Thursday, October 14, 2010

கனவுகள் 3 - சில தகவல்கள்

நம் கனவை நம்மை தவிர வேறு ஒருவரால் மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியாது. நம் ஒவ்வொரு கனவும் நிச்சயம் நம்மிடம் எதையோ சொல்கிறது. எல்லாக் கனவுகளும் கெடுதலை உணர்த்துவதாக நினைக்க வேண்டாம். கனவுகள் நமக்கு நன்மை செய்யவே ஏற்படுகின்றன. நமக்கு பயத்தை ஏற்படுத்தும் கனவுகளை கூட தெளிவாக புரிந்துகொண்ட பின், பயப்பட மாட்டோம்.

கனவு நாம் ஏன் காண்கிறோம்?
நம் உள்ளுணர்வு நம்மிடம் எதையோ தெரிவிக்கிறது. அதை கனவின் மூலம் உணர்த்துகிறது. இதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள நம் மனதின் நிலைகளை அறிய வேண்டும் இதைப் பற்றி defense mechanisms பற்றி எழுதப்போகும் பதிவில் விளக்கமாக சொல்கிறேன்.


நாம் எப்போது கனவு காண்கிறோம்?
உலகில் அனைவரும் கனவு காண்கிறோம்! உங்கள் கனவு உங்களுக்கு நினைவிலில்லை என்பதால் கனவு காண்பதில்லை என அர்த்தமில்லை. அறிவியல் ஆய்வுகள் நாம் தூக்கத்தின் ஐந்தாம் நிலையான REM(Rapid Eye Movement) நிலையில் கனவு காண்பதாக தெரிவிக்கின்றன. இருப்பினும் metaphysician எனப்படும் தத்துவ அறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. மேலும் தூக்கத்தின் மற்ற நிலைகளிலும் நாம் அரிதாக கனவு காண்பதை அறிவியல் ரீதியாகவும் நிரூபித்துள்ளனர். (தூக்க நிலைகள் பற்றி வேறு பதிவில் சொல்கிறேன்).

நாம் நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கை தூக்கத்திற்காக செலவழிக்கிறோம். சராசரி வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை கனவு காண்பதற்காக செலவழிக்கிறோம். அதாவது 2100க்கும் மேற்பட்ட நாட்களை வேறொரு உலகில் கழிக்கிறோம். ஒவ்வொரு இரவும், சராசரியாக ஒரிரு மணி நேரங்கள் கனவு காண்கிறோம் மேலும் வழக்கமாக ஒரு நாளில் 4-7 கனவு காண்கிறோம்.

கனவு பற்றி சுவாரசியமான தகவல்கள்:

கனவுகள் என்பவை இன்றியமையாதவை. கனவு பற்றாக்குறை என்றொரு விஷயம் உண்டு. அதாவது கனவு காண்பதில் குறைபாடு இருந்தால் அது புரதச் சத்து குறைபாடு அல்லது personality disorder எனப்படும் பண்பு ஒழுங்கின்மையை குறிக்கின்றது. ஆண்கள் மற்ற ஆண்களை பற்றி அதிகமாக கனவு காண்கிறார்கள். பெண்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என சமமாக கனவு காண்கிறார்கள். புகைப்பழக்கம் இல்லாதவர்கள்/கைவிடுபவர்கள் நீண்ட மற்றும் ஆழமான கனவுகளை காண்கிறார்கள். 3-4 வயது வரும் வரை குழந்தைகள் தங்களைப் பற்றி கனவு காண்பதில்லை. நீங்கள் குறட்டை விட்டு தூங்கும்போது கனவு காண்பதில்லை. கண் பார்வை அற்றோரும் கனவு காண்கிறார்கள். இடையில் கண்பார்வை இழந்தோர் அதற்கு முன் வரை பார்த்தவைகளை பற்றி கனவு காணலாம். மேலும் கனவு என்பது காட்சியை மட்டும் குறிக்காமல், ஒலிகள், தொடு உணர்வு மற்றும் வாசனை போன்ற மற்ற உணர்வுகளையும் சார்ந்து ஏற்படலாம்.

------------------------------------------------

1979 மே 25. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஃப்ளைட் 191 . டிசி-10 ஜம்போ ஜெட் 270 நபர்களுடன் சிகோகாவிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு கிளம்பியது. கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே எஞ்சின்கள் செயலிழந்து 500 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் அனைவரும் உயிரிழந்தனர். அச்சமயம் அமெரிக்காவில் இதுதான் கோரமான விபத்து. இந்த விபத்தை பற்றி சிலருக்கு கனவு வந்துள்ளது. ஆனால் இதைப் பற்றி அவர்களால் பலரிடமும் தெரிவித்து விமானத்தில் செல்வதை தடுக்க முடியவில்லை. இந்நிகழ்வு The Crash of Flight 191 என்னும் படமாக வந்துள்ளது Final Destination என்ற படம் கூட இந்நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான்.

33 comments:

  1. கனவு பற்றாக்குறை என்றொரு விஷயம் உண்டு. அதாவது கனவு காண்பதில் குறைபாடு இருந்தால் அது புரதச் சத்து குறைபாடு அல்லது personality disorder எனப்படும் பண்பு ஒழுங்கின்மையை குறிக்கின்றது.//

    நிறைய நிறைய ஆச்சர்யங்கள் - கனவு குறித்த தகவல்களில் உள்ளன.

    ReplyDelete
  2. Hmm, Kandippa enakku kanavu varum...
    muthala erukira padathi romba kavanithathinal :(
    night thunga mudiyathu pola erukke?

    ReplyDelete
  3. நல்ல ஆழமான அலசல்... வாழ்த்துக்கள் SK

    நான் முந்தைய பதிவில் கேட்டதை பற்றி முடிந்தால் அலசி பாருங்கள்

    //SK எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரும் (வருது) ,யாரோ என்னை மேலே ஏறி கழுத்தை நெறிப்பதை போல இருக்கும்,சுய நினைவுக்கு வந்தவுடன் என்னால் ரூம்-ல் உள்ள எல்லாரையும் பார்க்க முடியும், ஆனால் கைய கூட அசைக்க முடியாது,கத்தனும்னு நினைப்பேன் ஆனா அதுவும் முடியாது,கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் கத்தி கொண்டு விழிப்பேன்... //

    ReplyDelete
  4. மற்ற தொடர்களையும் வாசித்துவிடுகிறேன். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

    ReplyDelete
  5. Nightmare picture...... oooooohhhhh!

    ReplyDelete
  6. கனவு காண்பதில் குறைபாடு இருந்தால் அது புரதச் சத்து குறைபாடு அல்லது personality disorder எனப்படும் பண்பு ஒழுங்கின்மையை குறிக்கின்றது.


    ...interesting info.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. (அந்த கமெண்ட்டில் எழுத்துப்பிழைகள் அதிகம். அதான் delete)

    நண்பா..செமையா இருக்கு. ஒவ்வொரு முறை ஆரம்பிக்கும் போது ஒரு கனவு - அது சம்பந்தமான விளக்கம், அப்பறம் பதிவுன்னு இருந்தா இன்னும் சுவாரசியாமாக இருக்கும் என்பது என் கருத்து.

    @denim
    ////SK எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரும் (வருது) ,யாரோ என்னை மேலே ஏறி கழுத்தை நெறிப்பதை போல இருக்கும்,சுய நினைவுக்கு வந்தவுடன் என்னால் ரூம்-ல் உள்ள எல்லாரையும் பார்க்க முடியும், ஆனால் கைய கூட அசைக்க முடியாது,கத்தனும்னு நினைப்பேன் ஆனா அதுவும் முடியாது,கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் கத்தி கொண்டு விழிப்பேன்... //
    அதுக்குத்தான் ஓவரா மொக்க horror படங்கள பார்க்கக் கூடாதுனு சொல்றது.

    ReplyDelete
  9. யோவ் கொழந்த இந்த கனவு எனக்கு சின்ன வயசுல இருந்தே வருதுயா.....

    ReplyDelete
  10. "ATM" tamil padaththai intha pathivodu thodarbu cheayaathu thavirthathai naaan vanmaiyaaga kandikiraennnnnnnnnnnnnn

    ReplyDelete
  11. //தமிழ் உதயம் said... //
    மிக்க நன்றிங்க! இன்னும் நிறைய ஆச்சரியங்கள் வரும்.

    //யாதவன் said... //
    மிக்க நன்றிங்க!

    //Sugumarje said... //
    மன்னிக்கனும்! அப்படி வந்தா என்கிட்ட சொல்லுங்க!

    //denim said... //
    நன்றி நண்பரே! நான் உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்.

    //sweatha said... //
    சரிங்க!

    //Chitra said... //
    மிக்க நன்றிங்க!

    //கொழந்த said... //
    நண்பா தங்கள் யோசனை ரொம்ப நல்லாயிருக்கு. பின்பற்றுகிறேன்.

    //வெறும்பய said... //
    ரொம்ப நன்றி நண்பரே!

    //vinu said... //
    வருகைக்கு நன்றிங்க! அந்த படம் நான் இன்னும் பார்க்கலை அதான்!

    ReplyDelete
  12. நண்பா, மிகவும் சுவாரசியமாகச் செல்கிறது. தொடருங்கள்...

    ReplyDelete
  13. நல்லா கனவு கான்றாருய்யா இந்த ஆளு நன்றி நண்பரே திரியாத பல விஷயங்கள் அறிந்தேன்.

    ReplyDelete
  14. கனவுகள் தொடரட்டும்..அருமை

    ReplyDelete
  15. தொடரும் கனவுகள்..
    நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  16. கனவைப் பத்தி நீங்க சொன்ன விசயங்கள் நல்லாயிருக்கு..

    ReplyDelete
  17. difficult digest such air accidents..
    I have one small story regarding 'kanavu'.. may be I will post it soon in my blog.

    thanks

    ReplyDelete
  18. சூப்பரான தொடர்..படம் பயமுறுத்திடுச்சி

    ReplyDelete
  19. கனவுகள் என்பவை இன்றியமையாதவை. கனவு பற்றாக்குறை என்றொரு விஷயம் உண்டு. அதாவது கனவு காண்பதில் குறைபாடு இருந்தால் அது புரதச் சத்து குறைபாடு அல்லது personality disorder எனப்படும் பண்பு ஒழுங்கின்மையை குறிக்கின்றது. ஆண்கள் மற்ற ஆண்களை பற்றி அதிகமாக கனவு காண்கிறார்கள்//
    புதிய தகவல்

    ReplyDelete
  20. உண்மைலேயே கனவு பத்தி நிறைய தெரிஞ்சிக்க விரும்புறேன் .
    நல்லா சொல்லிருக்கீங்க .. தொடர்து எழுதுங்க .!!

    ReplyDelete
  21. //சராசரி வாழ்நாளில் சுமார் 6 வருடங்களை கனவு காண்பதற்காக செலவழிக்கிறோம்//
    ஆச்சர்யமான உண்மை... நல்ல தகவல்கள் நண்பரே...

    ReplyDelete
  22. எனக்கு ராத்திரியிலே தூக்கமே வராம ஏதேதோ நெனப்பு ஓடிகிட்டே இருக்கு, அதான் கனவா? கனவைப்பற்றி நிறைந தெரிஞ்சிக்க முடிஞ்சது உங்க பதிவுல.

    ReplyDelete
  23. நண்பரே இத்தொடர் மூலம் கனவுகள் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் தெரிந்துக் கொள்கிறோம்...
    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  24. கனவு பற்றிய சிறப்பான பதிவு, கண் பார்வை இல்லாதவர்கள் கனவு காண்பார்களா என்பது எனது நீண்ட நாள் சந்தேகம், அதை //கனவு என்பது காட்சியை மட்டும் குறிக்காமல், ஒலிகள், தொடு உணர்வு மற்றும் வாசனை போன்ற மற்ற உணர்வுகளையும் சார்ந்து ஏற்படலாம்// என்னும் வரியில் எனக்கு புரியவைத்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  25. நல்ல பதிவு,.. கலக்குங்க,.. எனக்கும் பல கனவுகள் நிறைவேறி இருக்கின்றன,.. கனவுகள் பலிப்பதற்கான அறிவியல் ரீதியான காரணங்கள் ஏதாச்சும் கிடைத்ததா?

    ReplyDelete
  26. @ எஸ்.கே

    நண்பா கனவுகளைப் பற்றிய ஒவ்வொரு பதிவும் மிக சுவாரஸ்யமாக உள்ளது.அப்படியே Inception படத்துல வர்ற மாதிரி இன்னும் டீட்டெய்லா (ஆனா தல சுத்தாத மாதிரி) எழுதுங்க.வாழ்த்துக்கள்

    மற்றபடி நீங்க டெனிம் பத்தின இந்தக் கனவ சீரியஸா எடுத்துக்க வேணாம்.கொடூரமான படத்த ஜாலியா பாத்தா இப்டிதான் கனவு வரும்.(டெனிம் என் நண்பர்).இதப் போய் சீரியஸா எடுத்துகிட்டு நீங்க மெயில்லாம் அனுப்பிருக்கீங்க.நாங்களே அடிக்கடி தூங்கும் போது அவர் கழுத்த நெறிப்போம்.அத கனவுன்னு நெனச்சிட்டிருக்காரு.பாவம்....:-)


    //SK எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரும் (வருது) ,யாரோ என்னை மேலே ஏறி கழுத்தை நெறிப்பதை போல இருக்கும்,சுய நினைவுக்கு வந்தவுடன் என்னால் ரூம்-ல் உள்ள எல்லாரையும் பார்க்க முடியும், ஆனால் கைய கூட அசைக்க முடியாது,கத்தனும்னு நினைப்பேன் ஆனா அதுவும் முடியாது,கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் கத்தி கொண்டு விழிப்பேன்... //

    ReplyDelete
  27. நல்ல flow-ல வருது SK, தொடர்ந்து எழுதுங்க....

    ReplyDelete
  28. //சு.மோகன் said...//
    நன்றி நண்பரே!

    //சசிகுமார் said...//
    மிக்க நன்றி நண்பரே!

    //padaipali said...//
    மகிழ்ச்சியும் நன்றிகளும்!

    //லதானந்த் said...//
    நன்றிங்க!

    //இளங்கோ said...//
    நன்றிங்க!

    //பதிவுலகில் பாபு said...//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    //Madhavan said...//
    விபத்துகள் ஏற்றுக்கொள்ள கடினமானவைதான். நன்றி நண்பரே. தங்கள் கதையை போடுங்கள் படிப்போம்!

    //ஆர்.கே.சதீஷ்குமார் said...//
    மிக்க நன்றி நண்பரே!

    //ப.செல்வக்குமார் said...//
    நிச்சயம் உங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி!

    //adhithakarikalan said...//
    மிக்க நன்றிங்க நண்பரே!

    //எம்.ஞானசேகரன் said...//
    நினைவு - கனவு குழப்பம்தான்!:-) நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

    //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே தங்கள் தொடர்வருகைக்கும் தொடர் பின்னூட்டத்திற்கும்!

    //எப்பூடி.. said...//
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!

    //jothi said...//
    தங்கள் கேள்விக்கு பதில்- ஆம் உண்டு! வரும் பதிவுகளில் பதில் கிடைக்கும்! நன்றிங்க!

    //RNS said...//
    நிச்சயமாக நீங்க சொல்வதுபோல் விளக்கமா எழுத முயற்சிக்கிறேன்.
    நண்பர் டெனிமின் கனவை ஆராய்ந்துதான் பார்ப்போமே! :-)

    //துரோகி said...//
    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  29. கனவுகள் குறித்தான தேடல் எப்படி தோன்றியது. இதனைப் பற்றி அறிய அறிய வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  30. //ஜெகதீஸ்வரன். said...//
    தேடல்....

    ReplyDelete