Wednesday, October 13, 2010

அடோப் ஃபிளாஷ் (59) - Roentgen Effect

Roentgen Effect என்பது பிலிம் நெகடிவ் எஃபக்ட் போன்றதாகும்.
நெகடிவ் படத்தை உருவாக்க இந்த லிங்கிற்கு சென்று சாதாரண படத்தை அப்லோட் செய்தால். சிறிது நேரத்தில் டவுன்லோட் லிங்க் வரும் அதை கிளிக் செய்து படத்தை சேமிக்கலாம்.

புதிய பிளாஷ் பைலை திறந்துகொள்ளவும். நெகடிவ் படம், சாதராண படம் இரண்டையும் லைப்ரரிக்கு எடுத்துக் கொள்ளவும்.

சாதாரண படத்தை ஸ்டேஜுக்கு கொண்டு வரவும் அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Typeல்  movie clipஐயும் Nameல் MySymbol_mc எனவும் பெயர் கொடுக்கவும். அதை டபுள் கிளிக் செய்யவும்.

முதல் லேயரின் முதல் பிரேமில் சாதரண படம் இருக்கும். அந்த படத்தை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Typeல் Graphicஐ தேர்ந்தெடுக்கவும். 200வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Frameஐ கிளிக் செய்யவும்.


புதிய லேயரை உருவாக்கவும். 50 வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Keyframeஐ கிளிக் செய்யவும். நெகடிவ் படத்தை எடுத்து விடவும். அதையும் ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும். Typeல் Graphicஐ தேர்ந்தெடுக்கவும். 75, 170, 200 ஆகிய பிரேம்களில் ரைட்கிளிக் செய்து Insert Keyframeஐ கிளிக் செய்யவும்

75வது பிரேமில் கிளிக் செய்து படத்தை கிளிக் செய்யவும். கீழே பிராப்பர்டி சேனலில் colorல் Alphaவை தேர்ந்தெடுத்து 0% கொடுக்கவும். இதே போல் 200வது பிரேமிலும் செய்யவும். பிறகு 50 மற்றும் 75வது பிரேம்களுக்கு இடையிலும், 170 மற்றும் 200வது பிரேம்களுக்கு இடையிலும் ரைட்கிளிக் செய்து Create Motion Tweenஐ கிளிக் செய்யவும். இப்போது நம் மூவிகிளிப் சிம்பல் தயாராகி விட்டது.


Scene 1ஐ கிளிக் செய்து ஸ்டேஜுக்கு வரவும். லைப்ரரிலிருந்து நீங்கள் உருவாக்கிய MySymbol_mc மூவிகிளிப் சிம்பலை ஸ்டேஜுக்கு இழுத்து விடவும்.  3, 6, 8, 15 ஆகிய பிரேம்களில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.  எல்லா கீபிரேம்களுக்கு இடையிலும் ரைட்கிளிக் செய்து Create Motion Tweenஐ கிளிக் செய்யவும். 200வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Frameஐ கிளிக் செய்யவும்.

3 மற்றும் 8 ஆகிய பிரேம்களில் கிளிக் செய்து மூவிகிளிப்பை கிளிக் செய்யவும். பிராப்பார்டி பேனலில் colorல் Advancedஐ தேர்ந்தெடுத்து படத்தில் உள்ளவாறு செட்டிங்கஸ் அமைக்கவும்.

DEMO:



14 comments:

  1. வழக்கம் போல கலக்கல்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. //அருண் பிரசாத் said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. சகோதரா இன்றும் அருமையான பாடம் நன்றிகள் உரித்தாகட்டும்....

    ReplyDelete
  5. //ம.தி.சுதா said...//
    நன்றி சகோதரா!

    ReplyDelete
  6. //வெறும்பய said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. உங்கள் பாடங்கள், எளிமையாக புரிந்து கொள்ளும்படி இருக்கிறது. மிக்க நன்றி.பாராட்டுகள்.

    Friday, August 6, 2010
    அடோப் ஃபிளாஷ் (12)- Mouse Trail

    http://manamplus.blogspot.com/2010/08/mouse-trail.html

    இந்த பதிவில் நீங்கள் சொன்ன மாதிரி ஸ்கிரிட்டை பேஸ்ட் செய்யமுடியவில்லை.

    கீழ் உள்ளதை போல் பதில் கிடைக்கிறது.என்னவாக இருக்கும்!!!.

    The actions on the clipboard contain errors, Actions with erros cannot be pasted in Script Assist mode.

    நன்றி.பல்லவன்

    ReplyDelete
  8. //p said...//
    நண்பரே நன்றி!

    உங்கள் பிரச்சினைக்கு முதலில் நீங்கள் Actionscript 2.0 ஃபைலை திறந்துள்ளீர்களா என பார்க்கவும். பிறகு ஸ்கிரிப்ட் அசிஸ்டெண்ட் மோடை நீக்கவும்.(இதற்கு ஆக்சன் பேனலில் வலதுபக்கம் கிளிக் செய்துள்ள பட்டனை கிளிக்கினால் போதும்.) பிறகு ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.

    ReplyDelete
  9. எளிமையான விளக்கம்!

    ReplyDelete
  10. கலக்கல் நண்பா..

    ReplyDelete
  11. அசிஸ்டெண்ட் மோடை நீக்கிய பிறகு, பேஸ்ட் ஆகிறது.உடனடி பதில் தந்தமைக்கு நன்றி. உங்களுக்கு மெயில் அனுப்பி உள்ளேன்.

    நன்றி.

    அன்புடன். பல்லவன்.

    ReplyDelete
  12. அருமையாக உள்ளது படங்கள் அருமையான தேர்வு நன்றி நண்பரே...

    ReplyDelete
  13. //thozhilnutpam said...//
    நன்றி நண்பரே!

    //padaipali said...//
    நன்றி நண்பரே!

    //p said...
    பதில் அனுப்பியுள்ளேன்!

    //Thomas Ruban said...//
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete