந்தெடுக்கவும்.

50வது பிரேம் வரை கீபிரேம்களை இன்சர்ட் செய்யவும்.


2வது பிரேம் கிளிக் செய்யவும். பிறகு படத்தை கிளிக் செய்யவும். கீழே Filters பேனலில் + ஐ கிளிக் செய்து, Adjust Colorஐ தேர்ந்தெடுக்கவும். அதில் Brightness: 29, Contrast: 40,  Saturation: -2,  Hue: 0 என அமைக்கவும். (இது உங்கள் விருப்பம் போல் அல்லது படத்திற்கு ஏற்றவாறு மாறுபடலாம்.


இப்படியே 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 ஆகிய பிரேம்களில் அமைக்கவும். (எளிய வழி: 2வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Copy Framesஐ கிளிக் செய்து பிறகு மேற்கண்ட பிரேம்களில் ரைட்கிளிக் செய்து Paste Framesஐ கிளிக் செய்யவும்).

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.


DEMO:





10 comments:

  1. மின்னல் தாரகைகள் அருமை..

    ReplyDelete
  2. //ருத்ர வீணை said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அருமையா இருக்குங்க :) :) அடோப் ப்ளாஷ் வீடியோ பாக்க மட்டும் தான் - நு நினைச்சிட்டு இருந்தேன்... நிறையா இருக்கே..

    போட்டோ ஷாப் இல்ல கிம்ப் பத்தி போட்டா படங்கள எப்படி எடிட் பண்றது-னு கொஞ்சம் கத்துப்பேங்க..

    ReplyDelete
  4. //kanagu said...//
    நன்றி!
    கிம்ப் பற்றி தனியாக ஒரு பதிவில் போடுகிறேன்.

    தங்களிடம் ஃபோட்டாஷாப் இல்லையென்றால் போர்டபிள் (அ) இன்ஸ்டால் வெர்சன் டவுன்லோட் செய்ய விரும்பினால் சொல்லவும் லிங்க் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  5. அட சாமி . கிட்ட போனா மின்னல் அடிக்குது ..!!

    ReplyDelete
  6. //ப.செல்வக்குமார் said...//
    கிட்ட போகலானும் அடிக்கலாம்!:-)

    ReplyDelete
  7. அருமை பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    நண்பரே உங்களுக்கு,உங்கள் குடும்பத்தினர்,நண்பர்கள் அணைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  8. //Thomas Ruban said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete
  9. அருமையா இருக்கு இன்னும் எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க

    ReplyDelete
  10. //தியாவின் பேனா said... //
    மிக்க நன்றி சார்!

    ReplyDelete