Monday, October 25, 2010

ஃபோட்டோஷாப் 7 - Ghost Image

படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை ரைட்கிளிக் செய்து duplicate செய்து கொள்ளவும். இப்போது duplicate layerஐ தேர்ந்தெடுத்து, Image->Adjustments->Desaturate என்பதை கிளிக் செய்தால் படம் கருப்பு வெள்ளையாகிவிடும்.




இப்போது Filter->Blur-> Motion Blurஐ கிளிக் செய்யவும். Angle 0 எனவும், Distance 95 (இது உங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம்) எனவும் அளிக்கவும்.


பிறகு Layer Mask பட்டனை கிளிக் செய்யவும். இப்போது desaturate blur layerல் ஒரு வெள்ளை கட்டம் வந்திருக்கும். அந்த வெள்ளை கட்டத்தை கிளிக் செய்யவும். பிறகு பிரஷை தேர்ந்தெடுக்கவும். சாஃப் பிரஷை தேர்ந்தெடுங்கள். நிறம் கருப்பாக இருக்கட்டும். opacity 10% கொடுக்கவும். பிரஷை படத்தின் நடுவிலிருந்து கண், மூக்கு, உதடு போன்ற பகுதிகளில் தேய்த்தால் அந்த இடம் மட்டும் தெளிவாகும். தேவையான இடங்களை இப்படி தேய்க்கவும்.


லேயரை ரைட்கிளிக் செய்து Merge layers(Merge down) ஐ கிளிக் செய்யவும். படம் ஒரே படமாகி விடும். பிறகு Filter-> Distort-> Difusse Glow என்பதை கிளிக் செய்யவும். Graininess: 3, Glow Amount: 10, மற்றும் Clear Amount: 10 என கொடுக்கவும். இவற்றை படத்திற்கு தகுந்தவாறு   அட்ஜஸ்ட் செய்யலாம்.


கடைசியாக New Fill Or Adjustment Layer பட்டனை அழுத்தவும். அதில் Solid Colorஐ தேர்ந்தெடுக்கவும். விரும்பிய நிறம் கொடுக்கலாம் (பச்சை கொடுத்தால் நல்லது ). புது லேயர் உருவாகும். Layer Modeல் Color Burn அல்லது Color Dodgeஐ அளிக்கவும். Opacity 10-15க்குள் கொடுக்கவும்.


DEMO:






14 comments:

  1. அழகான பெண்ணை பேய் மாதிரி பயமுறுத்தீட்டீங்களே...நல்ல பதிவு...

    ReplyDelete
  2. நம்ம ரமெஷ் போட்டோவை போட்டு இருக்கலாம்... effect ஏ தேவை பட்டு இருக்காது

    ReplyDelete
  3. //அருண் பிரசாத் said...

    நம்ம ரமெஷ் போட்டோவை போட்டு இருக்கலாம்... effect ஏ தேவை பட்டு இருக்காது
    //

    அடபாவிகளா நான் வராத ஏரியா அப்டின்னா எப்படியெல்லாம் கலாய்க்கிறாங்க. அவர விட கொஞ்சம் அழகா இருக்கன்லே. அந்த பொறாமை.

    ReplyDelete
  4. //அன்பரசன் said...//
    மிக்க நன்றி!

    //வெறும்பய said...//
    நன்றி நண்பரே!

    //ஆர்.கே.சதீஷ்குமார் said...//
    :-) நன்றிங்க!

    //அருண் பிரசாத் said...//
    எஃபக்ட் போட்டாலும் அழகாத்தான் இருப்பார் அவர்!!

    //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said....//
    அநேகமா பொறாமையாகவும் இருக்கலாம்!:-)

    ReplyDelete
  5. சூப்பர் நண்பா

    ReplyDelete
  6. பேய் மாதிரி இருக்கிற பொண்ணுங்க நெறைய மேக்அப் மூலமா அழகா காமிச்சிக்கிறாங்க! இங்கே அப்படியே உல்டாவா!

    ReplyDelete
  7. //padaipali said...//
    நன்றி நண்பரே!

    //சிவா said...//
    நன்றிங்க!!!

    ReplyDelete
  8. nice effect buddy...

    ReplyDelete
  9. //vanathy said...//
    மிக்க நன்றிங்க!

    //harriere said...//
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ஒரு கலைஞன் நினைத்தால் அழகும் படுத்த முடியும் பயமுறுத்தவும் முடியும் என்பதற்கு நல்ல உதாரணம் பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  11. ////Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete