- Henry David Thoreau
சில பேருக்கு கனவுகளில் சுவாரசியம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் கேட்கலாம். நான் ஏன் கனவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டும்? எனக்கு கனவு ஞாபகம் இருப்பதே எப்போதாவதுதான்! ஞாபகம் இருப்பது கொஞ்சம்தான். அதுவும் வெறும் குப்பைதான்.”
இப்படி நினைப்பவர்களுக்கு: நாம் அனைவரும் கனவு காண்கிறோம். நாம் நம் வாழ்க்கையில் சுமார் 5-15% வாழ்நாளை கனவில் கழிக்கிறோம். அதிகபட்சம் 10 வருடங்கள்!!! நிச்சயம் கனவுகளில் ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது.
கனவுகளில் பல சிறந்த விசயங்கள் நடந்துள்ளன. பல கண்டுபிடிப்புகள் கண்டறியப்பட்டுட்டுள்ளன. பென்சீன் வளையம், தையல் ஊசி போன்றவை விஞ்ஞானியின் கனவில் உதித்தவையே. Robert Louis Stevenson தன் கனவினாலேயே Dr. ]ekyll மற்றும் Mr. Hyde ஆகிய புகழ்பெற்ற கதாபாத்திரங்களை உருவாக்கியதாக சொல்லியுள்ளார். Mozart தன் இசைக்கான தீம்கள் தன் கனவிலிருந்து பெறப்படுவதாக கூறியுள்ளார். Tartini தன் பிரபலமான வயலின் இசையை தன் கனவில் ஒரு பேய் வாசித்ததைக் கொண்டு உருவாக்கியதாக கூறியுள்ளார்.
ஒவ்வொரு நாள் காலையில் நாம் விழிக்கும்போது நம் மனம் ஒரு முக்கியமான நிலையில் இருக்கிறது. நாம் பெரும்பகுதி தூக்கத்தில் கழித்துள்ளோம். ஒரு உண்மை. நாம் தூங்கும்போது நம் உடல் கிட்டதட்ட செயலிழப்பு(paralyse) ஆனதுபோன்று இருக்குமாம். தூக்கத்தை உண்டாக்க உதவுவதற்காக நம் உடலில் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால் உடலை ஓய்வாக வைத்திருக்குமாறு நரம்பு செல்கள் நம் தண்டுவடத்திற்கு செய்தி அனுப்புகின்றன. ஓய்வு கிட்டதட்ட செயலிழப்பு ஆகிறது. எனவே நாம் தூக்கத்தில் கால் தூக்கி போடுவது, புரளுவது இதெல்லாம், கனவினால்தான். தானாக நடக்கும் உடல் அசைவுகள்.
இப்படிப்பட்ட கனவை நாம் ஆராய ஆரம்பித்தால் குப்பையாக நினைக்கும் கனவுகள் ஆச்சரியங்களாகும். கனவைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் பலவித கருத்துக்களை கொண்டுள்ளனர்.
+ பகுப்பாய்வு உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃபிராய்டு சொல்லும் கருத்துக்களே பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் இவை அனைத்தும் தியரிகளே. இவரின் கூற்றுப்படி கனவுகள் என்பவை ஆழ்மனதின் ஆசைகள், கற்பனைகள், நினைவுகள், மற்றும் செயல்நோக்கங்கள் ஆகும். மக்கள் ஆக்ரோஷம் மற்றும் பாலுறவு உந்துதல்களை கொண்டுள்ளனர். இவை வெளிமனதிலிருந்து மறைக்கப்படுகின்றன. அழுத்தப்படுகின்றன. வெளிமனதில் வெளிப்படாத இவைகள் கனவாக வெளிப்படுகின்றன. சிக்மண்ட் ஃபிராய்டு கனவுகள் என்பவை ’அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் பொய்யான நிறைவேறுதல்கள்’ என்கிறார்.
+ மற்றொரு கருத்து: REM வகை தூக்கத்தின்போது உணர்ச்சிகள், உணர்வுகள் மற்றும் நினைவுகளை உள்ளடக்கிய இடமான லிம்பிக் சிஸ்டம் தூண்டப்படுகிறது. மூளை இந்த சிக்னல்களுக்கு(செய்திகளுக்கு) அர்த்தம் கண்டுபிடிக்க உள்ளுக்குள் நிகழ்த்தும் நிகழ்வுகளே கனவுகள் எனப்படுகின்றன. நம் மூளை பல விசயங்களை உருவாக்கும் திறன் பெற்றது. அதேசமயம் அது ஒழுங்கற்றும், உடனுகுடனும் செயல்படக்கூடியது. நாம் தூங்கும்போது இப்படி செயல்பட்டு பல புதிய விசயங்களை சிந்திக்கின்றனது. இவை அர்த்தமற்றவை போல தோன்றினாலும் அதன் சில விசயங்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். இதனால் கனவு காணும் நேரமும் வீணாவதில்லை.
சிலர் கனவை வெளித்தூண்டுதல்கள் உதாரணமாக ரேடியோ சத்தம் போன்றவை மூளையை தூக்கத்தில் இடையூறு செய்வதன் காரணமாக ஏற்படுவதாக கூறுகின்றனர். சிலர் கனவை வேறு விதமாக சொல்கிறார்கள். கணிப்பொறியில் clean up வேலைகளை செய்வது போல, கனவுகள் மனதை சுத்தம் செய்ய ஏற்படுகின்றன.
கனவைப் பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும் அவை அனைத்துமே சரி போல தோன்றினாலும் உண்மையில் கனவென்பது என்ன? கனவின்போது மனம் எப்படி செயல்படுகிறது. இதை தெரிந்துகொள்ள விழித்திருக்கும்போது மனம் எப்படி செயல்படுகிறது என பார்க்க வேண்டும். அடுத்த பதிவில்............
---------------------------
- பல வகை மிருகங்களும் கனவு காண்கின்றன. நாய்கள் தூங்கும்பொழுது கவனித்து பாருங்கள். சில சமயம் கால்களை ஓடுவதுபோல தூக்குவதையும் வித்தியாசமாக ஒலி எழுப்புவதையும் காணலாம். கனவில் அது யாரையாவது துரத்திக் கொண்டிருக்கலாம்.
- ஒரு மனிதன் சராசரியாக ஒரு வருடத்தில் 1460 கனவுகள் காண்கிறான். ஒரு நாளைக்கு 4.
- கனவுகளால் உடலில் கலோரிகளும் குறைகின்றன, ஆனால் அவை பெரும்பாலும் பாலுறவு சம்பந்தபட்ட கனவுகளாக இருக்கும்.
- நீண்ட கனவுகள் (30-45 நிமிடங்கள்) அதிகாலையில் ஏற்படுகின்றன.
- கருவிலுள்ள குழந்தைகளும் கனவு காணும் அவைகளின் கனவுகள் பெரும்பாலும் சத்தம் மற்றும் தொடு உணர்வை சார்ந்தே இருக்கும்.
- பிளேட்டோவின் கூற்றுப்படி வயிற்றிலுள்ள உறுப்புகளிலிருந்து கனவுகள் உற்பத்தியாகிறதாம். குறிப்பாக கல்லீரல் கனவின் பிறப்பிடமாம்.
- முழு இரவு தூக்கத்திலிருந்து விழிப்பவதை விட, REM தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டால் கனவை நீண்ட நேரம் ஞாபகத்தில்
- வைக்க முடியும்.
- ஆண்களின் கனவுகள் பெரும்பாலும் செயல்பாடு சார்ந்ததாக இருக்கும், outdoorகளில் இருக்கும் மேலும் புதியவர்கள் கனவில் இருப்பார்கள். பெண்களின் கனவுகள் பெரும்பாலும் உணர்ச்சிகள் சார்ந்து இருக்கும், indoorகளில் இருக்கும், அவர்களின் மேல் அன்பு செலுத்துபவர்கள் கனவில் இருப்பார்கள்
- ஆண்கள் பெண்களை விட அதிகமாக ஆக்ரோஷம், துரதிர்ஷ்டம் மற்றும் கோபம், பயம், கவலை, வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளைப் பற்றி கனவு காண்கிறார்கள். பெண்கள் அடிக்கடி நட்புரீதியாகவும் நேர்மறை சார்ந்த கனவுகளை காண்கிறார்கள்.
முதல் படத்தைப் பார்த்ததும் எதார்த்த வாழ்க்கையை அப்படியே எடுத்துக் காட்டுவது போல் உள்ளது. மற்றபடி எடுத்துக் கொள்ளும் விசயத்தில் உங்களின் முழு ஈடுபாடு தெரிகின்றது.
ReplyDeleteகனவைப் பற்றி இவ்வளவு தகவல்களா? நல்லா இருக்கு.
ReplyDeleteரொம்ப சீக்கிரமே வந்துட்டேன்போல....
ReplyDeleteநண்பா, கொழந்த சொன்னதுபோல, உங்கள் நடை மெருகேறிக்கொண்டெ போகிறது. இந்த பதிவு மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
தொடருங்கள்...
நீங்கள் எழுதுவது நன்றாக உள்ளது எஸ் .கே .உங்கள் எழுத்து மெருகேறி கொண்டே இருக்கிறது
ReplyDeleteஅடிச்சுக் கலக்குங்க நண்பா..அருமை
ReplyDeleteநண்பா..
ReplyDelete"Interpretation of Dreams" படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்..அது குறித்தும் விரைவில் எழுத வேண்டும்..
இதை அவ்வப்போது pdfஆக மாற்றி வைய்யுங்கள். கண்டிப்பாக பிறருக்கு உதவும்..
ReplyDeleteகனவுகளைப் பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே பண்ணீட்டு இருக்கீங்க போல!!
ReplyDeleteஅருமையான தகவல்கள் நண்பரே..
தகவல்கள் ரொம்ப நல்லா இருக்குங்க..
ReplyDeleteகொஞ்ச நாளா உங்க (யாரோட) வலைப்பூ பக்கமே வர முடில...
கனவுகளோட மற்ற பாகங்களையும் நேரம் இருக்கும்போது படிக்கிறேன்...
very interesting. :-)
ReplyDeleteநண்பரே ஆச்சர்யம் ஒரு கனவில் இவ்வளவு விஷயம் இருக்கா இன்னும் தொடருமா அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள் நன்றி
ReplyDeleteஇயற்கை அல்லது இறைவன் காரணமில்லாமல் கனவை படைக்க வாய்ப்பில்லையே.
ReplyDeleteintrestingaa போகுது.. தொடர்ந்து கனவைப் பத்தி சொல்லுங்களேன்..
ReplyDeleteகனவைப் பற்றி இவ்வளவு தகவல்களா.
ReplyDeleteஇனி கனவுகாணும்போது கவனமாக இருந்து கவனிக்கனும். நல்ல தகவல்..
http://niroodai.blogspot.com/
சுவாரசிய தகவலகள்.
ReplyDeleteசில சமயம் என் தொழில் சம்பந்தமான திர்வுகளுக்கு க்ளு கிடைத்து இருக்கிறது. இது என் அனுபவம்
கனவே கலையாதே அப்படின்னு சொல்லணும் போலிருக்கே! அட்டகாசமா வந்திருக்கு... தொடருங்கள்... ;-)
ReplyDeleteஇனி கனவுகாணும் போது நல்லா கவனிக்கணும் அப்படியே ஒரு பதிவும் போடனும் எங்க எஸ்கே கண் விழித்தவுடன் கனவுமறந்து விடுகிறது
ReplyDelete//ஜோதிஜி said... //
ReplyDeleteமிக்க நன்றி!
//vanathy said... //
நன்றிங்க!
//சு.மோகன் said... //
மிக்க நன்றி நண்பரே!
//இம்சைஅரசன் பாபு.. said... //
மிக்க நன்றி நண்பரே!
//padaipali said... //
நன்றி நண்பா!
//கொழந்த said... //
நிச்சயம் அது பற்றியும் எழுகிறேன் நண்பா! பிடிஎஃப்.. சரி!
//பதிவுலகில் பாபு said... //
கிட்டதட்ட ஆராய்ச்சிதான்!:-) நன்றி நண்பரே!
//அன்பரசன் said... //
நன்றி நண்பரே!
//Chitra said... //
நன்றிங்க!
//சசிகுமார் said... //
ஆம் நண்பரே! நன்றி!
//தமிழ் உதயம் said... //
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க!
//Madhavan said... //
நிச்சயம்! நன்றி நண்பரே!
//அன்புடன் மலிக்கா said... //
மிக்க நன்றிங்க!
//அருண் பிரசாத் said... //
ஆமாம் பலருக்கு கனவினால் நன்மை ஏற்பட்டுள்ளது. நன்றி நண்பரே!
//D.R.Ashok said... //
நன்றி!
//RVS said... //
நன்றி சார்!
//சௌந்தர் said... //
கண்டிப்பாக செய்யுங்க. கனவு மறக்காமலிருக்க வழிகள் உள்ளன வரும் பதிவுகளில். நன்றி நண்பா!
//
ReplyDeleteகருவிலுள்ள குழந்தைகளும் கனவு காணும் அவைகளின் கனவுகள் பெரும்பாலும் சத்தம் மற்றும் தொடு உணர்வை சார்ந்தே இருக்கும்.
//
நம்பவே முடியலைங்க ..! தொடர்ந்து எழுதுங்க .. நான் இன்னும் நிறைய தெரிஞ்சிக்க விரும்பறேன் .!!
எனக்கு தூக்கத்தில் பாதி கனவுகள் தான்...சில கனவுகள் மட்டும் நினைவில் இருக்கும்....! உங்களது இந்த பதிவு எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது....நன்றி.
ReplyDeleteஎஸ் .கே ..,சார் ,
ReplyDeleteஎன்னக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது ...,எப்படியென்றால் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்த உடனே கம்ப்யூட்டர் ஆன் ஆகிறது ..,ஒரு பூ மொட்டாக இருப்பதை பார்த்த வுடனே அது மலராகிறது (எல்லாமே FRACTION OF SECOND )...,ஒரு செடியை பார்த்தவுடன் அது விருட்சமாகிறது ..,சத்தியமா என்னக்கு ஒன்னுமே புரியலை சார் ..,இதுக்கும் என் நடைமுறைக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா ? உங்கள் பதிலை ஆர்வமுடன் எதிர் நோக்கும் உங்கள் நீண்ட நாள் வாசகன் ....,
மிக சரளமாய் எழுதப் பட்ட உங்கள் பதிவை ரசித்தேன்.
ReplyDeleteதொடருங்கள்...
கனவைப் பற்றி இவ்வளவு தகவல்களா? நல்லா இருக்கு. நல்ல பதிவு நண்பரே...
ReplyDeleteஅருமையாக இருக்குது
ReplyDeleteகனவில் வருவதை கூர்மையாக கவனித்து விழிப்பு நிலையில் மனதை வைத்திருந்தால், மனதின் அடி மனத்திலிருந்து வருங்காலத்தை பற்றிய செய்திகள் வெளிவரும் என்பார்களே? அது உண்மையா?
ReplyDelete// ப.செல்வக்குமார் said...//
ReplyDeleteநிச்சயம் நண்பா!
//Kousalya said....//
நன்றி!
//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...
நன்றி ! சாட்டில் பேசலாம்.
//மோகன்ஜி said...//
நன்றி சார்!
//பிரஷா said...//
மிக்க நன்றிங்க!
//தியாவின் பேனா said...//
நன்றிங்க!
// சதுக்க பூதம் said...
கனவில் வரும் சம்பவங்கள் உண்மையான நிகழ்வுகள் உண்டு. எப்படியிருந்தாலும் எல்லா கனவுகளும் நமக்கு ஒரு செய்தியை சொல்கின்றன!
//Tartini தன் பிரபலமான வயலின் இசையை தன் கனவில் ஒரு பேய் வாசித்ததைக் கொண்டு உருவாக்கியதாக கூறியுள்ளார்.///
ReplyDeleteவாவ்... ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. இதுபோல ஏதாவது பேய் எனக்கு உதவி செஞ்சா ஜாலியா இருக்கும்... (இப்போதைக்கு கூட டெனிம் இருக்கார்)
//கல்லீரல் கனவின் பிறப்பிடமாம். //
ஆச்சரியமா இருக்கு.இதுவரை நான் அப்படி நெனச்சதே இல்ல... கலக்குறீங்க தலைவா.. வாழ்த்துக்கள்...
அருமையான கட்டுரை, ஆய்வு நடையில் இருப்பது கட்டுரையின் சிறப்பம்சம்...
ReplyDelete//பென்சீன் வளையம், தையல் ஊசி போன்றவை விஞ்ஞானியின் கனவில் உதித்தவையே. //
ReplyDeleteவாவ்.. புதிய விஷயங்கள் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்
அருமையான தகவல்கள்
ReplyDeleteகனவைப்பற்றி இவ்வளவு செய்திகளா அருமையாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...
ReplyDeleteஉங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
நிறைய முறை படித்துவிட்டு அதைப் பற்றி எழுத முடியாமல் சென்றுவிடுகிறேன். பிளாக்கருக்கென தனியாக லாங்இன் பண்ணுவதால் இந்த பிரட்சனை.
ReplyDeleteகனவுகள் பதிவு அருமை!. புதுமையான தேடல் உங்களுடையது. வாழ்த்துகள்.
கனவை பத்தி சின்னதா தியரி:
ReplyDeleteஒரு வியாபாரி நாளெல்லாம் வியாபாரம் பண்றான். அவசரத்துல எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்க முடியறதில்லை. ஒர்க்கிங் ஹவர்ஸ் முடிஞ்ச பிற்பாடு அது அதை அதுக்குண்டான பிறைல வைக்கிறான். வைக்கிறதுக்கு முந்தி லேசா புரட்டி பார்க்கிறான்.(இது சாதாரணர்களுக்கு வரும் கனவு) ஆனால் ஆசை மிக்கவர்கள்,உணர்வு வழி சிந்தனை உடையவர்களின் கனவுகள் வேறு. தியானம் பழகுபவர்களுக்கு வரும் கனவு வேறு
கனவு சம்பந்தமாக எனக்கு ஆர்வம் அதிகம்.
ReplyDeleteஇன்றுதான் இங்கு வருகிறேன். அனைத்தையும் படித்து மீண்டும் விட்டு வருகிறேன் இன்ஷா அல்லாஹ்.
இந்த பதிவு கனவுஇல்லையே
ReplyDeleteநண்பா கனவுகளை பற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள். கனவுகள் ஆராய்ச்சி செய்ய பட வேண்டியதே
ReplyDeleteகாண்பது கனவா? இல்லை நனவா?
ReplyDelete// RNS said...//
ReplyDeleteநன்றி நண்பரே!
// adhithakarikalan said...//
நன்றி நண்பரே
//தமிழ் செல்வன் said...//
மிக்க நன்றி!
//rk guru said...//
நன்றிங்க!
//மாணவன் said...//
மிக்க நன்றி நண்பரே!
//ஜெகதீஸ்வரன். said...//
ரொம்ப ரொம்ப நன்றிங்க!
//Chittoor.S.Murugesan said...//
நீங்கள் சொல்வதை போல மனப் பயிற்சிகளால் கனவில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு! நன்றி!
//அரபுத்தமிழன் said...//
நன்றிங்க!
//நா.மணிவண்ணன் said...//
இனிவரும் பதிவுகளில் வரும்! நன்றி!
//Suresh Kumar said...//
நன்றிங்க! ரொம்ப நன்றி!
// ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said//
நன்றிங்க!
பல பதிய தகவல்கள்களை அறிந்துக்கொன்டேன். நிறைய, நிறைய விஷயங்களை அருமையா தொகுத்து தந்து இருக்கீங்க. நன்றி நண்பரே.
ReplyDeleteநன்றி நண்பரே!
ReplyDelete