Tuesday, October 5, 2010

அடோப் ஃபிளாஷ் (56) - Blink Presentation

உங்களுக்குத் தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு படத்திற்கு 35 பிரேம்கள் கணக்கு. ஒவ்வொரு படத்தையும் தனித் தனி லேயர்களில் வைத்தால் நல்லது.

சரி. முதலில் 1வது பிரேமில் படத்தை எடுத்துக் கொள்ளவும். பிறகு F6ஐ அழுத்தி 5வது பிரேம் வரை கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 2 மற்றும் 4 ஆகிய பிரேம்களில் கிளிக் செய்து டெலீட் பட்டனை அழுத்தி கீபிரேமை நீக்கவும்.



பிறகு 30வது பிரேமில் கீபிரேமை இன்சர்ட்ச் செய்யவும். பிறகு 35வது பிரேம் வரை கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 31 , 33, 35 ஆகிய பிரேம்களில் கிளிக் செய்து டெலீட் பட்டனை அழுத்தி கீபிரேமை நீக்கவும்.
ஒரு படம் முடிந்து விட்டது. இனி அடுத்த படம்.

புதிய லேயரை உண்டாக்கவும். அதன் 36வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert keyframe என்பதை கிளிக் செய்யவும். 40வது பிரேம் வரை  கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 37 மற்றும் 39 ஆகிய பிரேம்களில் கிளிக் செய்து டெலீட் பட்டனை அழுத்தி கீபிரேமை நீக்கவும்.
பிறகு 65வது பிரேமில் கீபிரேமை இன்சர்ட்ச் செய்யவும். பிறகு 70வது பிரேம் வரை கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 66, 68, 70 ஆகிய பிரேம்களில் கிளிக் செய்து டெலீட் பட்டனை அழுத்தி கீபிரேமை நீக்கவும்.
இரண்டாவது படமும் முடிந்து விட்டது. இதே போல் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

DEMO:



19 comments:

  1. நல்ல பதிவுங்க.உபயோகமான தகவல்கள்

    ReplyDelete
  2. //மோகன்ஜி said...//
    நன்றிங்க!

    ReplyDelete
  3. கலக்குறீங்க நண்பா...

    ReplyDelete
  4. //padaipali said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. பாஸ், எப்படி பிளாஷ் பைல்களை பதிவில் இணைப்பது?

    Like FLA or EXE files

    ReplyDelete
  6. //அருண் பிரசாத் said...//
    உங்கள் வேலையை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

    பிறகு அந்த swf ஃபைலை பதிவில் இணைக்கும் முறையை இங்கே காண்க.

    ReplyDelete
  7. செய்து பார்கிறேன். நன்றி எஸ் கே

    ReplyDelete
  8. நல்ல டிப்ஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. //சசிகுமார் said...//
    மிக்க நன்றி!

    ReplyDelete
  10. நண்பரே எனக்கு adobe flash என்றாலே கொஞ்சம் அலர்ஜி .. இருந்தாலும் முயற்சி செய்து பார்கிறேன் .... எனக்கு ஒரு பெரிய சந்தேகம் அனிமேஷன் பைல்களை எப்படி நம் பதிவில் இணைப்பது? அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ....

    ReplyDelete
  11. //"ராஜா" said...//
    ஃபிளாஷ் அனிமேஷன் ஃபைல்கள் swf வடிவில் இருக்கும் அவற்றை பதிவில் இணைக்கும் முறையை இங்கே காண்க.

    ReplyDelete
  12. அட வழக்கம் போல மின்னல் அடிக்குதுங்க ..!!

    ReplyDelete
  13. //ப.செல்வக்குமார் said...//
    நன்றி!

    ReplyDelete
  14. அருமை,பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  15. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. நல்லா இருக்கு தல
    நம்ம பக்கம் வந்ததுக்கு நன்றி !

    ReplyDelete
  17. //குத்தாலத்தான் said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete