Thursday, October 21, 2010

கனவுகள் 6 - கனவுகள் நினைவில்.....

Nothing happens unless first we dream.  - Carl Sandburg 

1815. நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளுக்கும் பிரஷ்யப் படைகளுக்கும் வாட்டர்லூ(தற்போது பெல்ஜியத்தில் உள்ளது) என்ற இடத்தில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது.  ஒரு நாள் இரவு நெப்போலியனுக்கு ஓர் கனவு வந்தது அதில் ஒரு கருப்பு பூனை அவரின் படைகளும் பிரஷ்ய படைகளும் என முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தது.

மறுநாள் போரில் பிரெஞ்சுப் படைகள் கடும் வீழ்ச்சியடைந்து போரில் தோற்றன. அந்த தோல்வியே நெப்போலியனின் சாம்ராஜ்யத்திற்கும் முற்றுப் புள்ளியாக அமைந்தது.
*************
Elias Howe ஒரு தையல் இயந்திரத்தை உருவாக்க மாதக் கணக்கில் முயன்று கொண்டிருந்தார். அவர் நடுவில் ஒரு ஓட்டை உள்ள ஊசியை பயன்படுத்தி தைத்தார். ஆனால் தையல் சீக்கிரத்தில் பிரிந்தி விடுகின்றது. ஒரு நால் அவர் கனவில் அவரைச் சுற்றி காட்டுமிராண்டிகள் நின்று கொண்டு ஈட்டி வேல்கம்புகளை சுழற்றி பயமுறுத்துவதை கண்டார். அந்த எல்லா ஆயுதங்களின் முனைகளின் நடுவிலும் ஓட்டை இருந்தது.

கனவில் இருந்து விழித்த அவர் தன் தையல் ஊசியில் முனையின் நடுவில் ஓட்டை உருவாக்கினார். தையல் இயந்திரம் உருவாயிற்று.

___________________________________

கனவைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் ஓரளவு தெரிந்து கொண்டீர்கள். சரி. ஆனால் கனவு எனக்கு ஞாபகம் இருந்தால்தானே அதைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் என சிலர் கூறலாம். கனவை நினைவில் வைக்க சில வழிகள் உள்ளன.


 • படுக்கச் செல்லும் முன், கனவுகளை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் உங்களிடம் நீங்களே வாய்விட்டுச் சொல்லுங்கள். வெறுமனே மனதிற்குள் சொல்வதை விட வாய்விட்டுச் சொல்வது மிகுந்த பலனளிக்கு. உங்கள் குரல்வளை செயல்பாடு, நரம்பு மண்டலத்தில் ஒரு பணியை திட்டமிட உதவுகிறது.

 • கனவுகளை குறித்து வைக்க என்று ஒரு நோட்டை உருவாக்குங்கள். ஒவ்வொரு நாள் கனவில் வந்த உருவங்கள் குறியீடுகள் பற்றி அதில் குறித்து வையுங்கள். அந்த நோட்டு உங்கள் படுக்கைக்கு அருகில் இருக்க வேண்டும். இந்த நோட்டு கனவிற்கான எதிர்பார்ப்பை தூண்டும் பொருளாக செய்லபடுகிறது. டார்ச் லைட்கள், சில பேனாக்கள் போன்றவற்றை அருகில் வைக்கவும். சிலருக்கு குவார்ட்ஸ்(படிகக் கல்) கூட கனவிற்கான அலைவரிசைக்கு உதவும் பொருளாக இருந்துள்ளது. அந்த கனவை குறிக்கும் நோட்டில் ஒவ்வொரு நாள் தூங்கச் செல்லும் முன் அன்றைய தேதியை எழுதவும். இது கனவை ஞாபகம் வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கும்.


 • முடிந்தவரை இயல்பாக (அலாரம் இல்லாமல்) எழுந்திருக்க பாருங்கள். தூங்கும்  முன் அதிகமாக தண்ணீர் குடிப்பது எழுந்திருக்க வைக்கும் கனவை நினைவில் வைக்க உதவும்.


 • படுக்கும் முன் ஓய்வாக இருக்கவும். (முடிந்தால் குளிக்கலாம்).  படுக்கும் நிலை, படுக்கும் நேரம், எழுந்திருக்கும் நேரம் போன்றவற்றை ஒரே மாதிரியாக அமைத்துக் கொள்ளவும். தூங்கும் முன் மிகப் பலமாக உண்ண வேண்டாம். 


 • கனவிலிருந்து விழித்தவுடன் உங்களுக்கு உடனே எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை என்றால் உங்கள் உடல் உணர்வுகளை ஆழமாக கவனியுங்கள். கனவிலிருந்து எழுந்திருக்கும்போது உடல் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையில் படுக்கவும்(கனவு காணும்போது உடல் திரும்பியிருந்திருக்கலாம்). உடலில் என்னென்ன மாற்றங்கள்(கிளர்ச்சி, அயர்ச்சி, நடுக்கம் போன்றவை) ஏற்பட்டுள்ளது என கவனியுங்கள். கனவிலிருந்து விழித்த பின் உங்கள் உணர்ச்சிகள் அதாவது வாசனை, சுவை, தொடு உணர்வு, கேட்குதல், பார்வை போன்றவற்றில் ஏதாவது மாற்றம் உள்ளதா என கவனியுங்கள். இவையெல்லாம் கனவை நினைவுக்கு கொண்டு வர உதவும். ஆனால் மிகுந்த பலவந்தமாக கனவை நினைவுபடுத்த முயற்சிக்க வேண்டாம்.


 • கனவிலிருந்து விழித்த உடன் அதைப் பற்றி மேற்கண்டவாறு செய்த பின் அதை எழுதி வைக்கவும். அதற்காகத்தான் பொருட்கள் படுக்கைக்கு அருகில் இருக்க வேண்டும். கனவை பற்றி எழுதி வைக்கும் பொழுது உங்கள் மனதில் வரும் அனைத்தையும் எழுதவும். - நிறங்கள், உருவங்கள், ஒலிகள், சுவை, வாசனை, பேச்சுக்கள், சூழ்நிலை அமைப்புகள், உணர்ச்சிகள், உணர்வுகள் எல்லாவற்றையும் எழுதவும். அது மட்டுமில்லாது கனவை ஒரு சம்பவம் போல நீங்க விவரிப்பது போலவும் எழுதி வைக்கவும்.

கனவை ஞாபகம் வைக்க மருந்துகள் கூட உண்டு ஆனால் அவற்றை மருத்துவர் பரிந்துரைபடியே பயன்படுத்த வேண்டும். கனவுகளை நினைவில் கொள்ள மேலும் சில மனோதத்துவ முறைகளும் உள்ளன அவற்றை வரும் பதிவுகளில் பார்ப்போம்.

பல விசயங்களின் பலன் புரியாவிட்டாலும் செய்துபார்க்கும்பொழுது அதன் பயனையும் மாற்றத்தையும் நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

___________________________

80% பிறந்த குழந்தைகள், கைக்குழந்தைள் REM வகை தூக்கத்தில் பெருமளவு நேரத்தை தூக்கத்தில் கழிக்கின்றனர். காயம்/விபத்து ஏற்பட்டவர்கள் அந்த சூழ்நிலைகளில் அதை சம்பந்தமாக கனவுகளை அதிகமாக காண்கிறார்கள்.
பெரியவர்களை விட குழந்தைகள் அதிகமாக மிருகங்கள பற்றி கனவு காண்கிறார்கள். சிறுவயது கனவுகள் பெரியவர்களின் கனவுகளை விட சிறியதாக இருக்கும். அவற்றில் 40% பயங்கர கனவுகளாக இருக்கும். சிறுவயதில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பார்த்தவர்கள் சிறுவயதில் கலர் டிவிக்களை பார்ப்பவர்களை விட அதிகமாக கருப்பு- வெள்ளை நிறத்தில் கனவு காண்கிறார்கள். இனி வரும் பதிவுகளில் கனவுகள் வரும் உருவங்கள் அதை சார்ந்த நம்பிக்கைகளை பற்றி காணலாம்.

____________________

ஒரு சிறு மேஜிக்: நாற்காலியிலோ அல்லது தரையில் சுவற்றின் ஓரமாகவோ வசதியாக உட்காரவும். கைகளை மடியில் உங்கள் உள்ளங்கைகளை ஒன்றோடொன்று பார்க்குமாறு வைக்கவும். கைகள் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். கண்களை மூடவும். உள்ளங்களைகளுக்கு இடையில் சிறிது இடைவெளி இருக்க வேண்டும். கைகளை சுழற்றுவது போல ஆட்டவும் (கிட்டதட்ட சிறுவர்கள் ரயில் ஓட்டி காண்பிப்பது போல). கொஞ்ச நேரத்தில் கைகளுக்கு இடையில் ஒரு பந்து உருளுவதை போல நீங்கள் உணரலாம்.

38 comments:

 1. கனவைப்பற்றி அருமையாக ஆராய்ந்து எழுதி வருகீறீர்கள் சூப்பர் உங்கள் பதிவைப்படித்துதான் கனவில் கூட இவ்வளவு விடயங்கள் உள்ளது என்பதை தெரிந்துகொண்டேன்
  புகைப்படங்கள் தொகுப்பு சிறப்பாக உள்ளது
  உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...
  தொடரட்டும் கனவுகள்...

  என்றும் நட்புடன்
  மாணவன்

  ReplyDelete
 2. //கனவில் இருந்து விழித்த அவர் தன் தையல் ஊசியில் முனையின் நடுவில் ஓட்டை உருவாக்கினார். தையல் இயந்திரம் உருவாயிற்று.//

  அப்படியா?
  புதுசா இருக்கே!!!!!

  ReplyDelete
 3. தெரிந்திராத பல தகவல்களும்.. அறிய வேண்டிய பல விசயங்களும்... அருமையான பதிவு..

  ReplyDelete
 4. கனவை ஞாபகம் வைக்க மருந்துகள் கூட உண்டு ஆனால் அவற்றை மருத்துவர் பரிந்துரைபடியே பயன்படுத்த வேண்டும். கனவுகளை நினைவில் கொள்ள மேலும் சில மனோதத்துவ முறைகளும் உள்ளன அவற்றை வரும் பதிவுகளில் பார்ப்போம்.


  .....இதுக்குமா மெமரி பிளஸ் மருந்து? அவ்வ்வ் ....

  ReplyDelete
 5. நல்ல புரிதலான பதிவு....அருமை வாழ்த்துகள்

  ReplyDelete
 6. ஒரு ஆவணப்படம் பார்ப்பது போல இருக்கிறது உங்கள் இடுகை... வாழ்த்துகள்...

  ReplyDelete
 7. கனவுகளுக்கு முக்கியத்துவம் தரும் இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது..இன்று முதல் கனவுகளை நோட் பண்ணிட வேண்டியதுதான்

  ReplyDelete
 8. //உங்கள் குரல்வளை செயல்பாடு, நரம்பு மண்டலத்தில் ஒரு பணியை திட்டமிட உதவுகிறது//

  Fifth chakra...

  நண்பா ரொம்ப நன்றாகப் போகிறது. ஆல்ஃபா, பீட்டா waves பத்தியும் சொல்லுங்க...

  ReplyDelete
 9. உண்மைலேயே கலக்கலா இருக்குங்க ..!!
  சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க .. ஆனா கனவ நியாபகம் வச்சிக்க இவ்ளோ பண்ணனுமா ..? அந்த மேஜிக் பண்ணிப் பாக்குறேங்க ..!!

  ReplyDelete
 10. உண்மையிலேயே நல்ல ஆராய்ச்சி.... இவ்வளவு விஷயம் இருக்கா?

  ReplyDelete
 11. நிறைய தண்ணிகுடிச்சா கனவு ஞாபகம் இருக்குமா?? ட்ரை பண்ணிப் பார்க்கறேன்..

  நிறைய புதிய தகவல்களைத் தந்திருக்கீங்க.. நன்றி..

  நான் கண்ட ஒரு கனவைப் பற்றி முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன்.. நேரமிருக்கும் போது படிங்க..
  http://abdulkadher.blogspot.com/2010/08/2007.html

  ReplyDelete
 12. உங்கப் பதிவுல ஓட்டுப்பெட்டி ஏதும் வைக்கறது இல்லையா.. நான் எப்படி ஓட்டு போடறது??

  ReplyDelete
 13. சார் இது வரை கனவை பற்றி இப்படி ஒரு பதிவினை வேறு எங்கும் பார்த்ததில்லை. வித்தியாசமான முயற்சி மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

  ReplyDelete
 14. "உள்ளங்களை" என்பதை "உள்ளங்கைகளை" என மாற்றவும்.

  ReplyDelete
 15. //சிறுவயதில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பார்த்தவர்கள் சிறுவயதில் கலர் டிவிக்களை பார்ப்பவர்களை விட அதிகமாக கருப்பு- வெள்ளை நிறத்தில் கனவு காண்கிறார்கள்//

  அப்படியா... ஆச்சரியமா இருக்கே எஸ்.கே... நன்றி.

  ReplyDelete
 16. கனவுகளில் கூட பெரியவருக்கும், சிறியவருக்கும் வித்தியாசம் உள்ளதா. ஆச்சர்யம் தான்.

  ReplyDelete
 17. கனவே கலையாதே அப்படின்னு இருக்கணும் போலருக்கே. நல்லா டீப்பா போறீங்க. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 18. கனவுகள் பற்றி இவ்வளவு இருக்கிறதா.. ?
  நன்றாக இருக்கிறது பதிவு.

  ReplyDelete
 19. //மாணவன் said... //
  நன்றி நண்பரே!

  //அன்பரசன் said... //
  ஆமாங்க பல கண்டுபிடிப்புகள் கனவினால் உருவாகியுள்ளது! நன்றி!

  //வெறும்பய said... //
  :-) மிக்க நன்றிங்க!

  //rk guru said... //
  ரொம்ப நன்றிங்க!

  //adhithakarikalan said... //
  மிக்க நன்றி நண்பரே!

  //ஆர்.கே.சதீஷ்குமார் said... //
  நோட் பண்ணுங்க! நன்றி!

  //சு.மோகன் said... //
  நிச்சயம் எழுதுகிறேன் நண்பரே! நன்றி!

  //ப.செல்வக்குமார் said... //
  இவ்வளவும் பண்ண ஆரம்பித்தால் தானாக ஞாபகம் வைக்க தொடங்கும் மனது நாளடைவில் இவை தேவைப்படாமல் போகலாம்! மேஜிக் அனுபவம் பற்றி சொல்லுங்கள்! நன்றி!

  //அருண் பிரசாத் said... //
  இன்னும் நிறைய இருக்கு! ரொம்ப நன்றிங்க!

  //பதிவுலகில் பாபு said... //
  நன்றிங்க! தங்கள் பதிவை நிச்சயம் படிக்கிறேன்!
  ஓட்டு நமக்கு வேண்டாம்னு வைக்கலை!

  //சசிகுமார் said... //
  தாங்கள் சொன்னதை மாற்றிவிட்டேன்! நன்றி! மிக்க நன்றி!

  //RNS said... //
  ரொம்ப நன்றி நண்பரே!

  //தமிழ் உதயம் said... //
  நன்றிங்க!

  //RVS said... //
  மிக்க மிக்க நன்றி!

  //இளங்கோ said... //
  மிகுந்த நன்றி!

  ReplyDelete
 20. கனவைப்பற்றிய அலசல் அருமை.

  ReplyDelete
 21. கனவுகளைப் பற்றிய நிறைய தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். நன்றிகள்... நிறைய மெனக்கெட்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.
  தொடரட்டும் உங்கள் பணி...

  கனவுகள் பற்றி பதிவுகள் எழுத வேண்டும் என்பது கூட, கனவில் கண்டெடுத்த ஐடியா வா?

  ReplyDelete
 22. அருமைங்க நண்பரே..! மிகவும் விரிவான அலசல். கனவுகளுக்குள் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா என வியக்க வைக்கும் விதமான தகவல்கள்..! இன்னும் நிறைய தகவல்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..!!

  ReplyDelete
 23. படுக்கும் முன் மொக்கை பதிவுகளை படிப்பதை தவிர்க்கவும்...

  முக்கியமாக மொக்கையர்களுடன் chat செய்வதை முற்றிலும் தவிர்த்தல் உடல்நலத்திற்கு நல்லது...

  ReplyDelete
 24. வேலைப்பளு காரணமாக உடன் வராமைக்கு வருந்துகின்றேன்.

  உங்கள் பதிவுகள் மென்மேலும் சிறந்துகொண்டிருக்கின்றன என்பதட்க்கு இப்பதிவும் ஒரு சாட்சி

  ReplyDelete
 25. //ஸாதிகா said...//
  நன்றிங்க!

  //பாரத்... பாரதி... said...//
  நன்றிங்க வருகைக்கு! இது கனவுப் பதிவு!:-)

  //பிரவின்குமார் said...//
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!


  //கொழந்த said...//
  நேற்று அப்படி செஞ்சிட்டுதானே இந்த பதிவு எழுதினேன்!:-)

  //மகாதேவன்-V.K said...//
  வருந்த வேண்டாம். நேரம் கிடைக்கும்போது வாருங்கள் நண்பரே! நன்றி!

  ReplyDelete
 26. கனவுகள் பற்றி இவ்வளவு இருக்கிறதா.. ?
  நல்ல பதிவு.

  நல்ல

  ReplyDelete
 27. கனவுகள் பற்றி இவ்வளவு இருக்கிறதா..
  நல்ல பதிவு.

  ReplyDelete
 28. வாவ்..எத்தனைக் கனவுகள் நண்பரே.அருமை..

  ReplyDelete
 29. அனுபவித்து எழுதுகிறீர்கள்... வாழ்க.. வாழ்க

  ReplyDelete
 30. கடவுளே.. கனவில இவளவு இருக்கா..

  ReplyDelete
 31. //Kanchana Radhakrishnan said...//
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

  //ராஜ ராஜ ராஜன் said...//
  மிக்க நன்றிங்க!

  //padaipali said...//
  நன்றி நண்பரே!

  //மோகன்ஜி said...//
  ரொம்ப ரொம்ப நன்றி!

  //சுசி said...//
  ஆமாங்க! :-) நன்றி!

  ReplyDelete
 32. கனவு மறக்காம இருக்க உங்க டிப்ஸ் ரொம்ப உதவியா இருக்கும் நினைக்கிறன் :)

  ReplyDelete
 33. நல்ல பதிவு. அப்படியே கனவுகளின் அர்த்தங்களைப் பற்றியும் தெரிந்தால் எழுதுங்க.

  ReplyDelete
 34. //சௌந்தர் said...//
  நல்லது நண்பா!

  //vanathy said...//
  நிச்சயம் எழுதுகிறேன்! நன்றிங்க!

  ReplyDelete
 35. VERY USEFULL, கனவு மறக்காம கண்டிப்பாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமா நண்பரே. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 36. //Thomas Ruban said...//
  நண்பா! கனவு என்பது நம்மிடம் நம் ஆழ்மனம் சொல்ல விரும்புவதாகும்! அதை நாம் அறிய விரும்பினால் கனவை ஞாபகம் வைப்பது அவசியம்!

  ReplyDelete
 37. benzene structureஇன் மர்மம் கூட கனவு மூலமாக அவிழ்க்கப்பட்டது தான் , தங்கள் பதிவு மிகவும் அருமை

  ReplyDelete