Thursday, August 26, 2010

ஆக்சன்ஸ்கிரிப்ட் - 4

வேரியபிள்கள் மேலும் சில தகவல்கள்:

Variables உங்கள் புரோகிராமில் மதிப்புகளை (values) சேமிக்க பயன்படுகின்றன. ஒரு வேரியபிளை declare செய்ய, var என்னும்  statementஐ வேரியபிள் பெயருடன் பயன்படுத்டஹ் வேண்டும்.  ActionScript 2.0ல், நீங்கள் type annotationகளை பயன்படுத்தினால் மட்டுமே var statement தேவைப்படும். ஆனால் In ActionScript 3.0ல் var statement எப்போதுமே தேவைப்படும்.

var car;



ஒரு வேரியபிளை டிக்ளேர் செய்யும்போது var statementஐ விட்டுவிட்டால், உங்களுக்கு strict mode-ல் compiler error-ம், standard mode-ல் run-time error-ம் ஏற்படும்.

ஒரு வேரியபிளை ஒரு data type உடன் இணைக்க, நீங்கள் கண்டிப்பாக வேரியபிளை டிக்ளேர் செய்ய வேண்டும். வேரியபிள் வகை இல்லாமல் ஒரு வேரியபிளை டிக்ளேர் செய்வது தவறில்லைதான். ஆனால் strict mode-ல் compiler warning ஏற்படும்.

நீங்கள் ஒரு வேரியபிளை டிக்ளேர் செய்யும்போதே மதிப்பையும் கொடுக்கலாம்.

var car:int = 20;

நீங்கள் ஒரு வேரியபிளை டிக்ளேர் செய்யும்போதே மதிப்பையும் கொடுக்கும் முறை integers மற்றும் strings போன்ற சாதாரண மதிப்புகளுக்கு மட்டும் பயன்படாமல், ஒரு array அல்லது ஒரு class-ன்  instance-க்காகவும் பயன்படும்.

var numArray:Array = ["zero", "one", "two"];

புதிய operatorஐ பயன்படுத்துவதன் மூலம் ஒரு class-ன்  instance-ஐ உருவாக்கலாம். கீழ்காணும் எடுத்துக்காட்டில் CustomClass என பெயரிடப்பட்ட ஒரு instanceஐ உருவாக்குகிறது, மேலும் customItem என பெயரிடப்பட்ட வேரியபிளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட class instance-க்கு குறிப்பு தருகிறது:

var customItem:CustomClass = new CustomClass();

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேரியபிள்களை டிக்ளேர் செய்ய வேண்டியிருந்தால் அவை அனைத்தையும் comma(காற்புள்ளி) operator ( , )ஐ பயன்படுத்தி ஒன்றாக ஒரே கோட்டில் டிக்ளேர் செய்யலாம்.

var a:int, b:int, c:int;

மேலும் ஒவ்வொரு வேரியபிளின் மதிப்புகளையும் ஒரே கோட்டில் எழுதலாம்

var a:int = 10, b:int = 20, c:int = 30;

நீங்கள் comma operator மூஅலம் variable declarationகளை ஒரே statement-ஆக குழுப்படுத்தலாம் என்றாலும், அப்படி செய்வது உங்கள் கோடை படிக்க சிரமமளிக்கும்.

4 comments:

  1. Kindly visit my blog for a article 'Extra Sensory Perception'..

    ReplyDelete
  2. எஸ்கே நல்ல தகவல்களுடன் தொழில்நுட்ப பதிவுகள் இடுகிறீர்கள்,தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //|கீதப்ப்ரியன்|Geethappriyan| said... //
    மிக்க நன்றி சார்!

    ReplyDelete