Monday, October 25, 2010

கனவுகள் 8 - மனம், மனம் அறிய ஆவல்......

வெளிப்படையாய் தெரியாதது, கண்ணுக்குத் தெரியாதது, தொட்டு உணர முடியாதது, அது எங்கே உள்ளது என தெரியாது, அதன் அளவை அளவிய முடியாது, அது இருக்க இடம் தேவையில்லை.

இதெல்லாம் கடவுளைப் பற்றிய விளக்கம் மட்டுமல்ல மனதிற்கும்தான்!!! மனம் பற்றி மனிதன் எப்போது ஆரம்பித்தானோ தெரியாது ஆனால் இன்று வரை அவன் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது! இது ஆன்மீகரீதியாவும் சரி, அறிவியல்ரீதியாகவும் சரி! உலகில் புரியாத எல்லாவற்றையும் ஒரு கட்டத்தில் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். ஆனால் முழுமையாக புரிந்துகொள்ள மிக கடினமான ஒன்று மனம்தான்! ஏனெனில் இங்கே மனதை பற்றி புரிந்துகொள்வது அதே மனம்தான்!

மனம் என்பது என்ன? மனம் எங்கே உள்ளது?

நீங்கள் சந்தோசமாக இருக்கும்போது நெஞ்சில் இனம்புரியா உணர்வு ஏற்படுகிறதே அப்படியானால் இதயம் மனதின் இருப்பிடமா?
நீங்கள் கவலையாக இருக்கும்போது தலைவலிக்கிறதே அப்படியானால் தலை மனதின் இருப்பிடமா?
நீங்கள் பயப்படும்போது வயிற்றில் ஏதோ ஒரு கலக்கம் உருவாகிறதே அப்படியானால் வயிறு மனதின் இருப்பிடமா?

நம் உணர்வுகள் ஒவ்வொன்றிற்கு நம் உடலின் சில பாகங்களில் மாற்றங்கள் ஏற்படுவதை உணராலம். மனம் தன் வெளிப்பாட்டை உடலில் காண்பிக்கிறது. அப்படியானால் உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது மூளைதானே அப்ப்படியானால் மூளைதான் மனமா?

-------------------------மூளையின் படத்தை நீங்கள் கண்டிருக்கலாம். சில மேடுகள்(கைரஸ்), சில பள்ளங்கள்(சல்கஸ்) என அதன் அமைப்பு இருக்கும். நம் நினைவுகள் ஓவ்வொன்றும் நம் மூளையில் பதிகின்றன. இதில் நமக்கு அடிக்கடி ஞாபகத்தில் இருப்பவை மேட்டில் பதியும். உபயோகத்தில் இல்லாத நினைவுகள் பள்ளத்தில் தங்கிவிடும். ஆனால் எல்லாமே மூளையில்தான் இருக்கும். நாம் பிறந்து முதல் இறக்கும் வரை எல்லாமே அது ஒரு முறை பார்க்கப்பட்டாலும், கேட்க பட்டாலும், உணரப்பட்டாலும்,............

பத்து வருடம் முன் பார்த்த ஒருவரை இப்போது பார்த்தால் எங்கோயோ பார்த்தது போல் உள்ளதே என நெற்றி சுருக்கி யோசிக்கிறோமா! அப்போது பள்ளத்தில் உள்ள நினைவுகளை தூண்டி எழுப்புகிறோம். அது நன்றாக தூண்டப்பட்டால் நிச்சயம் நினைவுக்கு வரும்.

Unconscious மனது பள்ளத்திலும் Conscious மனது மேட்டிலும் உள்ளது. நம்மால் பலவந்தமாக மறக்கடிப்படும்/மறக்கடிக்க முயற்சிக்கப்படும் நினைவுகள் பள்ளத்திற்கு சென்றாலும் மேட்டிற்கு வர முயற்சிக்கும். இதுவே கனவின் மூலமும் நடக்கிறது. வெறும் மூளையில் நினைவை தக்க வைக்க முயலும் போராட்டம் தான் இது. ஆனால் அது Conscious மனதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அதை கருத்தில் கொண்டு நடப்பீர்கள். அதனால்தான் இந்த போராட்டம்!

---------------------------

மனம் என்பது என்ன? மனது எங்கே உள்ளது என்பது பற்றி இன்னும் தெளிவான முடிவிற்கு
அறிவியலாளர்களால் வர முடியவில்லை. ஆனால் மனம் என்பது ஒரு அற்புதமான கருவி என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

மனம் எனபது தீர்மானிக்கும் ஆற்றல், பகுத்தறிவு, உடல் இயக்க ஒருங்கிணைப்பு, புலன்  உணர்வு, ஞாபக சக்தி, சுயநினைவு, மயக்கம், புலனறிவு ஆகிய எட்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. நம் ஒவ்வொரு செயலிலும் இவை இணைந்து செயல்படுகின்றன. ஒரு பந்தை பிடிக்கும்பொழுது உடல் இயக்கத்தோடு புலன் உணர்வு(பந்து நம் கையில் பிடிக்கிறோமா), பகுத்தறிவு(பந்து எங்கே வரும்) என்பவை செயல்படுகின்றன.

நெற்றிப் பகுதியில் உள்ள மூளைப் பகுதியான superior frontal gyrus அல்லது superior frontal convolutionஐ மேற்கத்திய உளவியாளலர்கள் மனதின் பிறப்பிடமாக குறிப்பிடுகிறார்கள். அவர்களின் கூற்று: மனம் என்பது பித்தப்பையில் சுரக்கும் பித்த நீர் போன்று மனம் என்பது மூளையிலிருந்து சுரக்கும் ஒன்று(ஆனால் அதை காண முடியாது). நெற்றிப் பகுதியை மனதின் பிறப்பிடம் என ஒத்துக் கொள்ளலாம். கண்களை மூடி ஒரு புள்ளியை நினைத்துக் கொண்டு அதை நெற்றியின் மையத்தில் சில நிமிடங்கள் இருத்தி வையுங்கள். மனம் ஒருமுகப்படுவதை நீங்கள் உணரலாம்.

மனதின் பிறப்பிடம் எங்கே இருந்தாலும் மனம் நிச்சயம் ஒரே இடத்தில் இருப்பதில்லை அல்லது தன் இருப்பை காட்டிக் கொள்வதில்லை. நம் உணர்வுகளுக்கு தக்கவாறு மனம் தன் இடம் இப்போதைக்கு இதுவெனச் சொல்கிறது. மனம் பற்றிய கோட்பாடுகள் அறிவியல், தத்துவ இயல், ஆன்மீகம் என பல இடங்களில் பலவாறாக கையாளப்பட்டாலும் எல்லோமே முடிவில் மனம் ஒரு அற்புதப் புதிர் என்றே சொல்கின்றன.

கனவைப் பற்றி தொடரில் மனம் பற்றி அதிகம் பேசிவிட்டேன். மனம் பற்றி ஓரளவு புரிந்தால் கனவை எளிதாக புரிந்துகொள்ளலாம். அதற்காகவே இப்பதிவு. ஒன்று மட்டும் உறுதி- உலகில் நீங்கள் எவர் ஒருவரின் மனதையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது, உங்களுடையதை தவிர.  மனம்... மனம் அறிய ஆவல் அதிகமாகிக் கொண்டே இருக்கும். மனதை பற்றி பேச எக்கச்சக்கமான விசயங்கள் அற்புதங்கள் உள்ளன. வேறு பதிவுகளில் அவற்றை சொல்கிறேன். மீண்டும் கனவிற்குள் செல்வோம்.......

-------------------------------------------------------------------

ஒரு கனவை ஆராய அதில் வரும் உருவங்கள்தான் முக்கியம் இதை Symbols என சொல்கின்றனர். இது அதில் வரும் நபர்கள், மற்ற உயிர்கள், பொருட்கள், இடங்கள், ஒலிகள், சுவை, மணம், வெளிச்சம், தொடு உணர்ச்சி, காலநிலை, உணர்வு(பயம், மகிழ்ச்சி போன்றவை), முக்கியமாக உங்களின், மற்றவர்களின் செய்கைகள் போன்றவை ஆகும். இது ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாகும் எல்லாவற்றையும் நினைவில் வைத்தால் தவிர முழுமையாக கனவை புரிந்துகொள்ள முடியாது.

உதாரணமாக....

என் கனவில் நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஒரு பிணம் என்னை துரத்திக் கொண்டே வருகிறது. அதற்கு அருகில் நான் செல்லும்போதெல்லாம் அது என்னை கடித்து விடுகிறது. நான் விழித்துக் கொண்டு விடுகிறேன். சில சமயங்களில் கனவு மிக பயங்கரமாக இருக்கும்போது நான் கனவின் நடுவிலேயே விழித்து விடுகிறேன். இருப்பினும் சில சமயம் சமாதனமாகி தூங்கினாலும் மீண்டும் அதே கனவு வருகிறது.

நீங்கள் எதைக் கண்டோ பயப்படுவதை கனவு குறிப்பிடுகிறது. கனவு கண்டவர் சிறியவரானால்-நீங்கள் சிறுவயதில் இருந்தபோது உங்கள் பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருக்க/வாழ நினைத்திருக்கலாம். கனவு கண்டவர் பெரியவரானால்-நீங்கள் சில சமூக மரபுகளை உடைத்து உங்கள் வழியில் வாழ நினைத்திருக்கலாம். இருப்பினும் சமூக வற்புறுத்தல் குறித்து பயப்படுகிறீர்கள். அந்த பிணம் உங்கள் பயத்தை குறிக்கிறது.


கனவை நாம் புரிந்துகொள்வது எளிதுதான் ஏனெனில் அதில் வருபவை தொடர்பானவை நம் வாழ்வில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் வந்துள்ளதா என நமக்கு மட்டுமே தெளிவாக தெரியும் அதனால் எளிதுதான்.

இவ்வளவெல்லாம் செய்து என் கனவை நான் புரிந்துகொள்வதால் என்ன பயன் உள்ளது? பார்ப்போம்................................

36 comments:

 1. கனவைப்பற்றி உங்கள் ஆராய்ச்சி நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது நண்பரே
  தலைப்பே ”மனம் மனம் அறிய ஆவல்” அருமையாக உள்ளது இதற்கேற்றார்போல் புகைப்படத்தொகுப்பும் சூப்பர்

  “கனவை நாம் புரிந்துகொள்வது எளிதுதான் ஏனெனில் அதில் வருபவை தொடர்பானவை நம் வாழ்வில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் வந்துள்ளதா என நமக்கு மட்டுமே தெளிவாக தெரியும் அதனால் எளிதுதான்.

  இவ்வளவெல்லாம் செய்து என் கனவை நான் புரிந்துகொள்வதால் என்ன பயன் உள்ளது? பார்ப்போம்”................................

  இன்னும் எதிர்பார்ப்புடன் ....

  வாழ்க வளமுடன்
  நட்புடன்
  மானவன்

  ReplyDelete
 2. உங்கள் பதிவு கனவு காண தூண்டுகிறது.....

  ReplyDelete
 3. மனதினைப் பற்றிய உங்கள் ஆராய்ச்சி பிரமிப்பாக உள்ளது......தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே

  ReplyDelete
 4. தேடி வந்து படிக்கும் ஆவலை உருவாக்கிக் கொண்டுருக்கீங்க. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளை நடந்த நிகழ்வுகளை இதன் மூலம் ஒப்பிட்டுக் கொள்ள உங்கள் எழுத்துக்கள் உதவியாய் இருக்கிறது.

  ReplyDelete
 5. அருமையான விளக்கம் நண்பரே தொடருங்கள் உங்கள் பணியை

  ReplyDelete
 6. இதை ஒரு புத்தகமாகவே வெளியிட்டு விடலாமே :-) நிஜமாகவே சொல்கிறேன்... மிகவும் நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 7. இதெல்லாம் கடவுளைப் பற்றிய விளக்கம் மட்டுமல்ல

  naan ivvarigali padikkumpothu neengal kanavaik kuripudugreergaloo endru ninaitheaan kadaichiyil athu manamaaga maarivittathu

  ReplyDelete
 8. நல்ல பதிவு அண்ணா... கனவுகளில் இத்தனை விசயங்கள் உள்ளதா....

  இரவு தூக்கத்தில் வரும் கனவுக்கும் பகலில் வரும் கனவுக்கும் ஏதாவது வேறுபாடு உள்ளதா.? கொஞ்சம் விளக்க முடியுமா...

  ReplyDelete
 9. மூளை பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன் நண்பா....

  ReplyDelete
 10. சார் நேற்று ஒரு கனவு கண்டேன் அதி என்னை சுற்றி ஏராளமானோர் கூடி நிற்கின்றனர். நான் மட்டும் ஒரு நாற்காலியில் நடுவில் உட்கார்ந்து உள்ளேன். அவர்கள் என்னிடம் வந்து உங்களுக்கு என்ன ஆனது என்று துக்கம் விசாரிப்பது போல் உள்ளது.

  இது ஏதேனும் அசம்பாவிதத்தை குறிக்கிறதா. இதற்கு என்ன பொருள் என்று தங்களால் கூற முடியுமா.

  ReplyDelete
 11. மனசு பத்தி அற்புதமா சொல்லியிருக்கீங்க நண்பரே.. மூளை இருக்கறதாலதான் யோசிக்க முடியுது.. மனசுதான் யோசிக்குது.. உடம்புல இருக்கற ஒவ்வொரு பாகத்தையும் மூளை கண்ட்ரோல் பண்ணுது.. என்ன வேலை செய்யனும்னாலும் மூளையில் இருந்துதான் கட்டளை போகுது.. அதனால மூளையைத்தான் மனசுன்னு சொல்றோம்னு நினைக்கிறேன்..

  நெற்றியில நம்ம கான்சென்ட்ரேசன் முழுசையும் அடக்கமுடியும்னு நீங்க சொல்றது நல்ல பாயின்ட்..

  கனவைப் பற்றியை உங்களது தொடர் அருமை.. தொடர்ந்து எழுதுங்க.. படிக்கக் காத்திருக்கிறோம்..

  ReplyDelete
 12. ரொம்ப நல்லா போகுது இந்த தொடர் ஆராய்ச்சி குரிப்புகள் சூப்பர்

  ReplyDelete
 13. அப்போ வெற்றிவிழா, Who Am I? படத்துலலாம் பழைசை மறந்துடற மாதிரி காட்டுறதுலாம் உண்மையா? இல்லையா?

  ReplyDelete
 14. //மாணவன் said...//
  மிக்க நன்றி நண்பரே!!

  //Muniappan Pakkangal said...//
  மிக்க நன்றி சார்!

  //அன்பரசன் said...//
  மிக்க நன்றி நண்பரே!

  //denim said...//
  நன்றி நண்பா!!

  //ஜோதிஜி said...//
  தங்கள் கருத்து மென்மேலும் ஊக்கமளிக்கிறது!

  //யாதவன் said...//
  நன்றி நண்பரே!

  //கருந்தேள் கண்ணாயிரம் said...//
  தொடர் முடியட்டும்! பார்க்கலாங்க! நன்றி!!!

  //vinu said...//
  மிக்க நன்றிங்க!!!

  //வெறும்பய said...//
  நன்றி நண்பா!
  தூங்கும் முறை மாறும்போது, அதாவது உதாரணமாக நைட் ட்யூட்டி பார்ப்பவர்கள் பகலில் தூங்கும்போது காணும் கனவுகள் இரவு கனவை போன்றவையே. ஆனால் வழக்கமாக இரவுகளில் தூங்குபவர் பகலிலும் சிறு தூக்கம் தூங்கும்போது ஏற்படும் கனவுகளுக்கும் இரவு கனவுகளுக்கும் வித்தியாசம் உண்டு! இதைப் பற்றி மேலும் விளக்கங்களை வரும் பதிவுகளில் காணலாம்!

  ReplyDelete
 15. //சௌந்தர் said...//
  நன்றி நண்பா!!

  //சசிகுமார் said...//
  நண்பரே துக்கம் விசாரிப்பது நமக்கு ஆறுதல் தேவைப்படுவதை குறிக்கிறது. தாங்கள் சமீப காலத்தில் எதற்காகவாவது கவலைப்படுகிறீர்களா? ஆறுதல் தேடுகிறீர்களா?
  இருப்பினும் மேலும் முழு விவரங்கள் தெரிந்தால் மட்டுமே கனவை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.

  ReplyDelete
 16. //பதிவுலகில் பாபு said...//
  நன்றி நண்பரே!

  //ஆர்.கே.சதீஷ்குமார் said...//
  நன்றி நண்பரே!

  //அருண் பிரசாத் said...//
  உண்மைதான்! அம்னீஷியா என்பது அதன் பெயர் அதாவது தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நினைவு போகுதல், இது அந்த நினைவு மூளையில் பதிந்துள்ள இடங்களில் அடிபடுபதால் ஏற்படுகிறது. அந்த முழுமையாக சிதையாது. அங்கே அந்த நினைவுகள் மீண்டும் தூண்டப்பட்டால் ஞாபகங்கள் மீண்டும் வரக்கூடும்!!!

  ReplyDelete
 17. அருமையான தகவல்கள். நிறைய யோசிக்கவும் வைக்குது.புரியாத புதிர்கள் தான் உலகத்தில் எத்தனை?

  ReplyDelete
 18. அருமையான தகவல் நண்பரே

  ReplyDelete
 19. ///ஏனெனில் இங்கே மனதை பற்றி புரிந்துகொள்வது அதே மனம்தான்!
  ///
  ஆமாங்க ., அதனாலதான் பிரச்சினையே ,,

  ReplyDelete
 20. எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலை அண்ணா ,,
  அவ்வளவு அருமையா இருக்கு .. கனவு பத்தி எழுதி முடிச்சிட்டு தயவு செய்து மனம் பற்றியும் எழுதுங்க ,, இது எனது வேண்டுகோள் ,,,

  ReplyDelete
 21. //எம்.ஞானசேகரன் said...//
  மிக்க நன்றி! நிறைய புதிர்கள் உலகத்தில் உள்ளன!!!

  //padaipali said...//
  நன்றி நண்பரே!

  //ப.செல்வக்குமார் said...//
  நிச்சயம் எழுதுகிறேன் நண்பா!

  ReplyDelete
 22. எஸ்.கே! நான் விட்டுவிடாமல் படிக்கும் தொடர் உங்கள் கனவுகள்.. மிக நன்றாக எழுதுகிறீர்கள் !

  ReplyDelete
 23. சாரி ஃபார் லேட் எண்ட்ரி

  ReplyDelete
 24. சுஜாதா எழுதிய ஏன் எதற்கு எப்படி புக்கில் படிப்பது போல் உள்ளது,உங்கள் அனுபவ அறிவு போற்றத்தக்கது

  ReplyDelete
 25. எஸ்.கே,

  கலக்கறீங்க போங்க. தயவு செஞ்சு கவிதையெல்லாம் எழுத முயற்சிக்காதீங்க, அப்புறம் யாரும் என்னோட பதிவைப் படிக்கமாட்டாங்க....

  எழுத்து நடை மிகவும் அருமை நண்பா....

  மூளை பற்றிய விஷயங்கள் மிகவும் புதுமை. தொடருங்கள்....

  ReplyDelete
 26. அருமையான பதிவுங்க.

  ReplyDelete
 27. //மோகன்ஜி said...//
  மிகவும் மகிழ்ச்சி! நன்றிங்க!

  //சி.பி.செந்தில்குமார் said...//
  எப்போ வேண்டுமானாலும் வரலாம் சார்!
  அப்புறம் அனுபவ அறிவெல்லாம் ஒன்னுமில்ல! ஆர்வத்தினால் கற்றுக் கொண்டதுதான்!

  // சு.மோகன் said...//
  இன்னும் பல விசயங்கள் மனதை பற்றி உள்ளது, இது கனவை பற்றிய தொடர் என்பதால் கொஞ்சத்தோடு நிறுத்தி விட்டேன்! நன்றி!

  //சுசி said...//
  நன்றிங்க!

  ReplyDelete
 28. //vanathy said...//
  நன்றிங்க!

  ReplyDelete
 29. மிக அருமையான தகவல்கள் எளிமையான விளக்கங்கள் நன்றி நண்பரே.

  //உலகில் நீங்கள் எவர் ஒருவரின் மனதையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது//

  உண்மைதான் நண்பரே அதிலும் பெண்கள் மனதை அறிவது இன்னம் சிரமம்.

  ReplyDelete
 30. //Thomas Ruban said...//
  :-) நன்றி நண்பரே!

  ReplyDelete
 31. மனதையும் கனவையும் கூறு போட்டு பகிர்ந்திருக்கிறீர்கள்.அருமையான தொடர்

  ReplyDelete
 32. //Kalidoss said...//
  மிக்க நன்றிங்க!

  ReplyDelete