Thursday, September 2, 2010

மென்பொருட்கள் ஒரு புதிய பார்வை (5) - Flash catalyst, Flash Professional, Dreamweaver, Fireworks, Acrobat, Bridge, Device Central/ Adobe CS

Flash catalyst:
இதுவும் ஒரு டிசைன் சாஃப்ட்வேர்தான். இதன் முக்கிய சிறப்பு இதில் Photoshop, Illustrator, மற்றும் Fireworks பைல்களை நேரடியாக இம்போர்ட் செய்யலாம். மேலும் இதில் எடிட் செய்து கொண்டிருக்கும்போது Photoshop, அல்லது Illustratorக்கு சென்று டிசைன்களை எடிட் செய்யலாம். மேலும் இந்த சாஃப்ட்வேர் மூலம் சாதாரண டிசைன்களை UI componentகளாக மாற்றலாம். இது பிளாஷ் வெப்சைட்களை user intraction உடன் சிறப்பாக உருவாக்க சிறந்தது. மேலும் நாம் பிளாஷ் உருவாக்கும் behaviorகலை ஸ்கிரிப்ட்டை எழுதாமலே உருவாக்கலாம். அனிமேஷன்களை உருவாக்கலாம்.

DOWNLOAD: Adobe Flash Catalyst CS5 Portable (160 MB) part 1 part 2

Flash Professional 
இதைப் பற்றி என்ன சொல்வது. பிளாஷ் அனிமேஷன்கள் வெப்சைட்கள் மற்றும் விளம்பரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் கற்றுக் கொள்ள மிக எளிதானது. ஆக்சன்ஸ்கிரிப்ட்களை பயன்படுத்தும்போது சிலசமயங்களில் குழப்பமாக இருந்தாலும், சீக்கிரத்தில் புரிந்துகொள்ள முடியும்.
DOWNLOAD: Portable Flash Proffesional CS5 (250 MB)

Dreamweaver
இது இணையதளம் உருவாக்க பயன்படும் முக்கிய மென்பொருள். இந்த மென்பொருளையே வெப் பேஜ்களை உருவாக்க பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் WYSIWYG முறையிலும் HTML மூலமும் வெப் பேஜ்களை அமைக்கலாம். இதற்கும் தனி டுடோரியல் தேவை.
DOWNLOAD: Adobe Dreamweaver CS5 Portable (190 MB) part 1 part 2


Fireworks


இது மற்றொரு இணையதளம் உருவாக்க பயன்படும் மென்பொருள். ஆனால் இது வெப் பேஜ்களை உருவாக்குவதில்லை அதற்கு தேவையான கிராஃபிக்ஸ் மற்றும் படங்களை உருவாக்க பயன்படுகிறது. கிட்டதட்ட ஃபோட்டோஷாப்பை போன்றது.
DOWNLOAD: Adobe Fireworks CS5 Portable (154 MB)


Acrobat
இது PDF ஃபைல்களை படிக்கவும் எடிட் செய்யவும் பயன்படும் சாஃப்ட்வேர். இப்போது இதன் பயன்பாடு ஓரளவு குறைந்துள்ளது.
DOWNLOAD: Adobe Acrobat Reader 9.3 Portable (30 MB)

Bridge
அடோபின் மற்ற சாஃப்ட்வேர்களுடன் லிங்க் செய்யவும், படங்களை எடிட் செய்யவும், பயன்படுகிறது.
DOWNLOAD: Adobe Bridge CS5 (44 MB)

Device Central


இது உபரியாக கிடைக்கும் சாஃப்ட்வேர். இது மற்ற சாஃப்ட்வேர்களை எளிதாக பயன்படுத்த பயன்படும் ஒரு மென்பொருள். Flash Lite, bitmap, web, and video, மற்றும் mobile devicesகளின் contentகளை சரிபார்க்கவும் சோதிக்கவும் இது பயன்படுகிறது.
DOWNLOAD: Adobe Device Central SDK CS4 2.0.0: (4 MB)

மீதி அடுத்த பதிவில்.....

FruityLoops Studio
இசைகளை நாமே உருவாக்க. பலவித இசைக் கருவிகள் மற்றும் ரெக்கார்டிங் வசதிகள் உள்ள மென்பொருள். நாமே பல வித இசைக் கருவிகல் போல் நம் இசையை உருவாக்கி பாடலை பாடி பாடல்களை உருவாக்கலாம். (முயற்சி செய்து பாருங்கள். பொழுதுபோக்காக இருக்கும்)
Portable FruityLoops Studio Producer Edition XXL v8.0.2 (131 MB)

FlexiMusic Composer
இதுவும் இசை உருவாக்கும் சாஃப்ட்வேர்தான் ஆனால் குழந்தைகளுக்கானது. மிக எளிதாக இசைகளை உருவாக்கலாம். பெரியவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கும் மென்பொருள்.
FlexiMusic Composer (61 MB)

இன்று இசையமைப்பாளர் ஆவதற்கான சாஃப்ட்வேர் பார்த்தோமா? நாளை எழுத்தாளர் ஆவதற்கான சாஃப்ட்வேர் பார்ப்போம்!

14 comments:

  1. நல்ல பதிவுகள். எனக்கு பிளாஷில் பெரிதாக ஆர்வம இல்லாததால் உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டமிடவில்லை. தொடர்ந்து ரீடரில் வாசித்து வருகிறேன். சிறப்பாக இருக்கின்றன... தொடருங்கள்.

    ReplyDelete
  2. //Abarajithan said... //
    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  3. //இன்று இசையமைப்பாளர் ஆவதற்கான சாஃப்ட்வேர் பார்த்தோமா? நாளை எழுத்தாளர் ஆவதற்கான சாஃப்ட்வேர் பார்ப்போம்//

    சூப்பர்...!!!

    Firework -ன் முக்கிய வேலை, வெக்டார் க்ராஃபிஸ் உருவாக்குவது... இல்லையா?!

    ReplyDelete
  4. //Firework -ன் முக்கிய வேலை, வெக்டார் க்ராஃபிஸ் உருவாக்குவது... இல்லையா?! //
    ஆமாம். வெறும் படங்களை உருவாக்கவே இது. இதேபோல் அடோப் இல்லஸ்டிரேட்டரிலும் சிறப்பாக வெக்டார் கிராஃபிக்ஸை உருவாக்கலாம். (அப்புறம் ஏன் இரண்டையும் செஞ்சாங்கன்னே தெரியலை)

    ReplyDelete
  5. //அப்புறம் ஏன் இரண்டையும் செஞ்சாங்கன்னே தெரியலை//

    Fireworks - (பழைய) மேக்ரோமீடியாவின் ப்ராடக்ட்.

    ReplyDelete
  6. எவ்வளவு விசயங்களை தெரிந்து வைத்தீர்களே என்று உங்களை பார்த்து பொறாமையாகவும் இருக்கிறது
    வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  7. //ஹாலிவுட் பாலா said... //
    ஓ! தகவலுக்கு நன்றி!

    //Thomas Ruban said... //
    நண்பா இதில் பொறாமைப்பட ஒன்றுமில்லை. எல்லோருக்கும் விஷயங்கள் தெரியத்தான் இதை செய்கிறேன். இதானால் தாங்களும் தெரிந்து கொள்கிறீர்கள் இல்லையா! ஒவ்வொருவரிடமும் சில திறமைகள் நிச்சயம் இருக்கும். உங்களிடமும்!

    ReplyDelete
  8. Firework -ன் முக்கிய வேலை///
    ஐயா. ICON Create க்கு ரொம்ப தேவை... PNG டைப் பைல் செய்யலாம்... Web Site (Page இல்ல)பண்ணலாம்... Gif அனிமேஷன் செய்யலாம்... Slice செய்யலாம். Vector கிடையாது சார்... பிக்சார் ஸாரி(?!)பிக்ஸல் தான். Illustrator தான் Vector... :)

    ReplyDelete
  9. CS 5 Key எல்லாம் கரைக்டா உட்காருதா? நான் 4 தான். அதுக்கே RAM மூச்சி வாங்குது... CS 6 வந்தா வேற பிசி தான் வாங்கனும்... ம்ம்ம்... :(

    ReplyDelete
  10. // Sugumarje said...//
    தகவலுக்கு மிக்க நன்றி சார். நீங்க சொன்ன மாதிரி cs5க்கு RAM அதிகமாக தேவைப்படுகிறது. நான் பிளாஷ்லயே cs3தான் பயன்படுத்துறேன்.

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி சகோதரா...

    ReplyDelete
  12. //ம.தி.சுதா said...//
    மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. நன்றி சுகுமார்ஜி!! :)

    நான் CS5 தான் உபயோகிக்கிறேன்.

    ReplyDelete
  14. @சுகுமார்ஜி,

    //CS 5 Key எல்லாம் கரைக்டா உட்காருதா? நான் 4 தான். அதுக்கே RAM மூச்சி வாங்குது... CS 6 வந்தா வேற பிசி தான் வாங்கனும்... ம்ம்ம்... :(//

    சேம் ப்ளட் எனக்கும்.. என்னோட பழைய லேப்டாப் CS4க்கே பெருமூச்சு வாங்கும்.. நான் புது பீசி வாங்குனதே CS5 போடத்தான்.. இப்போ Photoshop, Illustrator, After Effects, Dreamweaver, Flash Pro, Premiere, (On Location, Encore, Device Manger, Bridge) Audition CS5 போட்டாச்சு.. இன்னும் Fireworks, Flash Builder, Contribute, Soundbooth ட்ரை பண்ணல. Contribute பத்தி இப்போதான் கேள்விப்படறேன்.. தகவலுக்கு நன்றி எஸ் கே சார்.

    என்னோட கருத்துப்படி Audition, Soundbooth- அ விட நல்லது.. Soundbooth use பண்றத விட Free-யா Audacity பாவிக்கலாம். (Audition ல Sound mixing, Editing, Effects எல்லாம் பண்ணலாம்.. Soundbooth-la ஒன்னும் உருப்படியா பண்ணமுடியாது. (அல்லது எனக்குத் தெரியாது)

    Cool Edit Pro ங்கற ஒரு சாப்ட்வேர்-அ adobe வாங்கி Auditionனு பேர மாத்தி வச்சிருக்காங்க.. அதேபோல Macromediaவ விலைக்கு வாங்கி அவங்களோட Flash, Dreamweaver, Director, Fireworks, Contribute, Captivate, Shockwave எல்லாத்தையும் இவங்க தத்தெடுத்துகிட்டாங்க.. அப்படியே Adlus Corporation ஐயும் வாங்கி After Effects, Pagemaker (Now In Design) எடுத்துக்கிட்டாங்க..

    ReplyDelete