Friday, October 22, 2010

கனவுகள் 7 - நான்.............

“Dreams are like stars...you may never touch them, but if you follow them they will lead you to your destiny.”

17 வயது இளைஞன் ஒருவனின் கனவு.

நான் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறேன். அப்போது என் நண்பர்களில் ஒருவன் தன் காதலியோடு பேசிக் கொண்டிருக்கிறான். நான் அவன் அருகே சென்று அவன் சட்டையை பிடித்து தள்ளி விடுகிறேன். ஒரு ஸ்டீல் ராடால் அவனை பயங்கரமாக அடிக்கின்றேன்.  நான் நிற்கும் தரையில் அவன் மூளை வெளியே வருகிறது. என்னைச் சுற்றியுள்ள அனைவரும் கைதட்டுகிறார்கள்.

உணர்ச்சி: மகிழ்ச்சி

ஆய்வு: இந்த கனவு நீங்கள் ஒரு சூழ்நிலையில் எப்படி செயல்படுகிறீர்கள் என கேட்கிறது. கனவில் நீங்கள் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுவது தெளிவாக தெரிகிறது. நீங்கள் ஏதேனும் சம்பவத்திற்கு அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டீர்களா?


தூக்கம் என்பது ஒரு பயணம் போலத்தான். ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்திருக்கும்போது நம் மனம் ஒரு பயணத்தை முடிக்கின்றது. நம் தூக்கத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். 1. மந்தமான விழிப்புக்கும் லேசான தூக்கத்திற்கும் இடைப்பட்ட நிலைகளை. கண் சொக்குதல் இந்த நிலையில் ஏற்படுகிறது. 2. உண்மையான தூக்கம் இங்கே மனதில் நெருக்கமற்ற, உலகு சார்ந்த நினைவு போன்றவை ஏற்படுகின்றன. அதாவது நம்மை சுற்றி நடப்பவை உண்மையும் கற்பனையும் கலந்ததது போல் தோன்றும் நிலை. முதல் நிலையிலிருந்து  இரண்டாம் நிலைக்கு விரைவில் சென்று விடுவோம். 3. டெல்டா தூக்கம் அல்லது ஆழ்ந்த தூக்கம் இதற்கு செல்ல எப்படியும் 20-30 நிமிடங்கள் ஆகும். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காணுவது என்பது மிக மிக குறைவாகவே ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் நம் ஆழ்மனதுடன் தொடர்பு ஏற்படுகிறது, வெளி மனதின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால் ஞாபகங்கள், நம் நோக்கங்கள், பிரச்சினைகள் அப்படியே உள்ளன. ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற 30-40 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் நிலைக்கு வந்து விடுகிறோம். எனவே தூங்க ஆரம்பித்து 70-90 நிமிடங்களில் நம் முதல் REM தூக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஒரு தற்காலிக விழிப்பு போன்ற நிலை ஏற்படுகிறது.

**************************

நாம் மூன்று நிலைகளில் வாழ்கிறோம். 1. நிஜ உலகு. 2. கற்பனை 3. கனவு. மனமானது. ஆழ்மனம் மூன்று நிலைகளிலும் வேலை செய்கிறது. ஆனால் வெளிமனது மூன்று நிலைகளிலும் முழுமையாக ஈடுபடுவதில்லை. மூன்று நிலைகளுக்குமான வேறுபாட்டையும் மூன்று நிலைகளிலும் வெளிமனதை வாழ பழக்கினால் கனவைப் பற்றி முழுமையாக நம்மால் புரிந்துகொள்ள முடியும். இதைச் செய்வதால் கனவைப் பற்றி மட்டும் அறியாமல் நம் மனதில் பல விஷயங்களையும் சக்திகளையும் புரிந்துகொள்ள முடியும், பெறமுடியும்.

நம் நிஜ உலகின் இருப்பை நமக்கு உணர்த்துவதில் பெரும்பங்கு வகிப்பது நம் புலன் உணர்ச்சிகளே. ஆனால் நாம் எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பதில்லை. உளவியலில் சில விசயங்களை ஆராயச் சென்றபோது நான் கண்டறிந்தது மனதை பண்படுத்தும் பல பயிற்சிகள் நம் முன்னோர்கள் சொன்ன ஆன்மீக/யோக பயிற்சிகளை போல் உள்ளது. கிட்டதட்ட நான் யார் என்ற கேள்விக்கு விடைதேடுவது போல இப்பயிற்சிகள் உள்ளன. எல்லாமே எளிமையானவைதான். ஆனால் அதை செய்ய செய்ய நமக்குள் தானாக ஏதோ மாற்றங்கள் உண்டாகின்றன. அதனை முறையாக பயன்படுத்தும்பொழுது பல பயன்கள் கிடைக்கின்றன.

நம் இருப்பை உணர்தல்:

நீங்கள் இருக்கிறீர்களா? இதென்ன கேள்வி இருக்கிறேனே! சரி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இதை படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு, பாட்டு கேட்கிறேன், பிறகு அருகில் உள்ளவர்களிடம் அவ்வப்போது பேசுகிறேன். இப்படி நீங்கள் செய்யும் ஓவ்வொரு செயல்களையும் எப்போதும் ஊன்றி கவனித்துக் கொண்டே இருக்கிறீர்களா?? இல்லை!!!!

விழிப்புநிலை - ஒரு பயிற்சி:

இந்த பயிற்சியில் கற்பனையாக நினைத்து அதனை நிஜமாக உணர வேண்டும். கற்பனையாக ஒரு பொருளை நினைத்தல் அந்த பொருளின் நுணுக்கங்களை கற்பனையில் கவனித்தல் மனதில் விழிப்புணர்விற்கு பெரிதும் உதவுகிறது. கீழ்காண்பவற்றை கற்பனையாக செய்யவும்.

1.பார்த்தல். நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ. அதன் வடிவம், நிறம், அசைவு, பரிமாணம், அதன் நுணுக்கங்கள் அதைச் சுற்றியுள்ளவை எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குங்கள்.

2. கேட்டல் - நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதன் தொனி, ஏற்ற இறக்கம், ரிதம், ஒலி அளவு போன்றவற்றை கூர்ந்து கேட்டல்.

3. நுகர்தல் - வாசனை எந்த வித வாசனையை முகர்கிறீர்கள். மண், பழங்கள், மலர்கள் இவற்றின் ஒவ்வொரு வாசனையை நுகர்ந்து உணர்தல்(அதாவது ஒரு ரோஜாவை நினைத்தால் அதன் வாசனையை கற்பனையிலேயே உணர்தல்).

4. சுவைத்தல் - கற்பனையில் பலவித பொருட்களின் சுவையை உணர்தல்

5. தொடு உணர்வு - இது மிக முக்கியமானது. சூடு, குளிர்ச்சி, ஈரம், வலி, சாதாரண தொடுதல், சொரசொரப்பானதை தொடுதல் வழப்பானதை தொடுதல், எடை, போன்ற பல உணர்ச்சிகளை

6. சுவாசம் - நாம் எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதை எல்லா சமயங்களிலும் உணர்வதில்லை. நம் சுவாசத்தை ஆழமாக கவனியுங்கள்.சீராக சுவாசிக்கவும். அதை ஆழமாக உற்று நோக்கவும்.

7. உணர்ச்சிகள் - நம் உணர்ச்சிகளான கோபம், சந்தோசம், கவலை, வருத்தம், வெறுப்பு போன்ற உணர்வுகளை கற்பனையில் நினைக்கவும். மனதால் உணரவும்.

8. எண்ணம்- இவ்வளவு நேரமாக இவை அத்தனையையும் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் உணர வேண்டும். அதாவது ஒவ்வொரு சமயமும் நாம் இப்போது என்ன யோசித்து கொண்டிருக்கிறோம் என உணர்தல்.

9. நான் - உங்கள் உலகத்தில் நீங்களும் இருக்கிறீர்கள். ஆமாம் நாம் நம்மைச் சுற்றியுள்ளவற்றை வைத்தே அனைத்தையும் யோசிக்கிறோம், உணர்கிறோம். நான் இதைச் செய்கிறேன் என்கிற போது நீங்கள்(அதாவது உங்கள் மனம்) உங்களுக்குள் இருந்து யோசிக்கிறது. உங்கள் மனதை உங்களை வெளியே வந்து யோசிக்கச் செய்யுங்கள் நீஙகள் செய்வதை வெளியிலிருந்து ஒரு வேறு நபரை கவனிப்பது போல செய்பவற்றை கவனிக்க செய்யுங்கள்.

10. விழிப்புணர்வை உணர்தல்- நீங்கள் எப்போதும் எல்லாவற்றையும் ஆழ்ந்து நோக்குகிறீர்கள் என்பதை உணர்தல.

மேற்கண்டவைகளை நீங்கள் படிக்கும்பொழுது புரிந்தும் புரியாமல் ஏதோ ஆன்மீகக் கட்டுரை படிப்பது போல இருக்கலாம். ஆனால் இவை அனைத்து நம் மனதை பண்படுத்தும் அடிப்படை உளவியல் பயிற்சிகள் ஆகும். உண்மையில் நீங்கள் இப்படி கற்பனையில் நினைத்து பார்ப்பதுதான் கனவிலும் நடக்கிறது. நிஜ உலகிலும் இப்படி ஒவ்வொன்றையும் ஒருமுறை கூர்ந்து கவனிக்கலாம். அதற்கு சுமார் 10 நிமிடங்கள் ஆகலாம். ஆனால் அந்த செயலை செய்து முடித்தபின்னும் மனம் ஒரு புத்துணர்வோடு இருப்பதை நாம் உணர முடியும்.

நீங்கள் நான் யார் என உண்மையாக யோசித்திருக்கிறீர்களா??? நான் யார் என 2 நிமிடம் யோசித்தாலே உள்ளுக்கும் ஒரு இனம் புரியாத பயம் போன்ற உணர்வு ஏற்படலாம். இது மனம் தன்னையே கேட்கும் கேள்வியால் ஏற்படுகிறது. நான் என்பது மனம் மட்டுமே.

உடலில் மனம் எங்கே உள்ளது???

38 comments:

  1. ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்....
    நீங்கள் நான் யார் என உண்மையாக யோசித்திருக்கிறீர்களா??? நான் யார் என 2 நிமிடம் யோசித்தாலே உள்ளுக்கும் ஒரு இனம் புரியாத பயம் போன்ற உணர்வு ஏற்படலாம். இது மனம் தன்னையே கேட்கும் கேள்வியால் ஏற்படுகிறது. நான் என்பது மனம் மட்டுமே.

    உடலில் மனம் எங்கே உள்ளது???

    தொடரட்டும் கனவுகள்..........

    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  2. உங்கள் எழுத்து நடை மிக அற்புதம், நாளுக்கு நாள் மெருகு ஏறிக்கொண்டிருக்கிறது

    ReplyDelete
  3. எஸ்.கே! உங்கள் நடையின் தெளிவு பிரமிக்க வைக்கிறது. கனவுகளின் ஊர்வலம் தொடரட்டும்...

    ReplyDelete
  4. இந்த கட்டுரையை சில திருத்தங்கள் செய்து புத்தகமாக வெளியிடாலம்.நான் உங்களுக்கு உதவுகிறேன்

    ReplyDelete
  5. கனவுகள் தொடர்பான தகவல்கள் அத்தனையும் அருமையும் புதுமையுமானவை.

    ReplyDelete
  6. எஸ் .கே ........கலக்குங்க ...........நல்லா இருக்கு .........எழுத்தின் நடை மெருகேறுகிறது

    ReplyDelete
  7. நண்பா...நைட் உக்காந்து இந்த பதிவா..தூங்குற வழியப்பாருங்க...

    ReplyDelete
  8. //சுவாசம் - நாம் எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதை எல்லா சமயங்களிலும் உணர்வதில்லை. நம் சுவாசத்தை ஆழமாக கவனியுங்கள்.சீராக சுவாசிக்கவும். அதை ஆழமாக உற்று நோக்கவும்//

    யோகாவில் இந்த மாதிரி ஒண்ணு இருக்கும்....யாராவது அதன் பேர சொல்லுங்க...

    ReplyDelete
  9. நான் யார் என்ற கேள்விக்கு விடைதேடுவது போல

    vidai kidaikkumaa? ennum kealviyeaa thokki niTkirathu! bro........

    ReplyDelete
  10. //நான் யார் என 2 நிமிடம் யோசித்தாலே உள்ளுக்கும் ஒரு இனம் புரியாத பயம் போன்ற உணர்வு ஏற்படலாம்//
    ஆமாங்க :)

    ReplyDelete
  11. அருமையான நடை... ஆழ்ந்த சிந்தனை... வாசிக்கத் தூண்டும் சுவாரசியமான எழுத்து வேகம்... நல்லாருக்கு நண்பரே... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. கனவு ஆராய்ச்சிக்கு என்றே ஒரு phd கொடுக்கலாம்.

    ReplyDelete
  13. உணர்ச்சிகள் - நம் உணர்ச்சிகளான கோபம், சந்தோசம், கவலை, வருத்தம், வெறுப்பு போன்ற உணர்வுகளை கற்பனையில் நினைக்கவும். மனதால் உணரவும்.//

    உண்மை. நான் அனுபவித்த உண்மை.

    ReplyDelete
  14. //மாணவன் said...//
    நன்றி நண்பரே!

    //மொக்கராசா said...//
    மிக்க நன்றி! கட்டுரை புத்தகம் போடும் அளவு இருக்கிறதா என்ன?

    //மோகன்ஜி said...//
    மிக்க நன்றிங்க!

    //Riyas said...//
    நன்றி நண்பரே!

    //இம்சைஅரசன் பாபு.. said...//
    ரொம்ப ரொம்ப நன்றிங்க!

    //கொழந்த said...//
    அதுக்கு பேரு பிராணயாமா நண்பா!

    //vinu said...//
    விடை கிடைக்கும் என்பதுதான் உண்மை. ஆனால் அது கிடைக்க கடுமையான முயற்சி தேவை! நன்றி!

    //இளங்கோ said...//
    பயம் மாறும் நண்பரே! நன்றி!

    //ராம்ஜி_யாஹூ said...//
    நன்றி சார்!

    //வின்னர் said...//
    நன்றி நண்பரே!

    //சசிகுமார் said...//
    அந்த அளவுக்கு நான் worth இல்லீங்க நண்பா! நன்றி!

    //தமிழ் உதயம் said...//
    தங்கள் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  15. கனவு பற்றிய ஆராய்ச்சி கட்டுரை அருமை!

    ReplyDelete
  16. /சுவாசம் - நாம் எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதை எல்லா சமயங்களிலும் உணர்வதில்லை. நம் சுவாசத்தை ஆழமாக கவனியுங்கள்.சீராக சுவாசிக்கவும். அதை ஆழமாக உற்று நோக்கவும்//

    யோகாவில் இந்த மாதிரி ஒண்ணு இருக்கும்....யாராவது அதன் பேர சொல்லுங்க.


    அதற்க்கு பெயர் பிரியாணி

    ReplyDelete
  17. //உடலில் மனம் எங்கே உள்ளது??? //

    தெரியல நண்பா! ஒரு கோட்டர் சொல்லன்

    ReplyDelete
  18. அருமை..அருமை..நண்பா..

    ReplyDelete
  19. //அதற்க்கு பெயர் பிரியாணி//

    எப்படிப்பா denim உன்னால மட்டும் இப்படியெல்லாம் முடியுது. சரி, சரி நம்ம கும்மியை தனியா வச்சுக்கலாம்.

    @எஸ்.கே,

    நண்பா, ஒவ்வொரு பதிவுக்கும் ஆழம் அதிகமாயிட்டே போகுது. தொடருங்க...

    ReplyDelete
  20. இப்பெல்லாம் கனவில கூட உங்க பதிவுதான் வருது :-)

    ReplyDelete
  21. தூக்கத்தையும் கனவையும் நல்லா அலசி, வெளுத்துட்டீங்க எஸ்.கே! நன்று!!

    ReplyDelete
  22. //thozhilnutpam said... //
    நன்றி நண்பரே!

    //denim said... //
    தங்கள் புலமை மெய்சிலிர்க்க வைக்கிறது!

    //ராஜகோபால் said... //
    அந்த கடை பக்கத்தில இருக்குங்க! :-)

    //padaipali said... //
    மிக்க நன்றி நண்பா!

    //சு.மோகன் said... //
    மிகவும் மகிழ்ச்சி! நன்றி நண்பரே!

    //எப்பூடி.. said... //
    எதுக்கு வருதுன்னு கண்டுபிடிக்கலாம்! :-) நன்றிங்க!

    //NIZAMUDEEN said... //
    ரொம்ப ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  23. மிக நன்றாக உள்ளது..

    ReplyDelete
  24. தகவல்கள் அத்தனையும் அருமை

    ReplyDelete
  25. அருமை! தொடருங்கள்!

    ReplyDelete
  26. //இப்பெல்லாம் கனவில கூட உங்க பதிவுதான் வருது :-) //

    எல்லடி எல்லாம் பொய் சொல்றாங்க பாருங்க....ஆனாலும் பதிவு அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  27. தங்கள் தளத்தில் இந்த கனவு பற்றிப் பார்வை மேலும் பார்க்கும் ஆர்வத்தைக் கூட்டியுள்ளது.... நாங்கள் வருடத்திற்க சராசரி 1040 கனவுக்க மேல் கண்கிறோமாமே... இந்த ஆர்ஈஎம் பற்றி நான் ஒரு ஆய்வு எழுதினேன்... ஆனால் அத ஒரு புத்தக அச்சீட்டுக்காய் காத்திருப்பதால் அதை பிரசுரிக்க அனுமதியில்லை கட்டாயம் தங்களுக்கு அறியத்தருகிறென்...

    ReplyDelete
  28. இந்த பதிவு எப்போ எழுதினே கனவில் எழுதியதா கனவை பற்றி நிறைய தெரியாத தகவல் எல்லாம் தெரிந்து கொள்ள முடிகிறது உன்னால்

    ReplyDelete
  29. //பிரசன்னா said...//
    நன்றி நண்பரே!

    //அன்பரசன் said...//
    ரொம்ப நன்றிங்க!

    //vanathy said...//
    மிக்க நன்றி!

    //தேவன் மாயம் said...//
    மிக்க நன்றி!

    //rk guru said...//
    :-) ரொம்ப நன்றிங்க!

    //ம.தி.சுதா said...//
    REM பற்றியா மிக்க மகிழ்ச்சி! மிக்க நன்றி நண்பரே!

    //சௌந்தர் said...//
    தூங்காம எழுதினது நண்பா! நன்றி நண்பா!

    ReplyDelete
  30. உங்கள் கனவுகள் பற்றிய ஆராய்ச்சிகள் பிரமிக்க வைக்கிறது.

    //உடலில் மனம் எங்கே உள்ளது??? //
    நிறையப்பேர் இதயத்தை காட்டுவார்கள் ஆனால் அது தவறு என்று நான் நினைக்கிறேன்.நீங்கள் தான் தெளிவுப்படுத்த வேண்டும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  31. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே! எழுகிறேன்!

    //Thanglish Payan said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. கனவுகள் தொடர்பான தகவல்கள் அத்தனையும் அருமை வாழ்த்தக்கள் நண்பா.....
    புத்தகமாக வெளியிடலாமே நண்பரே????????

    ReplyDelete
  33. நல்ல பதிவுங்க.. கனவுகளைப் பற்றி தொடர்ந்து புதுசு புதுசா சொல்லிட்டிருக்கீங்க.. தொடர்ந்து எழுதுங்க..

    மனசு எங்கேயிருக்குன்னு தெரிஞ்சுக்க திரும்பவும் வர்றேன்.. :-))

    ReplyDelete
  34. மிக்க நன்றி! கட்டுரை புத்தகம் போடும் அளவு இருக்கிறதா என்ன?


    உண்மைதான். கடந்த ஒரு வருடத்தில் தமிழ் உதயம் ரமேஷ்க்குப் பிறகு உங்கள் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது

    ReplyDelete
  35. எளிமையான நடை, நல்ல வார்த்தைகள், ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்..

    ReplyDelete