Wednesday, October 13, 2010

கனவுகள் 2 - முக்கியத்துவம்

கனவுகள் பற்றிய ஒரு பெரும் தொடரை எழுத ஆசை. பல தகவல்கள் சேர்த்து வைத்தேன். ஒரு பதிவு போட்டேன். மீண்டும் அதை தொடரலாம் என ஆரம்பித்துள்ளேன். பிடித்திருந்தால் சொல்லவும். இதன் முதல் பதிவு. கனவுகள் - அறிமுகம்
  ______________

கனவுகள் என்பவை உணர்வுகள், நினைவுகள், கோட்பாடுகள், மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவை. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் உலகம் முழுதும் உள்ளன. பல அமானுஷ்ய நம்பமுடியாத நிகழ்வுகள், நம்பிக்கைகள், அனுபவங்கள் கனவுகள் சார்ந்து ஏற்பட்டுள்ளன. கனவுகள் நம் வாழ்வுடன் ஒன்றிப்போனது. பல ஜீவராசிகள் கனவு காண்கின்றன. கனவு ஏன் காண வேண்டும். கனவு எப்போது, எப்படி உருவாகிறது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். அதற்கு முன் கனவை பற்றி அறிவதால் என்ன பயன்?

சில கனவுகள் நமக்கு ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம். உங்கள் வாழ்நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனவுகளை காண்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அவை பகலிலும் காணப்பட்டிருக்கலாம், இரவிலும் காணப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட கனவு உங்களுக்கு முக்கியமானது என நீங்கள் எப்படி உணரலாம்?

கீழ்காணும் ஏழு காரணிகளில் எவையாவது உங்கள் சமீபத்திய ஒரு கனவுடன் ஒத்துப் போனால் அந்த கனவு உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஒரு செக்லிஸ்ட் போல இதை ஒரு சமீபத்திய கனவுடன் பயன்படுத்தி பாருங்கள்.

1.பலமான உணர்வுகள். அந்த கனவு உங்களை உணர்வுரீதியாக பாதித்ததா?
உணர்வுகளுடன் வரும் கனவுகள் அவ்வப்போது தகவல்களுடன்  இருக்கும். அவை நிலைகுலைய செய்தாலும், அவற்றை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும்படி இருக்கும், அதாவது அது சந்தோசமான கனவோ, பயங்கரமான கனவோ அதில் வரும் விஷயங்கள் தெளிவாக இருக்கும்.

2. தூண்டக்கூடிய உருவங்கள். கனவில் வந்த ஒரு உருவம் மிகவும் பயங்கரமாக, பயமுறுத்தும்படி இருந்ததா, அதனால் அதைப் பற்றி நினைப்பை உங்களால் தடுக்க முடியவில்லையா? இதைப் போன்ற தீவிரமான எண்ணங்கள் அதை மீண்டும் வேறொரு சமயம் நினைப்பதற்காக நம் நினைவாற்றலை தூண்டி விடுகிறது. இதனால் அந்த எண்ணங்கள்/பிம்பங்க:ள் அடிக்கடி மனதில் தோன்றுகின்றன.

3. மீண்டும் ஒரே கனவு அல்லது பிம்பங்கள் தோன்றுதல். அதாவது ஒரு கனவு அல்லது சம்பவம் அல்லது உருவம் ஏற்கனவே ஒருதடவை வந்திருந்தால், அதை ஒரு அறிகுறியாகக் கொள்ளலாம்.

4. அதைப் பற்றி நினைக்கவே முடியாது. உதாரணமாக nightmare எனப்படும் இரவில் ஏற்படும் சொல்ல முடியாத பயங்கர கணவுகள் நம்மிடம் எதையோ உணர்த்த முயற்சிக்கின்றன. அவற்றைப் பற்றி நினைத்துப் பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவற்றை புரிந்துகொண்டால் உங்களுக்கு சரியாகிவிடும்.

5. உங்களுக்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மாற்றத்தை நோக்கி ஆழ்ந்து சிந்தித்து கொண்டிருப்பீர்கள். மாற்றம் என்றவுடன் திருமணம், வேலை அல்லது மற்றவற்றில் மாறுதல்களை கருத்தில் கொள்ள வேண்டாம். கனவில் வருபவற்றை உங்கள் உள்மனதிற்கு(ஆத்மா) என்றும் மாறாத வாழ்வின் அம்சங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம்.

6. அது உங்களை சுற்றிக் கொண்டே இருக்கும். சில கனவுகள் எளிதில் மறைந்துவிடாது. அவை நம் அன்றாட பணிகளை செய்யும்போது அவை நம்மை சுற்றி வாசனை போல ஒட்டிக் கொண்டிருக்கும். இப்படி நேர்ந்தால், உங்கள் ஆழ்மனது நீங்கள் அதை நினைக்க வேண்டும் எனவும் அது சொல்லும் செய்தியை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது.

7. அறிந்துகொள்ள ஆர்வமாய் இருத்தல். எல்லோரும் கனவிலிருந்து விழித்துக் கொண்டு உணர்வுரீதியாகவோ, அவர்கள் பார்த்த உருவங்களாலோ பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நீங்கள் உங்கள் கனவை பற்றி உண்மையாக அறிய ஆர்வம், ஆசை இருந்தால், அதுவும் ஒரு மதிப்புள்ள அறிகுறியாகும்.

மேற்கண்ட ஏழு காரணிகளில் ஏதாவது ஒன்றாவது உங்களோடு ஒத்துப்போனால், அக்கனவைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்வது அவசியம் ஏனெனில் அது சில உதவிகரமான உள்ளுணர்வுகளை கொண்டிருக்கலாம். இத்தொடரின்போது பலருக்கு ஏற்பட்ட பலவித கனவுகள் அவை சார்ந்த விசயங்களை ஆங்காங்கே சொல்கிறேன். மற்றவர்களின் கனவுகள், ஒரே மாதிரியான கனவுகள், அவை சொல்லும் செய்திகளை அறியும்பொழுது, அது உங்களுக்கு பலன்களை அளிக்கலாம்.
___________________

ஆஸ்திரிய நாட்டின் ஆர்க்டியூக்(Archduke- ஆஸ்திரிய நாட்டு இளவரசருக்கு சமமான பதவி) ஃபிரான்ஸ் ஃபெர்டின்லேண்டும் அவரின் மனைவியும், அரசியல் நெருக்கடிகளை தூண்டி விட்டனர் இது முதலாம் உலகப் போருக்கு வித்திட்ட முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாகும். ஜூன் 28, 1913 இரவு ஆர்க்டியூக்கின் முன்னாள் வழிகாட்டியான, பிஷப் ஜோசப் லேன்யி என்பவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஆர்க்டியூக் தம்பதியினர் ஒரு அணிவகுப்பில் ஒரு திறந்த காரில் செல்லும்போது சுடப்பட்டு கிடப்பது போல அவருக்கு கனவு வந்தது. லேன்யி அதை ஒரு ஓவியமாக வரைந்து வைத்தார். பிறகு அச்சம்பவம் உண்மையாகவே மறுநாள் நடந்தது. அந்த காட்சி ஒரு புகைப்படமாக செய்தித்தாள்களில் வெளி வந்தது. அது லேன்யி வரைந்த ஓவியத்துடன் ஒத்துப்போனது.

59 comments:

  1. எனக்குத் தன் சுடு சோறு

    ReplyDelete
  2. சகோதரா பல உண்மையான விடயங்களைச் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. கனவிற்குள் பல விஷயங்கள் புதைந்துள்ளன..
    சில சமயம் கனவு அபத்தமாகவும் இருப்பதுண்டு..

    ReplyDelete
  4. nice, MR.KAASHYABAN has written post about this.
    http://kashyapan.blogspot.com/2010/10/there-is-no-fiction.html

    ReplyDelete
  5. //ம.தி.சுதா said...//
    நன்றி சகோதரா!

    //Madhavan said...//
    தாங்கள் சொன்னது உண்மைதான் அவையெல்லாவற்றையும் ஆராயத்தான் இத்தொடர்!

    ReplyDelete
  6. //ராம்ஜி_யாஹூ said...//
    தங்கள் தகவலுக்கு மிக்க நன்றிங்க! நிச்சயம் பார்க்கிறேன்!

    ReplyDelete
  7. நண்பா...
    நல்லவேள..சின்ன பதிவா எழுதுனீங்க.படிக்க ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. தையல் ஊசிக்கு காது கண்டுபிடிச்ச கதைய சொல்லாம விட்டீங்களே...எல்லோரும் சொல்லி சொல்லி புளிச்சுப் போச்சு...

    மக்களே..நம்ம எஸ்.கே M.Sc சைக்காலஜி படிச்சவர். உங்கள் சந்தேகங்கள் எல்லாத்தையும் கேக்கலாம்

    ReplyDelete
  8. அப்பறம்..சில பேர் கனவுல நமீதா வகையறாக்கள் வரதா சொல்றாங்களே..(உங்க அனுபவம் எப்படி).அதுக்கு ஏதும் பண்ண முடியாதா.....

    ReplyDelete
  9. //கொழந்த said...//
    தொடரத்தானே போறோம்னுதான் சின்னதா எழுதனேன்! பழைய கதைகளை சொல்லாமல் கொஞ்சம் புதியதா சொல்லலாம்!

    சைக்காலஜி படிச்சு என்னங்க பண்ண! கவுன்சிலிங் பக்கம் போகலாம்னுதான் யோசனை நிலைமை இப்ப ஒன்னும் செய்ய முடியாது! பார்க்கலாம்! காலம் மாற்றலாம்!

    ReplyDelete
  10. //கொழந்த said...
    அப்பறம்..சில பேர் கனவுல நமீதா வகையறாக்கள் வரதா சொல்றாங்களே..(உங்க அனுபவம் எப்படி).அதுக்கு ஏதும் பண்ண முடியாதா.....//
    எனக்கு அந்த மாதிரி பயங்கரமான கனவுகள் வந்ததில்ல!:-) பொதுவா கனவுகள் முக்காவாசி ஆசைகள் சம்பந்தபட்டவைதான்!

    ReplyDelete
  11. ஓவர் கனவு உடம்புக்கு ஆகாது!

    ReplyDelete
  12. // KANA VARO said...
    ஓவர் கனவு உடம்புக்கு ஆகாது!//
    அப்படி சொல்ல முடியாதுங்க. ஏன்னா தினமும் நாம கனவு கண்டுகிட்டுதான் இருக்கோம் ஆனா எல்லாமே ஞாபகத்தில இருக்கிறதுல்ல! ஆனா கனவை ஓவரா நினைச்சு பார்க்கிறது கெடுதல்தான்!

    ReplyDelete
  13. எனக்கு அடிக்கடி (ஒரு வாரத்துல அட்லீஸ்ட் 2-3 தடவை) வர்ர கனவு எது தெரியுமா? 1. என்னோட காலேஜ் பசங்க கும்பலோட சேர்ந்து ரவுசு பண்றது.. 2. ஏதோ ஒரு உயரமான பில்டிங் மேல நிக்குறது.. அங்கிருந்து குதிக்குறது.. 3. ஜாலியா பறந்து போறது..

    இந்தக் கனவுகள், அடிக்கடி வரும் :-) .. கனவு சாஸ்திரம் எதாவது இருந்தா, இதுக்குப் பலன் சொல்லுங்க தல ..

    பலனைப் பொறுத்து, கரியர் மாத்தலாம்னு இருக்கேன் ;-) .. நிசம்மா..

    ReplyDelete
  14. கனவா? நமக்கு ஆகாது அக்டோபர் 15 தேதி வரைக்கும்:))

    நல்ல பதிவு எஸ். கே. போகிற போக்கில் படிக்க முடியாது இது போன்ற விஷயங்களை. கொஞ்சம் நேரம் செலவிட்டுப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஊருக்குப் போயிட்டு வந்துட்டுப் படிக்கிறேன்.

    ReplyDelete
  15. எஸ்.கேகேகேகே.... உங்க ப்ளாக்கா இது??? நான் யார் ப்ளாக்னே தெரியாம படிச்சிட்டு இருக்கேன்... கமெண்ட்ல உங்க பேர பாத்து ஷாக் ஆகிட்டேன்... சரி விடுங்க... உங்க வீட்டுக்கு வழி தெரிஞ்சி போச்சி இனி கலக்கிடலாம்.... :))

    ReplyDelete
  16. கனவுகளை பற்றி ஒரு கதை எழுதி வருகிறேன். கேணிவனம் முடிந்ததும் தொடங்கலாம் என்று எண்ணம். அதற்கான தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். இச்சமயத்தில் உங்களது இந்த பதிவு ரொம்பவும் உபயோகமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது. நன்றி

    -
    DREAMER

    ReplyDelete
  17. கனவுகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. சுவாரசியமான தகவல்கள்... சில சமயங்களில் கனவுகளில் வரும் வாழ்க்கை தான் மகிழ்ச்சியை தருகிறது...

    ReplyDelete
  19. @எஸ் .கே .
    கனவு நல்ல இருக்கு .அடிகடி இந்த மாதிரி பதிவும் எழுதுங்க .........

    ReplyDelete
  20. கனவு நிறைவேறாத ஆசையாலும் வரும்
    நல்ல பதிவு நண்பா

    ReplyDelete
  21. கனவின் நிறம் கருப்பு வெள்ளை தொடருங்கள் சிக்மன் பிரியிட் கனவைப்பட்டி அருமையாய் சொல்லியுள்ளார்

    ReplyDelete
  22. //கருந்தேள் கண்ணாயிரம் said...//
    கனவு பலன்கள் குறித்தவை பற்றி ஒரு பதிவில் விளக்கமாக சொல்கிறேன்.

    கனவுகளுக்கும் carrierக்கும் சம்பந்தம் இல்லை. அது உங்கள் விருப்பம் சார்ந்தது. ஆனால் உங்கள் கனவுகள் உங்களுக்கு எதையோ சொல்கின்றன.

    ReplyDelete
  23. //Gopi Ramamoorthy said...//
    எப்ப வேண்டுமானாலும் வந்து படிங்க! பயணத்தில் இனிய கனவுகள் வரட்டும்!:-)

    ReplyDelete
  24. //TERROR-PANDIYAN(VAS) said...//
    வாங்க! நீங்க வந்தது பெரிய சந்தோசம்! தொடர்ந்து வாங்க!

    ReplyDelete
  25. //DREAMER said...//
    ரொம்ப நன்றிங்க! உங்கள் வருகைக்கும் நன்றி!

    ReplyDelete
  26. //Chitra said...//
    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  27. //வெறும்பய said...//
    நன்றி நண்பா! ஏன் தங்கள் வார்த்தைகளில் இப்போதெல்லாம் சோகம் தெறிக்கிறது! காலம் மாறும்!

    //இம்சைஅரசன் பாபு.. said...//
    நன்றிங்க!

    //தியாவின் பேனா said...//
    கனவு வருவதற்கு பல காரணங்கள் உண்டுதான்! எல்லாவற்றையும் அலசுவோம்!

    //யாதவன் said...//
    ஆம் நண்பரே! சிக்மண்ட் ஃப்ராய்டு பற்றி இனிவரும் பதிவுகளில் சொல்கிறேன்!

    ReplyDelete
  28. எனக்கு அடிக்கடி கீழே விழுந்து பல் உடையுற மாதிரி தான் கனவு வருது.. இதுக்கு என்ன அர்த்தம் எஸ்.கே?

    ReplyDelete
  29. //இந்திரா said...//
    கனவுகளில் பற்கள் விழுதல் என்பது பொதுவாக ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது(அதாவது குழந்தை பருவத்திலிருந்து இளம் வயதிற்கு செல்லுதல், முதிர்வயதடைதல், திருமணமாதல் போன்ற மாறுதல்கள்) ஏற்படும் கவலை, பயத்தை குறிக்கின்றன

    ReplyDelete
  30. //தூண்டக்கூடிய உருவங்கள். கனவில் வந்த ஒரு உருவம் மிகவும் பயங்கரமாக, பயமுறுத்தும்படி இருந்ததா, அதனால் அதைப் பற்றி நினைப்பை உங்களால் தடுக்க முடியவில்லையா? //

    சில சமயங்களில் பயந்தே போய்டுவேன் .. எனக்கும் இந்த கனவுகள பத்தி தெரிஞ்சிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை .. நீங்க விவரமா எழுதுங்க ..

    ReplyDelete
  31. நிச்சயம் கனவு காணும் போது சில சமயங்களில் மகிழ்ச்சியும் சில சமயங்களில் பயமும் ஏற்படுகிறது .. கனவு என்பது எல்லோரது வாழ்விலும் வரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது ..அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் . இந்தப் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் .. காரணம் நான் கனவினைப் பற்றி தெரிந்து கொல்ல வேண்டுமென நினைத்துகொண்டிருந்தேன் ..

    ReplyDelete
  32. //ப.செல்வக்குமார் said...//
    நிச்சயம் எழுதுகிறேன்! நன்றி நண்பா!

    ReplyDelete
  33. @கொழந்த,

    //சில பேர் கனவுல நமீதா வகையறாக்கள் வரதா சொல்றாங்களே...அதுக்கு ஏதும் பண்ண முடியாதா//

    அவங்க கனவுல வரதுக்கா, வராம இருக்கறதுக்கா? கொழந்தக்கு இதெல்லாம் தேவையா?

    @எஸ்.கே,

    Psychology நல்ல idea-தான், ஆனால் இந்த Psychologists பண்ற அட்டகாசம் தாங்கமுடியல. கிளி ஜோசியக்காரங்க மாதிரி ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணு சொல்றான். ஒரு Famous-ஆன ஜோக் ஞாபகம் வருது

    ஒரு அவரோட கிட்ட கேட்கறான் “சார், நாம எப்பவுமே அப்நார்மலான ஆளுங்களைப் பத்தியே பேசறமே, நார்மலான ஆளுங்களை பத்தி உங்க எண்ணம் என்ன?”

    அவர் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு சொல்றார், “அப்படி ஒருத்தன் இருந்தா விட்ராத, எப்படியாவது அவனை cure பண்ணிரலாம்”

    ReplyDelete
  34. இன்னும் ஒண்ணு ஞாபகம் வருது, மன்னிச்சுக்குங்க.

    ஒருத்தன் தன்னோட பாஸோட ரூமுக்குள்ள போகும்போதெல்லாம் ‘உச்சா’ போயிடுறான். அவனை சரி பண்றதுக்கு பாஸ் லீவு கொடுத்து ஒரு Psychiatrist-கிட்ட அனுப்புறாரு.

    சரியாகி வந்ததுக்கப்புறமும் அவன் மாதிரியே ‘உச்சா’ போயிடுறான். ‘என்னப்பா இது, சரியாகி இருச்சீன்னியே’ங்கறாரு பாஸ்.

    ’ஆமா பாஸ், இப்போ நான் இதுக்கெல்லாம் Feel பண்றதில்லை’ங்கறான் அவன்.

    ReplyDelete
  35. //சு.மோகன் said...//
    ஜோக் எல்லாம் நல்லா இருந்ததுங்க! இந்த மாதிரி நிறைய psychologist/psychiatrist ஜோக்ஸ் நிறைய இருக்கு.
    உண்மையில் நம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஆட்கள் இருந்தாலே இவர்கள் யாரும் தேவைப்பட மாட்டார்கள்!

    ReplyDelete
  36. //உண்மையில் நம் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஆட்கள் இருந்தாலே இவர்கள் யாரும் தேவைப்பட மாட்டார்கள்!//

    ரொம்பச் சரி நண்பா...

    ReplyDelete
  37. கனவைப்பற்றி அலசி ஆராய்ந்து தொகுத்தந்தமைக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  38. நல்ல பதிவு, ஆராய்ச்சி வடிவில் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றி பகிர்ந்தமைக்கு, ஆனால் எனக்கு உறங்கும்போது கனவுகள் வருவதே கிடையாது, நான் பகல் கனவு காண்பவன்...

    ReplyDelete
  39. கனவு நல்லாருக்கு., நமக்கு அடிகடி வர கனவு எது தல.

    ReplyDelete
  40. அருமையான பதிவு.கனவைப் பற்றிய உங்கள் அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  41. கனவுகள் காண்போம்..அருமை

    ReplyDelete
  42. கனவுகளை நிச்சயம் உதாசினப்படுத்திவிட முடியாது..சொல்ல வந்ததை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  43. நீங்கள் உங்கள் கனவை பற்றி உண்மையாக அறிய ஆர்வம், ஆசை இருந்தால், அதுவும் ஒரு மதிப்புள்ள அறிகுறியாகும்//
    ஆமா இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  44. SK எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரும் (வருது) ,யாரோ என்னை மேலே ஏறி கழுத்தை நெறிப்பதை போல இருக்கும்,சுய நினைவுக்கு வந்தவுடன் என்னால் ரூம்-ல் உள்ள எல்லாரையும் பார்க்க முடியும், ஆனால் கைய கூட அசைக்க முடியாது,கத்தனும்னு நினைப்பேன் ஆனா அதுவும் முடியாது,கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் கத்தி கொண்டு விழிப்பேன்... இதுக்கு என்ன அர்த்தம்...

    ReplyDelete
  45. உங்கள் பதிலுக்கு காத்து இருக்கிறேன்

    ReplyDelete
  46. //ஸாதிகா said...//
    மிக்க நன்றிங்க!

    //adhithakarikalan said...//
    கனவுகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்! நன்றி நண்பரே!

    //ராஜகோபால் said...//
    இப்பல்லாம் எந்த கனவும் ஞாபகத்தில் இருப்பதில்லை!

    //RNS said...//
    நன்றி நண்பரே!

    //இளங்கோ said...//
    நன்றிங்க!

    //padaipali said...//
    நன்றி நண்பரே!

    //ஆர்.கே.சதீஷ்குமார் said...//
    நன்றி நண்பரே!

    //denim said...//
    நண்பா நம்மை யாராவது கொல்ல முயற்சிப்பது போலவோ தக்க முயற்சிப்பது போலவோ கனவு வந்தால் தன் மீதுள்ள அல்லது மற்றவர் மீதுள்ள வெறுப்பு/கோபத்தை இது காட்டுகிறது. இருப்பினும் உங்கள் கனவை கொஞ்சம் ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.

    ReplyDelete
  47. கனவுகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  48. கண்டிப்பாக ஆராய்ந்து ஒரு விளக்கமான பதிவே போடுங்கள்

    ReplyDelete
  49. கனவுகளே! ஆயிரம் கனவுகளே!! கலக்குங்க எஸ்.கே!

    ReplyDelete
  50. //Kanchana Radhakrishnan said... //
    மிக்க நன்றிங்க!

    //denim said... //
    கனவைப் பற்றி தெளிவாக ஆராய்வோம்.

    //மோகன்ஜி said..//
    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  51. எனக்கு பிடிச்ச டாப்பிக் இது!
    எனக்கு நிறைய கனவுகள் வரும். அது எப்போதும் நினைவிலும் இருக்கும்.
    இந்த பதிவின் மூலம் நிறைய தகவல்கள் தெரிந்துக்கொண்டேன், நன்றி எஸ்.கே.

    ReplyDelete
  52. அருமையான தொடர், நம் மனதில் உள்ள (நிறைவேறாத)ஆசைகளின் வெளிப்பாடு தான் கனவா நண்பரே?
    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  53. //Priya said...//
    நன்றிங்க!

    //Thomas Ruban said...//
    நன்றி நண்பரே! தாங்கள் சொல்லியுள்ளதும் ஒரு காரணம்தான்!

    ReplyDelete
  54. உங்கள் பதிவகளை படிக்க படிக்க கனவுகளைப் பற்றி அனுபவங்களை தனியாக பதிவிட தோன்றுகிறது. நண்பர்களும் மறக்க முடியாத வியப்பான கனவுகளை பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

    நன்றி@!.

    ReplyDelete
  55. //ஜெகதீஸ்வரன். said....//
    நன்றி! முயற்சிக்கலாம்!

    ReplyDelete
  56. கனவு காணுங்கள். இந்தியா ஊழலற்ற வல்லரசாகட்டும்.
    அருமையான தொகுப்பு எஸ்.கே.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  57. //வேலன். said...//
    மிக்க நன்றி சார்!!

    ReplyDelete
  58. வணக்கம் சார் .என் பெயர் மஞ்சு நான் விஜய் டிவி நீயா நானா டீம் இருந்து எழுதுறேன் .நாங்கள் கனவு பற்றி ஒரு நிகழ்ச்சி பண்ணுறோம்.உங்களுடை கனவு வொர்க் நல்லா இருந்தது .நீங்கஎங்கshow- ல பேசினால் நல்லா இருக்கும் .உங்க போன் நம்பர் தந்தால்,.மற்ற விபரங்கள் சொல்றேன் சார் .மற்றும் என் E-Mail Id manju_arumaithatchi@yahoo.co.in

    ReplyDelete