Friday, October 15, 2010

கனவுகள் 4 - மனம் படிநிலைகள்

நாம் கனவை உண்மையென்று உணர்கிறோம் ஏனெனில் அது உண்மைதான்... ஆச்சரியம் என்னவெனில், நம் மூளை நாம் விழித்திருக்கும்போது, நாம் வாழ்கின்ற உலகத்தின் அனைத்து உணர்வுகளைப் போலவே, கனவிலும் எந்த வித புலன் உறுப்புகளின் உதவியின்றி உருவாக்குகிறது.
---William Dement

அமெரிக்க எழுத்தாளர், மார்க் ட்வைன், மற்றும் அவர் சகோதரர் ஹென்றி மிசிசிபி ஆற்றங்கரையில் ஆற்றுப்படகுகள் சம்பந்தமான வேலையில்
ஈடுபட்டிருந்தனர். ஒரு நாள் இரவு, மார்க் ட்வைனுக்கு ஒரு கனவு வந்தது. அதில் அவருடைய சகோதரியின் அறையில், அவர் சகோதரரின் உடல் ஒரு உலோக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த சவப்பெட்டி இரண்டு நாற்காலிகளின் மேல் வைக்கப்பட்டிருந்தது. அதன் மையத்தில் ஒரு மலர்ச்செண்டும் ஒரு ஒற்றை கிரிம்சன் மலரும் வைக்கப்பட்டிருந்தது. மார்க் டவைன் இக்கனவை பற்றி தன் சகோதரியிடம் கூறினார்.

இரண்டு வாரங்கள் கழித்து, அவருடைய சகோதரர் ஒரு ஆற்றுப் படகில் ஒரு பெரிய வெடிவிபத்தில் இறந்தார். அவருடன் பல பேர் இறந்தனர். அனைவரின் உடலும் மரச் சவப்பெட்டிகளில் புதைக்கப்பட்டன. ஆனால் மார்க்கின் சகோதரி தன் சகோதரர் ஹென்றிக்காக பணம் செலவழித்து ஒரு விலையுயர்ந்த உலோக சவப்பெட்டியை வாங்கியிருந்தார். ஈமச்சடங்கின் போது அச்சவபெட்டியை பார்த்து அதிர்ந்தார். அது அவரின் கனவில் வந்தது போலவே இருந்தது. அவர் ஹென்றியின் பேழைக்கு அருகில் நின்றிருக்கும்போது, ஒரு பெண் ஒரு பூங்கொத்தையும், ஒரு ஒற்றை சிவப்பு ரோஜாவையும் அதன் நடுவில் வைத்தார்.
________________________________ 


நம் மனம் மூன்று நிலைகளால் ஆனது Conscious, Unconscious மற்றும் Subconscious. நாம் பிறந்தது முதல், நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும், பேசும், உணரும், நினைக்கும் அனைத்து விசயங்களும் நம் மனதில் பதிகின்றன. கிட்டத்தட்ட கணிப்பொறியில் ஆங்காங்கே நோட்பேடில் குறிப்புகள் எழுதி வைப்பது போல. இதில் நாம் பயன்படுத்தாவை, ஒதுக்குபவை, விரும்பாதவை போன்ற விசயங்கள் தானாக ஆழ்மனதுக்கு(அன்கான்ஷியஸ்) செல்கின்றன. நாம் அவ்வப்போது நினைப்பவை சாதாரண(கான்ஷியஸ்) மனதில் இருக்கின்றன. சில சமயம் பல நாட்கள் கழித்து சந்திப்பவரின் பெயரை நாம் ஞாபகப்படுத்த சிரமப்படுகிறோம் அல்லவா? அப்பெயர் பயன்படுத்தாததால் ஆழ்மனதில் உள்ளது. அது கான்ஷியஸ் மனதிற்கு கொண்டு வர நாம் முயற்சிக்கிறோம்.

சப்கான்ஷியஸ் மனது என்பது இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை. கிட்டதட்ட திரிசங்கு சொர்க்கம் போல!:-) (சில உளவியலாளர்கள் சப்கான்ஷியஸ் என்ற ஒன்றை குறிப்பிடாமல் அதையும் ஆழ்மனதுடனே(அன்கான்ஷியஸ்) ஒப்பிடுவார்கள்). ஒரு சிறு சம்பவம். ஒருவருக்கு காதல் தோல்வி. அவரின் முதல் காதல் அது. மிகவும் ஆழமாக நேசித்தார். காதல் முறிந்துவிட்டது. அவர் தன் காதலியை மறக்க முயற்சிக்கிறார். நாளடைவில் மறக்கிறார். அவருக்கு புது உறவுகள் ஏற்படுகின்றன. திருமணமாகி பற்பல வருடங்கள் பிறகும் அவருக்கு மனைவியுடன் அடிக்கடி சண்டை போடுகிறார். அவர் வேண்டுமென்று சண்டை போடவில்லை. ஆனால் மனைவி செய்யும் ஒவ்வொரு விசயமும் பிடிக்காமல் போகிறது.

நிற்க. இங்கே சப்கான்ஷியஸ் என்ன செய்கிறது. அவர் தன் காதலியை மறந்துவிட்டார். அதாவது காதலி பற்றிய நினைவுகள் சாதாரண மனதிலிருந்து(கான்ஷியஸ்) ஆழ்மனதிற்கு(அன்கான்ஷியஸ்) சென்றுவிட்டது. ஆனால் அது பிடித்தமான ஒன்றை ஆழ்மனதிற்கு தள்ளிவிட்டதால் ஆழ்மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சப்கான்ஷியஸ் மனம் இதை சாதாரண மனதிற்கு ஏதோ ஒன்றின் மூலம் இது நீ விரும்பிய வாழ்க்கை அல்ல என்று அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருப்பதால், அவருக்கு திருமண உறவில் பிரச்சினை ஏற்படுகிறது.

இன்னும் தெளிவாக சொல்லலாம். Conscious - இது வண்டி ஓட்டுபவரை போல. வண்டி ஓட்டுபவர் வண்டியை கட்டுப்படுத்துவது போல இதுதான் மனம் மற்றும் உடல் இரண்டையும் கட்டுப்படுத்துகிறது. இதுதான் உங்களைச் சுற்றி எல்லா முக்கியமானவைகளையும் செய்கிறது. ஆனால் கான்ஷியஸ் மனம் அப்போதைய சூழ்நிலையை மட்டுமே முக்கியமாக கருதும். அதாவது வண்டி ஓட்டும்போது நீங்கள் உங்களுக்கு பின்னால் சென்ற பாதை பற்றி யோசிக்க போவதில்லை, வரப்போகும் பாதையை பற்றியும் யோசிக்க போவதில்லை, நீங்கள் உங்களுக்கு முன்னால் உள்ள பாதை காண்பீர்கள் உடனடியாக உள்ள தடைகள்/ஆபத்தை மட்டுமே கருத்தில் கொள்வீர்கள். இதைப்போலவே கான்ஷியஸ் மனம் செயல்படுகிறது.

Subconscious - சப்கான்ஷியஸ் மனம் என்பது வண்டியின் எஞ்சின் போல. இது வண்டியின் அனைத்து பாகங்களுக்கும் வேலை செய்ய ஆற்றல் அளிக்கிறது. சப்கான்ஷியஸ் மனம் லாஜிக் இன்றி யோசிக்கும். அது கான்ஷியஸ் மனதிலிருந்து வரும் எல்லா தகவல்களையும் கான்ஷியஸ் மனதிற்கு தெரியாமலேயே உணர்வுகள், அனுபவங்களுடன் சம்பந்தபடுத்தி/செயல்முறைபடுத்தி பார்க்கும். சப்கான்ஷியஸ் மனம் ஒரு மிகப்பெரிய கலைடாஸ்கோப் போன்றது. அதில் வரும் நிறங்களும் வடிவங்களும் வரிசையற்ற முறையில் மாறிக் கொண்டே இருக்கும். அதுபோல இதன் எண்ணங்களும்.

அடுத்த பதிவில் இதை இன்னும் புரிந்துகொள்வதற்காக ஒரு எளிதான ஆய்வு செய்வோம்.

________________________

கனவு மேலும் சில சுவாரசியங்கள்:

நம்மால் நமக்கு தெரிந்ததை மட்டுமே கனவு காண முடியும். நீங்கள் பார்க்காத அமெரிக்க வீடு உங்கள் கனவில் வரவே வராது. மேலும் கனவில் வரும் நபர்கள் அனைவரையும் நீங்கள் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு நினைவில் இல்லாமல் இருக்கலாம் அவ்வளவே. நாம் சாலையில் செல்லும் எதேச்சையாக ஒரிரு வினாடி பார்க்கும் ஒரு சிறுமி கூட நம் வாழ்வில் ஏதாவது ஒரு கனவில் வரக்கூடும். கனவுகளில் வருவது உண்மையாக நமக்கு உணர்த்தப்படுவதில்லை. கனவுகள் என்பவை உருவகங்களே. அவற்றின் மூலம் நம் மனம் அதைப் போல் வேறு எதையோ  உணர்த்துகிறது.


12% மக்கள் முழுமையாக வெறும் கருப்பு வெள்ளையில் மட்டுமே கனவுகளை காண்கிறார்கள். மீதி பேர் நல்ல நிறங்களிலோ மங்கலான நிறங்களிலோ கனவு காண்கிறார்கள். கனவில் வரும் சம்பவங்கள் பெரும்பாலும் நம் அன்றாட வாழ்வின் சம்பவங்களாகவே இருக்கும்.
நீங்கள் விழித்த 5 நிமிடங்களில் பாதி கனவை மறந்து விடுகிறீர்கள். 10 நிமிடங்களில் 90%ஐ மறந்துவிடுவீர்கள். மீதி மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்.

34 comments:

  1. எனக்கு தூக்கம் வருது பதிவ காலைல படிச்சுட்டு கமென்ட் போடுகிறேன்

    ReplyDelete
  2. சும்மா உட்கார்ந்து கிட்டு - சும்மா கனவு கண்டு கிட்டே இருக்காங்க என்று இனி சொல்ல முடியாது போலே..... சுவாரசியமான தகவல்கள்!

    ReplyDelete
  3. காலை வணக்கம்.

    கூகுள் பஸ் ல் பகிரும் போதும் இணைப்பை சரியான முறையில் கோர்த்து விட்டால் இந்த தலைப்பு மற்றும் இதில் படங்கள் வரைக்கும் தெரியும்.

    குறைந்தபட்சம் மற்றவர்கள் போலவே தலைப்பையும் சேர்த்து பகிருங்கள்.

    சிறிய இடைவெளியில் உள்ளே வந்தேன். ஆச்சரியம்.

    நன்றாக வந்துள்ளது. சப்கான்ஷியஸ் போன்ற வார்த்தைகளை அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுத்து விட்டு ஆழ்நிலை மனம் போன்ற நல்ல தமிழ் வார்த்தைகள் தெரியப்படுத்தலாம்.

    நன்றி எஸ்கே

    ReplyDelete
  4. நல்லாத்தான் இருக்கு...

    இந்த denim-ஓட கனவைப் பத்தி ஏதாவது சொன்னீங்கன்னா நல்லாஇருக்கும். அப்படியே அவரோட புதிய பதிவைப் படித்துவிட்டு அவர் Psycho ஆகலாமா கூடாதா (already ஆயிட்டாரா, இல்லையா)-னு சொன்ன அவரை follow பண்றவங்களுக்கு உதவியாக இருக்கும்...

    ReplyDelete
  5. யோவ் ஏன் பெயர வைத்துகிட்டு ஏன் யா இப்படி இம்சை பண்ணுற... அந்த கனவை நீ விடபோரதிள்ள...சரி கொழந்த பற்றி தெரிந்து கொண்டோம்,உங்களை பற்றி சொல்லுங்களேன்,தல ஏந்த ஊரு

    ReplyDelete
  6. அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கனவு ஒரு அதிசயம். கனவு இன்றி மனிதன் இல்லை போலும்.

    ReplyDelete
  8. நல்லா இருக்கு எஸ்.கே. ஏதேது தொடர் எழுதராப்ல இருக்கு. ஓ.கே ஓகே. ;-)

    ReplyDelete
  9. //நம்மால் நமக்கு தெரிந்ததை மட்டுமே கனவு காண முடியும். நீங்கள் பார்க்காத அமெரிக்க வீடு உங்கள் கனவில் வரவே வராது. மேலும் கனவில் வரும் நபர்கள் அனைவரையும் நீங்கள் வாழ்வில் ஒருமுறையாவது பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு நினைவில் இல்லாமல் இருக்கலாம் அவ்வளவே. //

    கண்டிப்பா உலக அழகியனாலும் உள்ளூர் கெளவியானாலும் ,
    பாதாதான் பக்கத்துல போக முடியும் கனவுல ...

    ReplyDelete
  10. //denim said...//
    நன்றி நண்பரே!

    //Chitra said...//
    மிக்க நன்றிங்க!

    //ஜோதிஜி said...//
    நன்றிங்க! தங்கள் கருத்தின்படி செய்கிறேன்!

    //சு.மோகன் said...//
    :-) மிக்க நன்றி!

    ////denim said...//
    நீங்க என்ன கேட்கிறீங்களா, சு.மோகன் அவர்களை கேட்கிறீர்களா?

    //சசிகுமார் said...//
    தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

    //தமிழ் உதயம் said...//
    உண்மைதான். நன்றி நண்பரே!

    //கருந்தேள் கண்ணாயிரம் said...//
    வாங்க! வருகைக்கு நன்றி!

    //RVS said...//
    நன்றி! நன்றி!:-)

    //ராஜகோபால் said...//
    ஆமமாம். :-) வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  11. லேட் அட்மிசன்..
    வர வர உங்க எழுத்து மெருகேறிக் கொண்டு வருகிறது.
    கலக்குங்க. இந்த மாதிரி எழுத ஆரம்பிச்சுட்டாலே பலவித மன கஷ்டங்கள் குறைந்து விடுகிறது. தொடருங்கள்.அதுக்குன்னு ரொம்ப strain பண்ணிக்காதீங்க

    ReplyDelete
  12. கனவுப் பதிவு அழகு!

    ReplyDelete
  13. எஸ்.கே! மிகச் சரியாக செல்கிறது தொடர்.. மேலாளர்களுக்கு MIND MANAGEMENT வகுப்புகள் நான் எடுக்கும் போது, இந்தத் தலைப்பு எப்போதும் சுவாரஸ்யமாய் ரசிக்கப் படும்.. தொடர்ந்து எழுதுங்கள்!

    ReplyDelete
  14. எஸ்.கே sir, பதிவு ரொம்ப அழகா வந்துருக்கு, உண்மைதான், கனவு நம்ப வாழ்க்கைல முக்கிய பங்கு வகிக்கிறது. எனக்கு வரும் கனவு எல்லாம் தெளிவா கலர் கனவாவே வருதே ஏன்?( நெஜமாவே தான்பா)...:) அடுத்த பகுதிக்கு ஆவலாக வெயிட்டிங்கு!!

    ReplyDelete
  15. அடடா கனவுகள் பற்றி இவ்வளவு விஷயமா... நல்ல பதிவு.. எஸ்.கே

    ReplyDelete
  16. சில நேரங்களில் நம் கற்பனைக்கு உட்பட்டவைகளும் நம் கனவில் வருவதுண்டு...அவ்வாறு கற்பனையாக வரும் களங்கள் நம் தேடல்களுடன் சம்பந்தபட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்... நல்ல பதிவு நண்பரே!

    ReplyDelete
  17. ஆழ்மனதின் நினைவுகளின் வெளிப்பாடு தான் கனவு என்கிறீர்கள்..அருமை..அருமை..

    ReplyDelete
  18. கனவு பற்றிய உங்கள் இடுகை நன்று எஸ்.கே அவர்களே!கனவு கலையும் போது ஒரு விசித்திரம் நடக்கிறது..நம்மை யாரோ விரட்டுகிறார்கள்.நாம் ஓடுகிறோம். ஓடமுடியவில்லை.கால்களைத்தூக்கி போடுகிறோம். பக்கத்தில் படுத்திருப்பவர் மேல் பட தூக்கம் கலைகிறது.அல்லது கீழே விழுகிறோம்.தூக்கம் கலைகிறது.மிருகங்களினால் அவற்றின் முகம் கூட புலப்படாமல் துரத்தப்படும் அவஸ்தையால் முழித்துக்கொள்கிறோம். இவைபற்றி உளவியலார் விளக்கும் போது நமது genetic code ல் பதிந்தவை.ஆதிமனிதன் மிருகங்களுக்கு பயந்து மரப்பொந்துகளிலும்,கிளைகளிலும் வாழ்ந்தான் தூங்கினான்.கீழே விழுந்தான்.அவை விரட்டியபோது ஓடிச்செத்தான்.அவை பதிந்த உள்மனம் கனவு கலைய பயன்படுகிறது. எனகிறார்கள். மனிதவியல் இதனை ஒரு ஆதாரமாக எற்றுக்கொள்கிறது---காஸ்யபன்.

    ReplyDelete
  19. //கொழந்த said... //
    நன்றி நண்பா! நான் பொதுவா எழுதுவதில் சோம்பேறி. ஆனா இப்பெல்லாம் எழுத ஆசையாய் இருக்கிறது!

    //thozhilnutpam said... //
    நன்றி நண்பரே!

    //மோகன்ஜி said... //
    மிக்க நன்றிங்க!

    //தக்குடுபாண்டி said... //
    ரொம்ப நன்றிங்க!

    //Riyas said... //
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!

    //thozhilnutpam said... //
    கற்பனை செய்வதும் கனவுகளில் வரக்கூடிய சாத்தியமுள்ளதுதான். கற்பனை பற்றி சொல்லும்போது அதற்கும் கனவிற்கும் உள்ள விவரத்தை பற்றி எழுதுகிறேன்.

    //kashyapan said... //
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! நீங்கள் சொல்வது போல சில உளவியலார் அப்படியும் சொல்கிறார்கள்தான்!

    ReplyDelete
  20. கனவைப்பற்றி அருமையாக அலசி,நிறைய அறியதந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  21. Nice post abt Dreams SK.I've posted an article abt my Elephant Dreams in my older post.Dreams have their own meaning which happen.

    ReplyDelete
  22. காலை வணக்கம் நண்பரே
    சுவாரசியமான தகவல்கள்!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  24. தொடர்ந்து எழுதுங்க .. உண்மைலேயே அருமையா இருக்கு .. உளவியல் பத்தி கூட இடைல வருது .. நான் இதுல நிறைய தெரிஞ்சிக்க விரும்புறேன் .. தொடர்ந்து எழுதிட்டே இருங்க ..

    ReplyDelete
  25. உங்களது பதிவை விட உங்கள் profile சிலிர்க்க வைத்தது... கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பதிவுலகமும் உங்களது "blogs i follow" listல்... bookmark ஆக்கிவிட்டேன்... ஒரே நாளில் அத்தனை பதிவுகளையும் பார்க்க முடியாது...

    ReplyDelete
  26. சில வேளைகளில் நாம் கனவுகண்டது எமக்கு ஞாபகம் இருக்கும், ஆனால் என்ன கனவு கண்டோமென்பதை எவளவு நினைத்தாலும் கண்டு பிடிக்க முடிவதில்லையே ஏன்?

    ReplyDelete
  27. //ஸாதிகா said... //
    மிக்க நன்றிங்க!

    //Muniappan Pakkangal said... //
    நன்றி சார்! தங்கள் பதிவுகளை நிச்சயம் படித்து பார்க்கிறேன்!

    //பிரஷா said... //
    நன்றி நண்பரே!


    //சசிகுமார் said... //
    நன்றி நண்பரே!

    //ப.செல்வக்குமார் said... //
    நண்பா இந்த தொடரை தொடர நீங்கள் தந்த ஊக்கம் ஒரு முக்கிய காரணம்

    //philosophy prabhakaran said... //
    நன்றி! நன்றி! நன்றி!

    //எப்பூடி.. said... //
    அதற்கான காரணமும் அதை கண்டுபிடிப்பதற்கான வழிகளுக்கும் பதிவுகளில் விடை கிடைக்கும். நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. என்னுடைய நண்பனின் கனவு மிகபயங்கரமானதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அவன் கனவுகளை பகிர்ந்துகொள்ளும் போது மிரண்டு போயிருக்கிறேன். இதற்கு கனவின் பல விசயங்களை அவன் மறந்திருக்கிறான். ஆனாலும் இது தொடர்கதையாகவே இருக்கிறது.

    ReplyDelete
  29. //ஜெகதீஸ்வரன். said...//
    எல்லாவற்றிற்கும் காரணம் உள்ளது காரணம் அறிந்தால் பிரச்சினையாக தெரிவது ஆச்சரியமாகும்!

    ReplyDelete
  30. //நீங்கள் விழித்த 5 நிமிடங்களில் பாதி கனவை மறந்து விடுகிறீர்கள். 10 நிமிடங்களில் 90%ஐ மறந்துவிடுவீர்கள். மீதி மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். //

    உண்மை தான் நண்பரே..உங்கள் கனவுகள் ஆராய்ச்சிகள் தொடரட்டும்..பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  31. எஸ்.கே.,
    மூன்று மனநிலைகளையும் விளக்கியது அருமை.
    'கனவுப் பலன்' புத்தகங்கள் பார்த்ததுண்டா

    ReplyDelete
  32. //Thomas Ruban said...//
    மிக்க நன்றி நண்பரே!\

    //அரபுத்தமிழன் said...//
    நன்றி! கனவுப் பலன்கள் புத்தகம் பார்த்ததுண்டு! அதைப் பற்றியும் சொல்கிறேன்!

    ReplyDelete