Tuesday, October 26, 2010

கனவுகள் 9 - பயன்கள் சில.......

சில சமயங்களில் கனவுகள் மொத்தமாக வாழ்க்கை செல்லும் திசையையே மாற்றி விடும்.
- JUDITH DUERK

நாம் நீண்ட நேரம் கனவு காண்கிறோம். வாழ்வில் ஒரு பெரும்பகுதியை கனவில் கழிக்கிறோம். இவ்வளவு நேரம் செலவழிக்கின்ற கனவை நாம் ஏன் பயன்படுத்திக் கொள்ள கூடாது?

உளவியலாளர்கள் உளவியல் சிகிச்சைகளில் கனவுகளை ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். கனவுகள் மனதை காட்டும் கண்ணாடியாக உள்ளதால் தங்கள் நோயாளிகளின் கனவுகள் நோயாளியின் மனநிலையை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கிறார்கள். திருமண உறவு, குழந்தை நலன், கல்வி, வேலை, பொருளாதார நிலை போன்ற பல சமூகம் சார்ந்த விசயங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராயும்போது தீர்வளிக்கும்போது கனவுகள் மிகப்பெரிய அளவில் பல விசயங்களை புரிந்துகொள்ளவும் வழிகாட்டவும் உதவுகிறது. இது பற்றி வரும் பதிவுகளில் அவ்வப்போது சொல்கிறேன்.

17 வயது ஆணின் கனவு: ஒரு குடிகாரர் ஒரு மூலையில் கையில் பாட்டிலுடன் தாறுமாறாக கிடக்கிறார். கனவு முடிந்தவுடன் பயமாக உள்ளது இது என் எதிர்காலத்தை குறிக்கிறதா?

இந்த கனவு நீங்கள் உங்கள் வாழ்க்கையை எந்த அளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறீர்களா அல்லது அதிலிருந்து விடுபட நினைக்கிறீர்களா?

கனவு சிகிச்சை: கனவு சிகிச்சை என்பது நம் மற்றும் மற்றவரின் கனவுகளை புரிந்துகொண்டு அதன் காரணம் மற்றும் விளைவுகளை ஆராய்ந்து அறியும் முறையாகும். இதை உளவியலாளர்கள் அல்லாது சாதாரண நபர்களும் கற்றுக் கொள்ளலாம். இத்தொடரின் முக்கிய நோக்கமே அதுதான். உண்மையில் இத்தொடரை நீங்கள் முழுமையாக உட்கிரகித்தால் தங்களுக்கும் இது சாத்தியமே!!!

கனவை ஒரு பொழுது போக்காக, ஒரு கற்பனை திறனாக அனுபவியுங்கள். கனவே வரக் கூடாது என நினைப்பதை விட, அதுவும் ஒரு இயல்பான நிகழ்வு என சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் நம் மனம் அதை ஏற்றுக் கொண்டு அதன் பொருளை புரிந்துகொள்ள முயற்சிக்கும். மேலும் இதற்கென எந்த கடின முயற்சியும் தேவையில்லை.

தன் முனைப்பு கனவுகள்: கனவை நாமாக விரும்பியும் வரவழைக்க முடியும். ஒரு குறிப்பிட்ட விசயத்தில் நம் மனதை ஒருமுகப்படுத்த இக்கனவுகள் பயன்படுகின்றன. உங்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும், நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட அனுபவங்களை உருவாக்கவும் உதவுகிறது. இது வேறு, கனவு கட்டுப்பாடு வேறு. கனவு கட்டுப்பாட்டில் நீங்கள் கனவின் ஒவ்வொரு நுணுக்கமான விசயங்களை கட்டுப்படுத்தி வழிநடத்த முடியும். ஆனால் இந்த தன் முனைப்பு கனவுகளில் நீங்கள் ஒரு களம், மற்றும் விசயம் மற்றும் எடுத்துக் கொண்டால் நம் ஆழ்மனம் அதற்கு தகுந்தாற்போல் தானாக கனவை உண்டாக்கும்.

எடுத்துக்காட்டு: நான் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்பது உங்கள் குறிக்கோள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் மனதில் சொல்ல வேண்டியது: “இன்று என் கனவில் நான் தைரியமாக என் எதிரிகளை எதிர்கொள்ள வேண்டும்!”. இதை சாப்பிடும்போடும், நடக்கும்போது, இடைவேளை கிடைக்கும்போதெல்லாம் திரும்ப திரும்பச் சொல்ல வேண்டும். சில நாட்கள் இப்படி செய்துகொண்டே இருங்கள் அந்த கனவு உங்களுக்கு வரும்.

அப்படி கனவு வரும்போது அதில் வருபவை தெளிவாகவும் நீங்கள் எதிர்பார்த்தவையாகவும் இருந்தால் அதில் உள்ள செய்தியை புரிந்துகொள்ளுங்கள். இல்லையெனில் அக்கனவு புரியாததாகவும் முக்கியமானதாகவும் தோன்றினால் அதைப் பற்றி மேலும் ஆராயுங்கள் அதே சமயம் மேற்கண்ட தன்முனைப்பை அதிகமாக செய்ய வேண்டும்.

கனவில் வரும் உருவங்களின் (symbols) அர்த்தத்தை புரிந்துகொள்தல். இதை கனவுப் பலன் என்கின்றனர். ஆனால் உளவியல் கனவுப் பலனிற்கும் பாரம்பரிய/ஜோதிட கனப் பலன்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. (இதை வரும் பதிவுகளில் விரிவாக காணப் போகிறோம்.)

இத்தனை விதமாக கனவை புரிந்துகொண்டு நாம் தம் தனிப்பட்ட வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், திறன் கட்டுமானம், கற்பனை வளம், குழந்தை வளர்ப்பு போன்ற பல விசயங்களுக்கு கனவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

===================
என் கணவர் என்னை ஏமாற்றுவது போல் கனவு கண்டேன். இது கெட்டதா? கனவு முடிந்தவுடன் வருத்தம் விஞ்சி நிற்கிறது.


உங்கள் சொந்த சிந்தனைகளின் படி வாழாமல் நீங்கள் உங்களையோ அல்லது மற்றவர்களையோ ஏமாற்றுகிறீர்களா அல்லது ஏமாற்ற வாய்ப்புள்ளதா என கேட்கிறது அல்லது அதைப் பற்றிய பயத்தைக் குறிக்கிறது இந்த கனவு.

கனவுகளின் வகைகள்

சாதாரண கனவுகள்:
நாம் இரவில் தூங்கும்போது நம் வெளி மனம் தூங்கி விடும் . அப்போது ஆழ்மனம் விழித்துக் கொண்டு கனவு காணும். இக்கனவுகள் நினைவில் இருப்பதில்லை.

தெளிவான கனவுகள்:
இவற்றை நாம் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில் இக்கனவை நம்மால் உணர முடியும். ஆனால் இதை உணர நாம் சில வழிகளை கையாள வேண்டும். இனி வரும் பதிவுகளில் இவற்றையே பெரும்பாலும் கையாளப் போகிறோம்.

மனப் பரிமாற்ற (டெலிபதி) கனவுகள்:
உயிருள்ள இருவரின் மனங்களின் பரிமாற்றம் கனவில் நடக்கும். அதாவது மற்றவரின் எண்ணங்கள் உருவங்களாக நம் கனவில் தோன்றுதல். இதைப் பற்றி பின்னர் பார்ப்போம்.

முன்னறிவிப்பு கனவுகள்:

பெயர் சொல்வது போல இக்கனவுகள் எதிர்காலத்தில் நடக்க போகிறவைகளை காண்பிக்கும்.  கனவில் வருபவைகளும் நடக்கலாம். அல்லது கனவில் வந்தபடி நடக்க நம் மனம் நம்மை ஆட்டுவிக்கலாம்.

கடைசியாக பயங்கர கனவுகள் (NIGHTMARES).................

26 comments:

  1. அருமை சார்,
    நாளுக்கு நாள் எழுத்தின் தரம் மெருகேறிக்கொண்டே இருக்கிறது உங்கள் மூலம் கனவைப்பற்றிய ஆவலும் ஈடுபாடும் அதிகமாகிறது சார்
    கனவுகளில் இத்தனை வகை உள்ளது என்று உங்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன்

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  2. கனவைப்பற்றிய தகவல்களை அதிகமாக தெரிந்து கொள்ள வைத்துள்ளீர்கள்.. அருமை நண்பா..

    ReplyDelete
  3. கனவின் வகைகள் நன்று.

    ReplyDelete
  4. சுப்பரா போகுது கனிவில் உங்களுக்கு காதல் வந்திட்டு போல

    ReplyDelete
  5. கனவுகள் ..... கனவுகள்..... நினைவுகளின் தாக்கமே கனவுகள்! ஆஹா....

    ReplyDelete
  6. கனவு குறித்து நீங்கள் எழுதும் பலவற்றை நான் அனுபவித்துள்ளேன்.

    ReplyDelete
  7. இண்ட்ரஸ்டிங்.... தொடருங்கள்

    ReplyDelete
  8. எவ்வளவு வகையான கனவுகள்.. அருமைங்க..

    தொடருகிறேன்.. நன்றி..

    ReplyDelete
  9. அருமை..
    அடுத்த பதிவுக்கு வெய்டிங் :)

    ReplyDelete
  10. //மாணவன் said... //
    மிக்க நன்றி!

    //பிரஷா said... //
    மிக்க நன்றிங்க!

    //அன்பரசன் said... //
    மிக்க நன்றி!!

    //யாதவன் said... //
    :-) நன்றிங்க!

    //மகாதேவன்-V.K said... //
    நன்றி நண்பரே!

    //வெறும்பய said... //
    நன்றி நண்பா!

    //Chitra said... //
    ரொம்ப நன்றிங்க!

    //தமிழ் உதயம் said... //
    நன்றி! அனுபவங்கள், ஆய்வுகள் மூலம் அறியப்பட்ட தகவல்களே இவை!

    //அருண் பிரசாத் said... //
    மிக்க மிக்க நன்றிங்க!

    //பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said... //
    எத்தனையாவதா வந்தாலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே!!

    //பதிவுலகில் பாபு said... //
    ரொம்ப ரொம்ப நன்றிங்க!

    //Balaji saravana said... //
    கூடிய விரைவில் நண்பரே! நன்றி!

    ReplyDelete
  11. yapaaa orea naalil 3 postaaaaaaaaaaaaaa

    konjam speedai kurainga bro...........

    ReplyDelete
  12. தொடர்ந்து எழுதுங்க ., சத்தியமா கலக்கலா போயிட்டு இருக்கு.
    கனவு, மனம் இது பத்தி நான் அதிகமா தெரிஞ்சிக்க விரும்புறேன்.
    உங்களால எவ்வளவு விரிவா எழுத முடியுமோ அவ்வளவு விரிவா எழுதுங்க ..!!

    ReplyDelete
  13. எப்பவும் போல சுவாரஸ்யமான தகவல்கள் எஸ்கே

    ReplyDelete
  14. என்ன sk எழுதி தள்ளிக்கிட்டே இருகிங்க. கலக்குங்க

    ReplyDelete
  15. தொடர்ந்து கனவு காணுங்கள் :-)

    ReplyDelete
  16. கொளந்தையை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை,காணாமல் போகும் போது வெள்ளை நிற பனியனும்,ஊதா நிற அறை கால் டவுசரும் அணிந்து இருந்தார்,இவரை யாராவது கண்டு பிடித்தால் காதை பிடித்து தரதர வென இழுத்து வருமாறு கேட்டுகொள்ளபடுகிறோம்...

    ReplyDelete
  17. நண்பா,

    சாரி ரொம்ப லேட்டு. எனிவே சொல்லவேண்டுமா, வழக்கம்போல கலக்கறீங்க...

    ReplyDelete
  18. நச்சின்னு இருக்கு ...கலக்குறீங்க நண்பரே..

    ReplyDelete
  19. கனவின் வகைகள் அருமை.

    ReplyDelete
  20. நெத்து இரவு புணையல் சேர்ந்து இருக்கும் பாம்பு..பார்த்தேன்..அப்புறம் கொஞ்சம் தூரம் போனது நிறைய மயில் பார்த்தேன்...யோசிச்சு பார்த்து இன்னொரு நண்பர்கிட்ட கேட்டதுக்கு பாம்பும் மயிலும் யார்கிட்ட இருக்கு முருகன் கிட்டதானே அப்ப முருகன் வந்திருக்காருடா என்றான்...லாஜிக்காக இருந்தாலும் முருகன் வந்து என்ன பண்ண போராருன்னு விட்டுட்டேன்

    ReplyDelete
  21. கனவைப்பற்றிய பல புதிய,புதிய தகவல்களை அருமையாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி எழுதி உள்ளீர் மிக்க நன்றி நண்பரே.


    பத்ரி சேஷாத்ரியிடம் இருந்து வாய்ப்பு கிடைத்தா நண்பரே.

    ReplyDelete
  22. //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே!
    அவரிடமிருந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

    ReplyDelete