Wednesday, October 6, 2010

அடோப் ஃபிளாஷ் (57) - Advance light effect

இது கிட்டத்தட்ட ஒரு டார்ச் லைட் எஃபக்ட் தரும்.

புதிய ஆக்சன்ஸ்கிரிப் 2.0 கோப்பை திறந்துகொள்ளவும்.

உங்களுக்கு தேவையான படத்தை எடுத்து கொள்ளவும். அதை சிம்பலாக மாற்றவும். Typeல் Movie clipஐ தேர்ந்தெடுக்கவும்.




அந்த படத்தை கிளிக் செய்யவும். கீழே filters பேனலை கிளிக் செய்து +ஐ கிளிக் செய்து Adjust Colorஐ தேர்ந்தெடுக்கவும். Brightness: -93, Contrast: -41, Saturation: -100 என கொடுக்கவும்.


புதிய லேயரை உருவாக்கவும். லைப்ரரிலிருந்து சிம்பலை ஸ்டேஜுக்கு  எடுத்துக் கொள்ளவும். அதன் Instance Nameல் top_picture என கொடுக்கவும்.


புதிய லேயரை உருவாக்கவும். ஓவல் டூலால் ஒரு வட்டம் வரையவும். (Fill மட்டும் Outline இல்லாமல்). வட்டத்தை கிளிக் செய்யவும். வலது பக்கம் color பேனலுக்கு செல்லவும். அங்கே Fillஐ கிளிக் செய்யவும். பிறகு typeல் Radial என்பதை தேர்ந்தெடுக்கவும்.  கீழே பாக்ஸில் நடுவில் கருப்பு நிறமும், வலது பக்கம் வெள்ளை நிறமும் இருக்குமாறு அமைக்கவும் வெள்ளை நிறத்தின் Alphaவை 0% என கொடுக்கவும்.

பிறகு வட்டத்தை ரைட்கிளிக் செய்து சிம்பலாக  மாற்றவும். Typeல் Movie clipஐ தேர்ந்தெடுக்கவும். அதன்  Instance Nameல் GradientCircle என கொடுக்கவும்.


புதிய லேயரை உருவாக்கவும். முதல் பிரேமை ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்யவும். பாக்ஸில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.

top_picture.cacheAsBitmap = true;
GradientCircle.cacheAsBitmap = true;

top_picture.setMask(GradientCircle);

Mouse.hide();

this.onMouseMove = function() {
    GradientCircle._x = this._xmouse;
    GradientCircle._y = this._ymouse;
    updateAfterEvent();
}

this.onMouseDown = function() {
    top_picture.cacheAsBitmap = false;
}

this.onMouseUp = function() {
    top_picture.cacheAsBitmap = true;
}

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:



28 comments:

  1. நண்பா..ரொம்ப நாள் ஆச்சு..உங்களுக்கு கமெண்ட்டிட்டு....இந்த அடோப் ஃபிளாஷ தவிர வேற sw பத்தி எப்ப ஆரம்பிப்பீங்க.....

    ReplyDelete
  2. /Chitra said..//
    நன்றிங்க!

    //கொழந்த said... //
    நன்றி நண்பா! கூடிய சீக்கிரம் வேறு மென்பொருள் பற்றி போடுவேன்.

    //அன்பரசன் said... //
    நன்றி நண்பரே!

    //Muniappan Pakkangal said... //
    நன்றி சார்!

    ReplyDelete
  3. நச்சின்னு இருக்கு நண்பா...

    ReplyDelete
  4. //padaipali said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. அருமை இது சூப்பரா இருக்கே

    ReplyDelete
  6. நண்பரே உங்கள் தளத்தில் இன்ட்லி ஓட்டு பட்டையை காணவில்லை எங்கே.

    ReplyDelete
  7. //சசிகுமார் said... //
    நன்றி நண்பரே! எனக்கு ஓட்டு பட்டை வைப்பதில் விருப்பமில்லை நண்பரே அதுதான் வைக்கவில்லை!

    ReplyDelete
  8. அட , கலக்கலா இருக்குங்க , இப்படித்தான் இந்த படத்துல எல்லாம் லைட் அடிச்சு காட்டுறாங்களா .!!

    ReplyDelete
  9. செமையா இருக்குங்க....

    ReplyDelete
  10. // rk guru said...//
    நன்றி நண்பரே!

    //அருண் பிரசாத் said...//
    நன்றிங்க!

    ReplyDelete
  11. எஸ்.கே.. இந்த தொடரை புத்தகமாய் வெளியிட முயலுங்கள். வலைத் தொடர்பு இல்லாத பலருக்கும் போய்ச சேரும்.வாழ்த்துக்கள், உங்கள் உழைப்புக்கும் பொறுமைக்கும்

    ReplyDelete
  12. //ஜீ... said...//
    நன்றி சகோதரரே!

    //மோகன்ஜி said..//
    நன்றி! இந்த தொடரை முழுமையாக முடித்த பின் மின் புத்தகமாக வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  13. பதிவெல்லாம் வேகமாகத்தான் செல்கிறது நான்தான் தாமதம்
    அருமை நண்பரே தொடருங்கள்

    ReplyDelete
  14. நண்பா,... அந்த அளவிற்கு அடோப் ஃபிளாஷ் புரியவில்லை.... பொருமையாக கற்றுகொள்கின்றேன்..... உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்....

    உங்களின் தளம் எனக்கு எழுத்துகள் விட்டு விட்டு தெரிகின்றது.. இன்றுதான் ஓரளவிற்கு சரியாக பார்க்க முடிகின்றது. என்ன காரணம் என்று புரியவில்லை

    ReplyDelete
  15. //மகாதேவன்-V.K said...//
    நன்றி! பொறுமையாய் வந்து படித்தாலே போதும். இதை ஒரு மின் நூலகம் போல அமைக்கவே விரும்புகிறேன்.

    //ஆ.ஞானசேகரன் said...//
    நன்றி! டெம்ப்ளீட் மாற்றுகிறேன் பிரச்சினை சரியாகலாம்.!

    ReplyDelete
  16. அடேயப்பா இது நுணுக்கமான வேலை ஆனா ரிசல்ட் பக்காவா இருக்கே

    ReplyDelete
  17. புது டேம்பிளேட் நல்லா இருக்கு

    ReplyDelete
  18. //ஆர்.கே.சதீஷ்குமார் said... //
    நன்றி!

    ReplyDelete
  19. மிக பிரமாதமாக உள்ளது பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே....

    ReplyDelete
  20. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. சூப்பர இருக்குங்க

    நல்ல தெளிவான விளக்கம்

    ReplyDelete
  22. //யாதவன் said...//
    நன்றிங்க!

    ReplyDelete
  23. நல்ல எஃபக்ட்.. நல்ல விளக்கம்..

    எளிமை..!

    நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  24. //தங்கம்பழனி said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete