Friday, October 22, 2010

ஃபோட்டோஷாப் 6 - Reflections in Sunglass

முதலில் ஒரு கூலிங் கிளாஸ் உள்ள படத்தை எடுத்துக் கொள்ளவும்.
பிறகு செலக்சன் டூல்களை பயன்படுத்தி ஒரு பக்க கூலிங்கிளாஸின் உட்பக்த்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

புதிய லேயரை உருவாக்கவும். பிறகு Edit->Fill என்பதை கிளிக் செய்து use என்பதில் Blackஐ கொடுக்கவும். இப்போது புதிய லேயரில் செலக்ட் ஆன பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.




புதிய லேயரை உருவாக்கவும். அடுத்து கூலிங்கிளாசில் தெரிய வேண்டிய படத்தை திறந்தது காபி செய்து புதிய  லேயரில் பேஸ்ட் செய்யவும்.



பிறகு controlஐ அழுத்திக் கொண்டே கருப்பு பகுதி லேயரை கிளிக் செய்தால் அந்த கருப்பு பகுதி மட்டும் செலக் ஆகும்.  பிறகு படம் இருக்கும் லேயரை  ரைட்கிளிக் செய்து create clipping mask  என்பதை கிளிக் செய்தால் கூலிங்கிளாஸ் பகுதியில் மட்டும் அப்படம் தெரியும். கூலிங்கிளாசுக்கு தகுந்தவாறு படத்தின் அளவை மாற்றலாம்.


பிறகு செலக்சனை டீசெலக்ட் செய்து விட்டு கூலிங்கிளாசில் உள்ள படத்தின் அளவை தகுந்தவாறு அமைக்கவும். பிறகு blending optionல் inner shadowஐ கொடுக்கவும்.

அதை ரைட்கிளிக் செய்து duplicate layerஐ உருவாக்கவும் அதுவும் clipping mask உடன் இருக்கும். அதன் blending modeஐ multiple எனவும் opacityஐ தகுந்தவாறு(80%) கொடுக்கவும். புதிய லேயரை உருவாக்கவும்.


புதிய லேயரை உருவாக்கி gradientஐ படத்தில் உள்ளவாறு அமைக்கவும். பிறகு மீண்டும் கூலிங்கிளாஸ் கருப்பு பகுதி லேயரை controlஐ அழுத்திக் கொண்டே கிளிக் செய்யவும். மீண்டும் புதிய லேயரை கிளிக் செய்து கிரேடியண்டை இழுக்கவும். இது கூலிங்கிளாஸின் ஒரத்தில் வெளிச்சத்தை தருவதற்காகும்.

இதேபோல் கூலிங்கிளாசின் மற்றொரு பக்கத்திற்கும் செய்யவும்.

DEMO:





10 comments:

  1. //மகேஷ் : ரசிகன் said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. கலக்கல் மேன்.

    ReplyDelete
  3. //padaipali said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. நல்ல பதிவுங்க! very good job!

    ReplyDelete
  5. //மோகன்ஜி said...//
    மிக்க நன்றிங்க!

    //வெறும்பய said...//
    நன்றி நண்பா!

    ReplyDelete
  6. அருமை நன்றி நண்பரே...

    ReplyDelete
  7. //Thomas Ruban said...//
    மிக்க நன்றி!

    ReplyDelete