பவர்பாயிண்ட் பயன்படுவது PRESENTATIONகளை செய்யத்தான். பிரசண்டேசன் என்பவை நீங்கள் உங்கள் புரொஜக்ட்காகவோ அல்லது வேறு விசயங்களுக்காகவோ இருக்கலாம். அனிமேசனை எளிதில் செய்து பார்க்க நல்ல மென்பொருள் பவர்பாயிண்ட்தான். அந்த எழுத்துகளையும் படங்களையும் நகரவைத்து மறைய வைத்து பார்க்கும்போது புதிததாக செய்பவர்களுக்கு எதையோ பெரிதாக செய்வது போன்ற சந்தோசத்தை அளிக்கும்.
உண்மையில் பவர்பாயிண்டை வெறும் அலுவலக, கல்வி பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் மற்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். பவர்பாயிண்ட் மூலம் நாம் விழாக்களில் எடுக்கும் புகைப்படங்களை வைத்து அழகாக ஸ்லைட் ஷோவை இசையுடன் செய்து சிடியாக மாற்றலாம்.
அப்புறம் ஒரு சின்ன விசயம்:வேர்ட் ஃபைலில் நாம் டைப் செய்தவற்றை பவர்பாயிண்ட்டாக மாற்றலாம். தலைப்பாக வரவேண்டிய வாக்கியத்தை செலக்ட் செய்து அதன் ஸ்டைலை Heading 1ஆக மாற்றவும். பிறகு கீழே வரவேண்டிய தகவல்களை செலக்ட் செய்து அவற்றின் ஸ்டைலை Heading 2ஆக மாற்றிக் கொள்ளவும். MS-word 2003ல் File->Send to->Powerpointஐ தேர்ந்தெடுக்கவும். MS-word 2007 என்றால் அதை சேவ் செய்து விட்டு க்ளோஸ் செய்யவும். பிறகு 2007 பவர்பாய்ண்டில் அந்த ஃபைலை திறந்தால் போதும்.
அடுத்து Ms-Excel.
எக்சல் ஒரு பெரிய கடல். இது அலுவலக, கல்வி, ஆராய்ச்சி போன்ற பல விசயங்களுக்கு பயன்படுகிறது. தமிழில் பல பிளாக்குகலில் எக்சல் டுடோரியல் வருகின்றன. எக்சலில் சில புரோக்ராமிங் மூலம் ஃபிளாஷ் கேம்களை கூட உருவாக்கலாம். இதோ சில.
# Archer Game.xls
# Batman_Excel.xls
# Bike Racing Game.xls
# Car Racing Game.xls
# Shooting Game.xls
# Tennis Challenge.xls
# super_mario_world_excel.xls
# Excel Game Golf.xls
இன்றைக்கு நான் எதையும் சொல்லவில்லை. ஏனெனில் பவர்பாயிண்டில் சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. எக்சலில் நிறைய ட்ரிக்ஸ் உள்ளன. அதற்கு தனி டுடோரியல் தேவை. அதனால் இன்றைக்கு ஒரு புது சாஃப்ட்வேர்:
Dragon NaturallySpeaking 11
முன்னாலேயே சொல்லிடுறேன். இது தமிழுக்கு அல்ல. ஆங்கிலத்திற்கு மட்டுமே. நாம் எழுதுவதை பேசும் சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. அதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதேபோல் நாம் பேச பேச அதை அப்படியே வேர்டில் எழுதும் சாஃப்ட்வேர் இது, இதை இன்ஸ்டால் செய்தவுடன் மைக்ரோஃபோனை இணைத்து அது தரும் பயிற்சியை செய்யுங்கள். மொழியில் Asian Englishஐ தேர்ந்தெடுங்கள். நீங்கள் பேச பேச உங்கள் மாடுலேசனை அது பதிவு செய்து கொள்ளும். பிறகு வேர்டில் அது தரும் ஷார்ட் கட்டை கிளிக் செய்து மைக்ரோஃபோனில் பேசினால் வேர்டில் (நோட்பேட், வேர்ட்பேடில் கூட) அது தானாக அடித்துக் கொள்ளும். நீங்க டிக்டேசன் பண்ணுங்க அது எழுதும். பிறகு ஏதேனும் மாற்ற வேண்டியிருந்தால் மாற்றிக் கொள்ளலாம். டைப் பண்ண கஷ்டப்படுவர்களுக்கு இது பயன்படும். வெளிநாடுகளில் குற்றவாளிகள் சொல்வதை அப்படியே சட்டரீதியான கோப்புகளாக மாற்ற இந்த மென்பொருளை பயன்படுத்துவார்கள். பல வேலைகளுக்கு இது பயன்படும்.
டோரண்ட் லிங்க் Nuance_Dragon_Naturally_Speaking_v10.1 (1.6 GB)
***********************************
இதுவும் ஒரு speech recognition சாஃப்ட்வேர்தான். ஆனால் ஓபன் சோர்ஸ். இதை நான் பயன்படுத்தியதில்லை. ட்ரை பண்ணி பாருங்க. CMU Sphinx
எஸ்கே,
ReplyDeleteகலக்கல்ங்க,
இந்த சாஃப்டுவேரை நான் ஆரிகிடெக்சரின் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கிறேன்.இன்னும் தொடரட்டும் நண்பா
Excel 2007 ஒரு கொடுமையான அனுபவம் தல. இப்பதான் 2010 வாங்கியிருக்கோம். இன்னும் டெஸ்ட் பண்ணலை.
ReplyDeleteஆனா.. எக்ஸல்ல ஃப்ளாஷ் கேம் பத்தி தெரியாது. டவுன்லோட் பண்ணியிருக்கேன். எப்படின்னு பார்க்கறேன்.
இது எதுனா VBScript-ல் ActiveX -ஐ எம்பட் பண்ணுற மாறியா? மேட்டர் தெரிஞ்சா இதை ஒரு பதிவா போடுங்க தல.
எஸ் கே
ReplyDeleteஉங்க முழுப்பெயர் என்ன தல?
எனக்கு வலையில் அறிமுகமான பலரும் தமிழ் தட்டெழுத்து பயிற்சி இல்லாத தொந்தரவை பேசும் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். நன்றாக எழுதத் தெரிந்தவர்கள் அந்தப் பிரச்சனையே (Google Translation based) தொடர்ந்து எழுதாத காரணம் என்று புரிந்தது. எனக்கு அந்தப் பிரச்சனையே இல்லை. அதுவே எழுதிக் குமிக்க முடிந்தது.
ஆனால் பாலா தளத்தில் உங்கள் கலக்கல் தொழில் நுட்ப அறிவைப் பார்த்த போது வியந்து போயிட்டேன். எழுதுபவர்கள் பலரும் நெருங்கிக் கேட்டால்?
பாலாவின் மின் புத்தகத்தை உங்கள் போல் கொடுக்க முடியலங்ற போது (இது போல பல) நாம் இதை கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று இப்போது வருத்தப்படுகின்றேன்.
ஆனால் இந்த ஆர்வம் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.
கும்மி இல்லாம பாலா என்ன ஒரு அக்கறை. அக்கரைச் சீமையை அக்கறையுள்ள பய புள்ள கண்க்கா மாத்தி புட்டீங்க.
உங்க கடிகாரம் 9 ஆகும் ஒலித்த ஒலியை தேவியர்கள் ரொம்பவே ரசித்தார்கள்.
சூப்பரு.
//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...//
ReplyDeleteமிக்க நன்றி!
//ஹாலிவுட் பாலா said... //
2007 ஏனோ நிறைய பேருக்கு செட்டாகலை! எக்சல் கேம்ஸ் பற்றி பின்னால் ஒரு பதிவில் எழுதுகிறேன்!
//ஜோதிஜி said... //
ReplyDeleteஎன் பெயர் சுரேஷ் குமார். அதைத் தான் சுருக்கமா எஸ்.கே-னு வெச்சிருக்கேன்!
தொழில்நுட்ப அறிவுங்கிறது ஒன்றும் கடினமானதில்லைன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா நான் கற்றுக் கொண்டது எந்த இன்ஸ்டிட்யூட்லயும் இல்லையே. கொஞ்சம் கொஞ்சமா தகவல்களை தேடித்தான் கற்றுக் கொண்டேன்.
உங்களாலையும் முடியுங்க! ஆர்வம்கிறது எப்ப வரும்னு சொல்ல முடியாது :-) ஆனா வந்துருச்சுனா நம்ம வேகத்தை நம்மலாலேயே கட்டுப்படுத்த முடியாது!
40 தொழில்நுட்ப பதிவுகளை எழுதியும் தனி வலைப்பு அதற்காக தொடங்க மாட்டேன் என்று சொல்வது உங்கள் உரிமை. உங்கள் உரிமையையும் சுதந்திரத்தையும் என்றும் மதிப்பேன். நன்றி.
ReplyDelete//பிரபு said... //
ReplyDeleteஅன்பு நண்பரே நான் எனக்கென்று ஒரு வலைப்பூவை உளவியல் சம்பந்தபட்ட விசயங்களை எழுதவே ஆரம்பித்தே. தொழில்நுட்ப பதிவுகளை உபரியாகத்தான் எழுத ஆரம்பித்தேன். ஆனால் நாளடைவில் அதுவே அதிகமாகி விட்டது. இருந்தாலும் இந்த வலைப்பூவிலிருந்து பிரிக்க மனம் வரவில்லை. தங்களைப் போன்ற சில நண்பர்களுக்கு இந்த வலைப்பூவால் ஏதேனும் பயன் கிடைத்தால் போதும். அதுவே எனக்கு கிடைக்கும் மதிப்பும் மகிழ்ச்சியும். நன்றி!
உங்கள் பதிலின் (பதிவு அல்ல) மூலம், நீங்க என்ன ரொம்ப இம்ப்ரஸ் பண்றீங்க தல...
ReplyDeleteஅனைத்துப் பதிவுகளையும் பொறுமையாய் படிக்கிறேன். நெறையா எழுதிருக்கீங்க...:)
தமிழில் மிக முக்கியமான வலை பதிவு உங்களுடையது.
ReplyDeleteநான் எனக்கு தெரிந்த நண்பர்கள்,கல்லுரி மாணவர்கள்,+2,10 ம் வகுப்பு மாணவர்களுக்கு உங்கள் வலை பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.
தொடர்ந்து நிறைய எலுதுங்கள்.
நண்பா..என்ன நீங்க பவர்பாயிண்ட சட்டுன்னு முடிச்சிட்டிங்க..நா கடைசியா வேலை பார்த்த இடத்தில் எங்க சாப்ட்வேர் பத்திய அனைத்து விவரங்களையும் கிளைன்ட்க்கு presentation பண்ணறப்ப அதை நான் தான் தயார் செய்வேன். அதுல பவர்பாயிண்டோட முழு திறனையும் கிட்டத்தட்ட தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDelete//கொழந்த said... //
ReplyDeleteநண்பா பவர்பாயிண்டில் பல விசயங்களை பிரசண்டேசனை பலவிதத்தில் செய்யலாம்தான். அது நம் creativityஐ பொறுத்தது. அதில் உள்ள designing & animation விசயங்களை பயன்படுத்துவதை பொறுத்து பலவிசயத்தை செய்யலாம். இந்த தொடரை டுடோரியல் தொடராக அமைக்கவில்லை. அதனால் அதைப் பற்றி விளக்கமாக எழுதவில்லை. அவ்வளவுதான். மற்றபடி எக்சல், பவர்பாயிண்ட்டை பற்றி தனியாக வேறு பதிவுகளில் எழுதுகிறேன். நன்றி!
//சரவணக்குமார் said... //
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
//Phantom Mohan said... //
ReplyDeleteநண்பா நாம் இறக்கும் தருவாயில் நாம் செய்த பயனுள்ள விசயங்கள் எவை என நினைத்துப் பார்க்க ஏதாவது செய்ய வேண்டும். எனக்கு இந்த பிளாக் அந்த உணர்வை தரும் என நினைக்கிறேன்.
நல்லா இருக்குங்க ..
ReplyDeleteஅப்புறம் போன பதிவுல நீங்க கொடுத்திருந்த excel கேம்ஸ் விளையாட முடியல ..
அத eppadi விளையாடுறது அப்படின்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் ..
அப்புறம் அந்த Portable adobe flash cs3.rar அப்படிங்கிற பைல நான் தரவிரக்கிருக்கேன். ஆனா அது ஓபன் ஆக மாட்டேங்குது. அப்புறம் எப்படி நான் பிளாஷ் அனிமேஷன் களை உருவாக்குவது அப்படிங்கிறதையும் சொல்லுங்க ..
//ப.செல்வக்குமார் said... //
ReplyDeleteexcel கேம்ஸ் விளையாடுறது ஈஸி. அதிலேயே instructions இருக்கும். Portable adobe flash cs3.rar ஐ extract பண்ணி திறக்கணும். தெரியவில்லையென்றால் உங்கள் மின்னஞ்சல் கொடுக்கவும். விளக்கமாக மெயில் அனுப்புகிறேன். பிளாஷ் அனிமேஷன்களை உருவாக்க நான் அடோஃப் பிளாஷ் தலைப்பில் இதுவரை கொடுத்துள்ள எல்லாப் பதிவுகளையும் பாருங்கள்.
thamizhbarathi@gmail.com
ReplyDeleteநல்லா இருக்குங்க சுரேஷ்..
ReplyDelete//அன்பரசன் said... //
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
என் வலைப்பூவில் உங்கள் பின்தொடர்தலுக்கு நன்றி.
ReplyDeleteஇன்று தான் உங்கள் வலைப்பூவில் கண் பதித்தேன்.. எவ்வளவு விஷயங்கள்! உங்கள் ஆர்வம் பிரமிப்பூட்டுகிறது.ஒரு பெரிய வங்கியில் மேலாலர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் பாடம் நடத்தும் Faculty Member நான்.பவர்பாயின்ட் அதிகம் உபயோகப் படுத்துவதால்,உங்கள் பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. உங்கள் தோழமைக்கு நன்றி. அடிக்கடி தொடர்பு கொள்வோம்
//மோகன்ஜி said... //
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நண்பரே உங்கள் தளம் தவிர்க்க முடியாத(கூடத) புக்மார்க் ஆகிவிட்டது. உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி...
ReplyDelete//Thomas Ruban said... //
ReplyDeleteமகிழ்ச்சி!