Tuesday, October 5, 2010

அடோப் ஃபிளாஷ் (55) - Water Effect

உங்களுக்கு தேவையான படத்தை ஸ்டேஜுக்கு எடுத்துக் கொண்டு அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் graphicஐ தேர்ந்தெடுக்கவும். 30வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Frameஐ கிளிக் செய்யவும்.




புதிய லேயரை உருவாக்கவும். அதில் சிம்பலை லைப்ரரியிலிருந்து எடுத்து விடவும். அந்த சிம்பலை ஏற்கனவே உள்ள படத்தின் மீது சரியாக வைத்தி பிறகு மிக லேசாக வலது பக்கம், கீழ் பக்கம் (X:2, Y:1) நகர்த்தவும். 30வது பிரேமில் ரைட்கிளிக் செய்து Insert Frameஐ கிளிக் செய்யவும்.


புதிய லேயரை உண்டாக்கவும். ஒரு செவ்வகத்தை வரையவும். control+Bஐ அழுத்தி அதை shapeஆக மாற்றவும். பிறகு செலக்சன் டூலை பயன்படுத்தி மெல்லிய செவ்வகங்களை தேர்ந்தெடுத்து அதை டெலிட் செய்யவும். இப்படி செய்து படத்தில் உள்ள வடிவம் வரும் வரை செய்யவும்.


மற்ற லேயர்களை லாக் செய்து கொள்ளவும். பிறகு அந்த மூன்றாவது லேயரில் 10, 20, 30 ஆகிய பிரேம்களில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு 10 வது பிரேமில் கிளிக் செய்து வடிவத்தை சிறிது கீழே நகர்த்தவும். 30 பிரேமில் கிளிக் செய்து வடிவத்தை சிறிது மேலே நகர்த்தவும்.


1, 10, 20, 30 ஆகிய பிரேம்களுக்கு இடையே ரைட்கிளிக் செய்து create shape tween என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு அந்த மூன்றாவது லேயரை ரைட்கிளிக் செய்து Mask என்பதை கிளிக் செய்யவும்.


DEMO:





19 comments:

  1. நான்தான் முதல்ல

    ReplyDelete
  2. எப்போ புக்கா வரும்?

    ReplyDelete
  3. மீன் அழகா இருக்கு பதிவும் நல்லா வந்திருக்கு

    ReplyDelete
  4. //ஆர்.கே.சதீஷ்குமார் said... //
    பதிவு போட்ட உடனேயாவா!:-) நன்றி! புக் வர லேட்டாகும்!

    ReplyDelete
  5. பிரமாதம் நண்பா.
    நீங்க ஆன்லைன்ல வரும்போது சொல்லுங்க.
    உங்ககிட்ட கொஞ்சம் டவுட் கேட்க வேண்டியிருக்கு.

    ReplyDelete
  6. //அன்பரசன் said...//
    நன்றிங்க! என் மின்னஞ்சல் psych.suresh@gmail.com

    நான் பெரும்பாலும் பகலில் ஆன்லைனில் இருப்பேன்.

    ReplyDelete
  7. சூப்பர்! என் மனைவி உங்க பதிவுகளை படிச்சி பிளாஷ் கத்துகறாங்க. நன்றி பாஸ்

    ReplyDelete
  8. //அருண் பிரசாத் said...//
    மிக்க நன்றி! மகிழ்ச்சி!

    ReplyDelete
  9. என்னங்க , தண்ணிக்குள்ள இருக்குற மாதிரி இருக்கு ..! நல்லா இருக்கு..!!

    ReplyDelete
  10. //ப.செல்வக்குமார் said...//
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. Thats fine Waves...
    No Problem S.K. Keep You cell Phone near your PC... It Makes These Effects... :)
    In java script makes these kind of effects...

    ReplyDelete
  12. //Sugumarje said...//
    :-) I am not well in Javascript but try!

    ReplyDelete
  13. Hi Try See, Created by Me :)
    http://royaltouchtextiles.com

    ReplyDelete
  14. //Sugumarje said...//
    Wow very impressive! I like 3 things very much, the preloader, navigation menus, and when click menu it shrink and expand.
    It shows again your professionalism and experience. Thank you for sharing me.

    ReplyDelete
  15. மிக அருமையாக உள்ளது இப்படி புதிய விசியங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  16. //Hi Try See, Created by Me :)
    http://royaltouchtextiles.com //

    தளத்தை அருமையாக வடிவமைத்து உள்ளார் நன்றி.

    ReplyDelete
  17. //Thomas Ruban said...//
    மிக்க நன்றி நண்பா! அறிவை பூட்டி வைப்பத்ல் பயன் என்ன?

    ReplyDelete
  18. //நீங்க சொன்னது.. அறிவை பூட்டி வைப்பதால் என்ன பயன் ?
    சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  19. //Rajkumar Ravi said...//
    நன்றி! நமக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்வோம் என்ற எண்ணத்தில்தானே நம்மை போன்றோர் பதிவிடுகிறோம்.

    ReplyDelete