நம்பிக்கை என்பது நாம் விழித்து கொண்டு காணும் கனவு - அரிஸ்டாட்டில்
17 வயது மாணவியின் கனவு: நான் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்தை பிடிக்க சென்றேன். பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில், நான் என் நெருங்கிய தோழியை கண்டேன். அவள் ஒரு மரத்தின் அடியில் சுடப்பட்டு இறந்து கிடந்தாள். நான் கொஞ்ச தூரம் சென்ற பின் இன்னொரு தோழனை கண்டேன். அங்கே அவன் மட்டும்தான் இருந்தான். நான் அவனை அழைத்துக் கொண்டு இறந்து கிடந்த நெருங்கிய தோழியை காண்பித்தேன். நாங்கள் அங்குமிங்கும் ஆட்களை தேடினோம். நாங்கள் நிறைய பேரை கண்டுபிடித்தோம் மோசமாக இறந்த நிலையில். திடீரென்று என் நண்பன் என்னிடம் திரும்பி சொன்னான், “இதையெல்லாம் யார் செய்தது என எனக்கு தெரியும். நாம் இப்போது இங்கிருந்து செல்ல வேண்டும்” என்றான். நான் விழித்துக் கொண்டேன்.
நாம் எந்த கனவுகளையும் ஒதுக்கி விடுவோம் ஆனால் பயங்கர கனவுகளை மட்டும் அல்ல. அவை நம்மை தொந்தரவு செய்கின்றன. அவை எதைச் சொல்கின்றன என நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். பயங்கர கனவுகள் ஒரு பிரச்சினையை சுட்டிக்காட்டும் அறிகுறியாக கருதப்படுகிறது. பயங்கர கனவுகள் என்பவை நம்மை ”கவனி!”, ”கவனி!” என ஏதோ விசயத்தை சுட்டிக்காட்டவே ஏற்படுகின்றன.
கனவு காண்பவரை தொந்தரவு செய்யும் எந்த கனவும் பயங்கர கனவாகும். சிலசமயங்களில் பயங்கர கனவுகள் மனரீதியான அதிர்ச்சிகள் அல்லது உடல் பாதிப்புகள் போன்ற ஆழமான விஷயங்களையும் சுட்டிக்காட்டலாம். சில தொந்தரவு செய்யும் கனவுகள் கனவு காண்பவர் மறக்க நினைக்கும் ஒரு விஷயம்/சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலும் பயங்கர கனவுகள் நிஜ
வாழ்வில் நடந்த ஒரு மன/உடல் ரீதியான பாதிப்பு அல்லது சம்பவத்தின் காரணமாகவே ஏற்படுகிறது. நம் வாழ்வில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நாம் மறக்க நினைக்கும் அல்லது நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கும்போதும் பயங்கர கனவுகள் ஏற்படலாம். பழங்காலத்தில் பயங்கர கனவுகள் மற்றும் கெட்ட கனவுகள் வராமல் தடுக்க மந்திரங்களை பயன்படுத்தினார்களாம்.
பயங்கர கனவுகள் ஏற்படும் பல பேரின் குடும்பத்தில், உளவியல் பிரச்சினைகள், தவறான மருந்து பழக்கம், தற்கொலை முயற்சிகள், இன்னல் ஏற்படுத்தும் உறவுகள் போன்றவை இருந்துள்ளதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளன! சில கனவுகள் திரும்ப திரும்ப வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்ட கனவுகளின் கதை அல்லது சம்பவத்தில் லேசான மாற்றத்துடன் மீண்டும் மீண்டும் வரும். இப்படிப்பட்ட கனவுகள் நேர்மறையானவைகளாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான அடிக்கடி வரும் கனவுகள் பயங்கர கனவுகளாகவே இருக்கின்றன. கனவில் வந்த ஒரு பிரச்சினையை நீங்கள் தீர்க்காமல் அல்லது அதைப் பற்றி கவலைப்படாமல் விட்டால் அந்த கனவு மீண்டும் வரக்கூடும்.
குழந்தைகளுக்குத்தான் பயங்கர கனவுகள் அதிகமாக வரும். பொதுவாக மூன்று வயது முதல் ஏழெட்டு வயது வரை சாதாரணமாக பயங்கர கனவுகள் ஏற்படும். குழந்தைகளுக்கு பயங்கர கனவுகள் வரக் காரணம் இந்த வயதில்தான் அவர்களின் உணர்ச்சிகள் வளர்ச்சி ஆரம்பிக்கும். அதிகமாக கவலைப்படுவர்களும் இம்மாதிரி பயங்கர கனவுகள் ஏற்படும்.
விபத்துகள், மன/உடல் பாதிப்பு/சம்பவங்களுக்கு பிறகும் பயங்கர கனவுகள் ஏற்படும். இவை மீண்டும் மீண்டும் ஆக்கிரமிக்கலாம். இக்கனவுகள் அந்த சம்பங்களை பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கும். பெரும்பாலும் மரணம் அல்லது கைவிடப்படுதல் பற்றிய அச்சுறுத்தல், சுய அடையாளம் இழத்தல் பற்றிய பயம்
போன்றவை தொடர்பானதாகவே இவை இருக்கும். எனவே இவற்றை மற்ற கனவுகள்
போல இல்லாமல் வேறு விதமாக சரி செய்வார்கள். சில பயங்கர கனவுகள் உடலியக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். உதாரணமாக கனவு நடக்கும்போது/நடந்த உடனே நகர முடியாமல் இருத்தல், பேச முடியாமல் அழுவ முடியாமல் இருத்தல் போன்றவை.
சில கனவுகள் திரும்ப திரும்ப வந்துகொண்டே இருக்கும். இப்படிப்பட்ட கனவுகளின் கதை அல்லது சம்பவத்தில் லேசான மாற்றத்துடன் மீண்டும் மீண்டும் வரும். இப்படிப்பட்ட கனவுகள் நேர்மறையானவைகளாகவும் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான அடிக்கடி வரும் கனவுகள் பயங்கர கனவுகளாகவே இருக்கின்றன. கனவில் வந்த ஒரு பிரச்சினையை நீங்கள் தீர்க்காமல் அல்லது அதைப் பற்றி கவலைப்படாமல் விட்டால் அந்த கனவு மீண்டும் வரக்கூடும்.
பயங்கரக் கனவுகள் வருவதற்கான முக்கிய காரணங்கள்:
1. சிறுவயது ஆழமான உணர்வுகளின் நினைவுகள். முக்கியமாக இழப்பை மையமாக வைத்தே இருக்கும்.
2. சிறுவயது பயங்கள். தாக்கப்படுதல் பற்றிய பயம், நம் உள்மன கவலை போன்றவை இவற்றை உண்டாக்குகின்றன. மேலும் குழந்தைகளின் அடிப்படை தேவைகளான உணவு, அன்பு, உறைவிடம், போன்றவை முழுமைப்படுத்தப்படாவிட்டால் நாளடைவில் அவர்கள் வேறு (கற்பனை)உலகத்திற்கு சென்று விடுவார்கள். பிறகு அவை பயங்கர கனவுகளாக மாறும்.
3. விபத்துகள், மன/உடல் காயங்கள்-அதற்கு பின் வரும் கனவுகள். இவை குறுகிய காலத்தில் மறைந்து விட்டால் பிரச்சினை இல்லை. நீண்ட நாட்களுக்கு இவ்வகை கனவுகள் வந்தால் பிரச்சினை.
4. எதிர்காலம், வளர்ச்சி, மாற்றம் பற்றிய பயங்கள். இவை தெரியாத ஒன்றைப் பற்றிய பயங்கள்.
5. சில பயங்கர கனவுகள் ஒரு தீமையின் முன்னறிகுறியாக தெளிவாக உணரப்படலாம். மனிதனுக்கு ஒரு தகவலை புரிந்துகொள்ளாமலேயே, உணர்வுநிலை எல்லைக்கு கீழே அந்த தகவலை கைப்பற்றும் திறன் உள்ளது. இதனால் கெடுதலாக நினைக்கப்படும் எல்லாக் கனவுகளும் கெடுதலை தருவதில்லை.
6. மோசமான உடல்நிலை பாதிப்பும், மரணம் தொடர்பான பயமும் உள்ளவர்களுக்கும் பயங்கர கனவுகள் ஏற்படலாம்.
பயங்கர கனவுகள் அடுத்த பதிவிலும்......
சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தா போஸ்ட் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும் நண்பர்களே!
ReplyDeleteமீ த ஃபர்ஸ்டு
ReplyDeleteஎன்ன நண்பா,
ReplyDelete//உடல்நிலை சரியில்லாத காரணத்தால்//
இப்போ நல்லாயிருக்கீங்கன்னு நினைக்கிறேன். பார்த்துக்கோங்க நண்பா...
அப்புறம், படிச்சுட்டு வர்றேன்.
யோவ் denim,
ReplyDeleteசிக்கிரம் வாப்பா, இந்தப்பதிவு உங்களுக்குத்தான்.
//. விபத்துகள், மன/உடல் காயங்கள்-அதற்கு பின் வரும் கனவுகள். இவை குறுகிய காலத்தில் மறைந்து விட்டால் பிரச்சினை இல்லை. நீண்ட நாட்களுக்கு இவ்வகை கனவுகள் வந்தால் பிரச்சினை.//
ReplyDeleteநேத்து ராத்திரி எனக்கு ஒரு பயங்கர கனவு...
ஒரு சொந்தக்கார பாட்டி லாரில அடிபட்டு சாகுற மாதிரி..
இன்று முழுதும் ஒருமாதிரியாகவே இருந்தது..
Take care S.K
ReplyDeleteபயங்கரமா இருக்குது.. பயமுறுத்தாதீங்க..
ReplyDelete(abt. pictures)
நான் தூங்கப் போறனுங்க. பயமா இருக்கு. காலையில் படிக்கிறேன் :).
ReplyDelete//6. மோசமான உடல்நிலை பாதிப்பும், மரணம் தொடர்பான பயமும் உள்ளவர்களுக்கும் பயங்கர கனவுகள் ஏற்படலாம்.//
ReplyDeleteபார்த்து நண்பா நமக்கும் இந்த கனவு வர கூடும், கனவு கற்பனை என்று என்னி விட்டொழி.,
வாழ்கை வாழ்வதற்கு
எஸ்.கே said...
ReplyDeleteசில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தா போஸ்ட் செய்ய முடியவில்லை.
....எப்படி இருக்கீங்க? விரைவில் நலம் பெற எங்களது பிரார்த்தனைகள்!
இப்போ உடம்பு எப்படி இருக்கு நண்பரே...
ReplyDeleteவழக்கம்போலவே கனவைப்பற்றிய தெளிவான விளக்கங்களுடன் உங்கள் எழுத்துக்கள் அருமை
ReplyDelete”சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தா போஸ்ட் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும் நண்பர்களே!”
சில நாட்களாக பார்க்கவில்லை என்றதும் எதோ வேளைப்பளுவின் காரணம் என்று நினைத்திருந்தேன் சார்,
விரைவில் நலம் பெற ஆண்டவனை வேண்டிக்கிறேன்
வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்
விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறோம் நண்பா....
ReplyDeleteகுழந்தைகளுக்குத்தான் பயங்கர கனவுகள் அதிகமாக வரும். பொதுவாக மூன்று வயது முதல் ஏழெட்டு வயது வரை சாதாரணமாக பயங்கர கனவுகள் ஏற்படும்.///
ReplyDeleteகுழந்தைகள் தூக்கத்தில் சிரிப்பதும், அழுவதும் இதனால் தானோ.
நண்பரே, எல்லாவற்றையும் பின்னூட்டத்தில் விவரிக்க முடிவதில்லை. ஆதலால் கனவு,மனம் சம்பந்தமாக நான் அறிந்தவைகளை எனது பதிவில் இடுகிறேன்.
ReplyDeleteசிந்தனையைத் தூண்டியமைக்கு நன்றி.
விரைவில் சுகம் பெற வேண்டுகிறேன்.
//சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தா போஸ்ட் செய்ய முடியவில்லை. மன்னிக்கவும் நண்பர்களே!//
ReplyDeleteசீக்கிரம் உடல் நலம் பெறுவீர்கள்.
பயங்கர கனவுகள் எனக்கு வருவதில்லை. எக்ஸாம் ஹால் போய், பதில்கள் எழுதாமல், பெயில் ஆவது போல அடிக்கடி கனவு வரும். இதற்கு என்ன காரணமோ? நான் ஒரு தடவை கூட எந்தப் பாடத்திலுல் பெயில் ஆனதில்லை.
ReplyDeleteஎஸ்.கே! நலம் தானா? நல்லா ரெஸ்ட் எடுங்க! நலம் பெற பிரார்த்தனைகளுடன்
ReplyDeleteஎஸ் கே சீக்கிரம் வாங்க. நான் உங்களை ரொம்ப மிஸ் செய்கிறேன்
ReplyDelete//குழந்தைகளுக்குத்தான் பயங்கர கனவுகள் அதிகமாக வரும். பொதுவாக மூன்று வயது முதல் ஏழெட்டு வயது வரை சாதாரணமாக பயங்கர கனவுகள் ஏற்படும்.//
ReplyDeleteஓ , நம்பவே முடியலைங்க ., தொடர்ந்து எழுதுங்க .. !
//யங்கர கனவுகள் அடுத்த பதிவிலும்......//
ReplyDeleteதொடருங்க தொடருங்க .. நான் இன்னும் அதிகமா தெரிஞ்சிக்க விரும்புறேன் ..!!
பயங்கரமான பதிவு..நன்று
ReplyDeleteஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்க வளமுடன்
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
அன்புள்ள சுரேஷ்,
ReplyDeleteதங்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்...
பரிபூரணமாக குணம் பெற்று நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்...
Take care S.K.தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDelete.
//சு.மோகன் said... //
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!
//அன்பரசன் said... //
கனவில் வருபவை எல்லாம் நடக்கும் என்பது கிடையாது அதனால் மனம் அமைதி கொள்ள செய்யுங்கள் நண்பரே!
தங்கள் அன்புக்கு நன்றி!
//Madhavan said... //
:-) படங்கள் கொஞ்சம் பயமில்லாமல் போடுகிறேன். நன்றி!
//இளங்கோ said... //
நன்றி நண்பரே!
//ராஜகோபால் said... //
கனவை கண்டு நாம் பயப்பட தேவையில்லை நண்பரே!
அன்பிற்கு நன்றி!
//Chitra said... //
முழுமையாக சரியாகவில்லை! இருப்பினும் பரவாயில்லை!
அன்புக்கு நன்றி!
//philosophy prabhakaran said... //
முழுமையாக சரியாகவில்லை! இருப்பினும் பரவாயில்லை!
தங்கள் அன்புக்கு நன்றி!
//மாணவன் said... //
நன்றி நண்பரே! தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!
//பிரஷா said... //
அன்பிற்கு நன்றி நண்பரே!
//தமிழ் உதயம் said... //
ஆம் நண்பரே!
//அரபுத்தமிழன் said... //
பதிவிடுங்கள் நண்பரே!
அன்புக்கு நன்றி!
//சசிகுமார் said... //
தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே!
//vanathy said... //
ReplyDeleteதங்கள் கனவு ஏதோ ஒரு விசயத்தில் நீங்கள் தோல்வியடையலாம் என்கிற பயத்தை குறிக்கிறது.
//மோகன்ஜி said... //
தங்கள் அன்புக்கு மிக்க மிக்க நன்றி!
//Gopi Ramamoorthy said... //
தங்கள் அன்புக்கு மிக்க மிக்க நன்றிங்க!
//ப.செல்வக்குமார் said... //
மிக்க நன்றி நண்பா!
//padaipali said... //
நன்றி நண்பரே!
//nis said... //
ReplyDeleteதங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
//மாணவன் said... //
தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
//தஞ்சை.வாசன் said... //
தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தங்கள் அன்புக்கு நன்றி!
//Kanchana Radhakrishnan said... //
தங்கள் அன்புக்கு நன்றி!
தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
//சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தா போஸ்ட் செய்ய முடியவில்லை.//
ReplyDeleteமுதலில் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் பதிவு தாமதம் ஆனால் பரவாயில்லை. உடல்நலம் இப்போது எப்படி உள்ளது நண்பரே...
//Thomas Ruban said...//
ReplyDeleteஇப்போது கொஞ்சம் உடல்நிலை பரவாயில்லை!