Ripple effect என்பது நீரில் அலைகள் உருவாகுவது போன்ற பிம்பமே ஆகும்.
நான் இந்த பதிவில் ஸ்ட்ரெய்ட் ரிப்பிள் எஃபக்ட்டை பற்றி சொல்ல போகிறேன். சர்குலார்(வட்ட வடிவ) ரிப்பிள் எபக்டும் உண்டு. அதை பற்றி மற்றொரு பதிவில் காண்போம்.
முதலில் Insertஐ கிளிக் செய்து Create symbol என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் name என்பதற்கு graphic எனவும் type என்பதில் Graphic ஐயும் தேர்ந்தெடுக்கவும்.
பிறகு படத்தை ரைட் கிளிக் செய்து அதை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும் அதை கிளிக் செய்து Modify->Transform->Flip Vertical என்பதை கிளிக் செய்தால் படம் தலைகீழாகி விடும். பிறகு அதை சரியாக மேலே உள்ள படத்திற்கு கீழே வைக்கவும்.
மீண்டும் Insertஐ கிளிக் செய்து Create symbol என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் Name என்பதற்கு Movie எனவும் Type என்பதற்கு Movie clip என்பதையும் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது லைப்ரரியிலிருந்து Graphicஐ ஸ்டேஜுக்கு இழுத்து விடவும்.
பிறகு அதை கிளிக் செய்தால் கீழே பிராப்பர்டி பேனலில் color என்பதில் Alphaவை தேர்ந்தெடுக்கவும் அதில் 0%ஐ தேர்ந்தெடுக்கவும்.
பிறகு ஐந்தாவது பிரேமில் ரைட்கிளிக் செய்து கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு படத்தை கிளிக் செய்து பிராப்பர்டி பேனலில் color என்பதில் Alphaவை தேர்ந்தெடுக்கவும் அதில் 100%ஐ தேர்ந்தெடுக்கவும்.
இதேபோல் 15 மற்றும் 20வது பிரேமில் கீபிரேமை இன்சர்ட் செய்யவும். 15வது பிரேமில் படத்தை எதுவும் செய்ய வேண்டாம். ஆனால் 20வது பிரேமில் படத்தின் Alphaவை மீண்டும் 0%ஆக மாற்றவும்.
பிறகு 1 மற்றும் 5; 15 மற்றும் 20வது பிரேம்களுக்கு இடையில் ரைட்கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.
(கவனிக்க: 5 மற்றும் 15வது பிரேமுக்கு இடையில் எதுவும் செய்யக் கூடாது)
இப்போது புதிய லேயரை உண்டாக்குங்கள். அதன் முதல் பிரேமில் கிளிக் செய்த பிறகு ஒரு செவ்வகத்தை வரையுங்கள். அதை ரிப்பிள் எஃபக்ட் எங்கே வேண்டுமோ அங்கே வையுங்கள். (நான் இங்கே கீழ்ப்பகுதி படம் தொடங்கும் இடத்தில் வைத்துள்ளேன்.)
பிறகு அந்த லேயரின் 20வது பிரேமில் கிளிக் செய்து கீபிரேமை இன்சர்ட் செய்யவும். செவ்வகத்தை படத்தின் கீழ் முனைக்கு கொண்டு செல்லவும். மேலும் அதன் அகலத்தை சிறிது குறைக்கவும்.
அந்த லேயரின் 1 முதல் 20வது பிரேம்களுக்கு இடையே ரைட்கிளிக் செய்து create shape tween என்பதை கிளிக் செய்யவும்.
பிறகு அந்த இரண்டாவது லேயரை ரைட் கிளிக் செய்து Mask என்பதை தேர்ந்தெடுக்கவும்.
அவ்வளவுதான் இதுவரை முன்னேற்பாடு வேலைகள் முடிந்து விட்டன. இனிதான் ரிப்பிள் எபக்ட்டுக்கே போகப் போகிறோம். (ம்ஹூம்!):-)
scene1 என்பதை கிளிக் செய்யவும். ஸ்டேஜ் இப்போது உங்களுக்கு தெரியும்.
முதலில் graphicஐ லைப்ரரியிலிருந்து ஸ்டேஜுக்கு எடுத்து விடுங்கள். பிறகு புதிய லேயரை உருவாக்குங்கள். அதில் 10வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்து Movieஐ கொண்டு வரவும். பின் 30வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.
பிறகு புதிய லேயரை உண்டாக்கி 20வது பிரேமில் கீபிரேமை இன்சர்ட் செய்து மீண்டும் Movieஐ கொண்டு வரவும். பின் 40வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும்.
இப்படி எத்தனை லேயர் வேண்டுமானாலும் கொண்டு வரலாம். மேலும் இடைவெளி(காலியான பிரேம்களின் அளவு) மற்றும் Movie பிரேம்களின் அளவு. செவ்வகத்தின் தடிமன் (மற்றும் fps)ஐ பொறுத்து எஃபக்ட் மாறும். (நான் இங்கே மூவியின் பிரேம்களை 20 ஆக வைத்துள்ளேன். ஏனெனில் அதை உருவாக்கும்போது 20 பிரேம்களில் உருவாக்கினோம்.)
இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.
இதை சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.
DEMO:
This comment has been removed by the author.
ReplyDeleteதல... அந்த ஏரியாவில் நீங்க என்ன சொன்னாலும் எல்லாருக்குமே கிண்டலாதான் தோணும். தப்பா எடுத்துக்காதீங்க தல.
ReplyDeleteஅண்ணே ம் ம் ம் ம் ... கலக்கல்...
ReplyDelete//வெறும்பய said...//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி! நன்றி!
//ஹாலிவுட் பாலா said... //
ஓகே:-)
சூப்பர்... எக்ஸ்செல்லேன்ட்....
ReplyDeleteகூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?
அருமை
ReplyDeletesuper
ReplyDelete//secondpen said... //
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
//மகாதேவன்-V.K said... //
மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே!
//josteepan said... //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!