முதலில் உங்களுக்கு தேவையான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ரைட்கிளிக் செய்து convert to symbolஐ கிளிக் செய்து Movie typeஐ தேர்ந்தெடுங்கள். அதன் Instance Nameல் pic என பெயரிடவும். மேலும் Use runtime bitmap caching என்பதை டிக் செய்யவும்.
பிறகு புதிய லேயரை உருவாக்கவும். உங்களுக்கு தேவையான வடிவத்தை வரையவும். பொதுவாக வட்டம் அல்லது நீள்வட்டம் பொருத்தமாக இருக்கும். அதையும் ரைட்கிளிக் செய்து convert to symbolஐ கிளிக் செய்து Movie typeஐ தேர்ந்தெடுங்கள். அதன் Instance Nameல் shape என பெயரிடவும். மேலும் Use runtime bitmap caching என்பதை டிக் செய்யவும்.
அந்த வடிவத்தை கிளிக் செய்து விட்டு, பிராப்பர்டி சேனலில் color என்பதில் Alphaவை தேர்ந்தெடுத்து எண்ணை அளிக்கவும்.
பிறகு அப்படியே filters பேனலில் + குறியை கிளிக் செய்து blurஐ தேர்ந்தெடுக்கவும். பின்னர் Blur X மற்றும் Blur Yல் தேவையான அளவை தரவும்.
பிறகு புதிய லேயரை உருவாக்கி அதன் முதல் பிரேமில் ரைட் கிளிக் செய்து Actionsஐ தேர்ந்தெடுக்கவும். வரும் பெட்டியில் கீழ்காணும் ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
pic.setMask(shape);
முதலில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் படத்திற்கான Instance Name-ம், இரண்டாவதாக ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் வடிவத்திற்கான Instance Name-ம் இருக்க வேண்டும்.
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO:
என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஜெய் ஹிந்த்!
//வெறும்பய said... //
ReplyDeleteதங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
ReplyDeleteநானும் ப்ளாஷ் படித்து கொண்டுதான் இருக்கிறேன்
//Dileep said... //
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!