Sunday, August 22, 2010

அடோப் ஃபிளாஷ் (27) - Banner ads

பொதுவாக எளிமையான பட்டை விளம்பரங்கள் (banner ads)
fade in/fade out, alpha effect, motion tween, zoom in/out ஆகிய எஃபக்ட்கள கலந்து உருவாக்கப்படுகிறது.

நான் இங்கே ஒரு சிறிய எளிமையான பேனர் விளம்பரத்தை உருவாக்க போகிறேன். இந்த விளம்பரங்களை தயாரிக்கும் முன் நாம்  மூன்று விஷயங்களை முதலில் முடிவு செய்ய வேண்டும். 1. பேக்ரவுண்ட் 2. படங்கள் 3. எழுத்துக்கள்

முதலில் ஸ்டேஜ் அளவை முடிவு செய்ய வேண்டும். நான் இங்கே பேக்ரவுண்ட் சாதாரண நிறத்தில் இருக்க வேண்டுமானால் அப்படி அமைத்துக் கொள்ளலாம். அல்லது கிரேடியண்டாக இருக்க வேண்டுமானால், ஸ்டேஜின் அளவிற்கு ஒரு செவ்வகத்தை வரைந்து அதற்கு கிரேடியண்டை அளிக்கலாம்.



பிறகு நாம் சேர்க்க வேண்டிய படம் மற்றும் வாக்கியங்கள் எழுத்துக்களை மனதில் கொள்ள வேண்டும். இறுதி வடிவத்தை மனதில் கொண்ட பின் அதனை ஒரு முறை பிளாஷில் பொறுத்தி பார்த்துக் கொள்ள வேண்டும்.


பேக்ரவுண்ட் படம். மேல் வாக்கியம். கீழே உள்ள பெயர் என நான்கு லேயர்களை பிரித்துக்கொண்டு ஒவ்வொன்றிலும் அதனை சரியாக வைக்கவும்.

பிறகு நீங்கள் விரும்பும் எஃபக்டை ஒவ்வொன்றிற்கு தரலாம். கீழே உள்ள படத்தில் நான் கொடுத்துள்ள எஃபக்ட்டுகளை விளக்கியுள்ளேன்.


கடைசியாக நாம் ஒரு invisible buttonஐ உருவாக்க வேண்டும். அது எதற்காக என்றால் அந்த பேனரை கிளிக் செய்த வுடன் குறிப்பிட்ட லிங்கிற்கு செல்ல வேண்டுமல்லாவா அதற்காக.


நாம் புதிதாக ஒரு லேயரை உருவாக்கி அதில் ஒரு செவ்வகத்தை ஸ்டேஜ் சைஸுக்கு வரைய வேண்டும். இந்த லேயர் எல்லாவற்றிற்கும் மேலே இருக்க வேண்டும்.

அதை ரைட்கிளிக் செய்து சிம்பலாக கன்வர்ட் செய்யவும் buttonஐ தேர்ந்தெடுக்கவும். பிறகு லைப்ரரியில் அந்த பட்டனை கிளிக் செய்து முதலில்(Up) இருக்கும் கீபிரேமை கடைசிக்கு(Hit) இழுத்து விடவும்.


பிறகு scene 1ஐ கிளிக் செய்து மீண்டும் ஸ்டேஜுக்கு வந்தால் கீழ்காணுமாறு இருக்கும். 
அதில் பட்டனை கிளிக் செய்து Actions பெட்டியில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
ஹைலைட் செய்யப்படுள்ள இடத்தில் நீங்கள் விரும்பும் லிங்கை அளிக்கலாம்.
on (release) {
getURL("http://www.abdulkalam.com/", "_blank");
}

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:



15 comments:

  1. கலக்கல் தலைவரே என் வேண்டுகோளை நிறைவெற்றியதற்கு நன்றி.பிளாக்கருக்கு ,பர்சனலாக பயன்படுத்துவோருக்கும் மிகுந்த பலன் தரும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்

    ReplyDelete
  2. //Muniappan Pakkangal said... //
    Thanks for coming sharing your thoughts. It is an honour to me. Thank you.

    //ஆர்.கே.சதீஷ்குமார் said... //
    மிக்க நன்றி!

    ReplyDelete
  3. //Priya said...//
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  4. how to paste flash banner ads in blog.please explain.

    ReplyDelete
  5. //யூர்கன் க்ருகியர் said... //
    என் இந்த பதிவை பாருங்கள் அடோப் ஃபிளாஷ் (1)- அறிமுகம்

    ReplyDelete
  6. //Raja said...
    how to paste flash banner ads in blog.please explain. //

    கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யுங்கள் விவரங்கள் கிடைக்கும்.

    பேனர் விளம்பரங்கள்

    ReplyDelete
  7. விரைவாகப் பதில் கூறிய எஸ்.கே அவர்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. தமிழ்ல பிளாஷ் - சூப்பர் பாஸ் .. நல்லா உபயோகமா இருக்கு :) ரொம்ப நன்றி ..

    ReplyDelete
  9. //Raja said... //
    நன்றி!

    //anubaviraja said... //
    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  10. மலைப்பா இருக்கு உங்கள் பதிவுகள். பாலா மின் புத்தகத்தை வெளிப்படுத்திய விதம் அற்புதம்.

    உங்களை கவர்ந்த என் எழுத்துகள் கொஞ்சம் பெருமையா இருக்கு எஸ்கே.

    உங்கள் மின் அஞ்சல் முகவரியை வெளியே தெரியும் படி கமெண்ட் போடுங்களேன்.

    ReplyDelete
  11. அனிமேஷன்ல ரொம்ப நாளா ஆசை... :) நல்லாயிருக்கு போஸ்ட்

    ReplyDelete
  12. //ஜோதிஜி said... //
    மிக்க நன்றி! தாங்கள் என் தளத்தை பார்வையிட்டதையே நான் பெரிதாக கருதுகிறேன்!

    //மகேஷ் : ரசிகன் said... //
    மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete