Friday, August 6, 2010

அடோப் ஃபிளாஷ் (12)- Mouse Trail

இது மிகவும் எளிதான எஃபட்க்டாகும்.

முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.

முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து Actions என்பதை கிளிக் செய்யவும் அதில் வரும் பாக்ஸில் கீழ்காணும். கீழ்காணும் கோடை பேஸ்ட் செய்யவும்.




















Text = "TEXT";
letters = Text.split("");
letterformat = new TextFormat();
letterformat.font = "Verdana";
letterformat.align = "center";
letterformat.size = "10";
spacing = 8;
speed = 3;
for (var LTR = 0; LTR<letters.length; LTR++) {
        mc = _root.createEmptyMovieClip(LTR+"l", LTR);
        mc.createTextField(letters[LTR]+"t", LTR, LTR*spacing, 10, 20, 20);
        with (mc[letters[LTR]+"t"]) {
                text = letters[LTR];
                setTextFormat(letterformat);
                selectable = false;
        }
        if (LTR) {
                mc.prevClip = _root[(LTR-1)+"l"];
                mc.onEnterFrame = function() {
                        this._x += (this.prevClip._x-this._x+5)/speed;
                        this._y += (this.prevClip._y-this._y)/speed;
                };
        } else {
                mc.onEnterFrame = function() {
                        this._x += (_root._xmouse-this._x+10)/speed;
                        this._y += (_root._ymouse-this._y)/speed;
                };
        }
}
மேற்கண்ட கோடில் முதல் லைனில் ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் எந்த பெயர் ட்ரைல் ஆக வேண்டுமோ அதை எழுதவும்.

இரண்டாவதாக ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில்

letterformat.font = "Verdana"; இங்கே தேவையான ஃபோண்டை எழுதலாம்.

letterformat.size = "10"; இங்கே எழுத்தின் அளவை எழுதலாம்.

spacing = 8; இது எழுத்துகளுக்கு இடையே உள்ள இடைவெளியை குறிக்கிறது.

speed = 3; இங்கே மவுஸ் நகரும் வேகத்தையும் போடவும். குறைவான எண் போட்டால் கர்சர் உடன் எழுத்து வேகமாக நகரும்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.

இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:



6 comments:

  1. அஆஹா..இது ரொம்ப ஈசியால்ல....இருக்கு....இத முதல்ல செஞ்சி பார்த்துட வேண்டியதுதான்

    ReplyDelete
  2. //ஆர்.கே.சதீஷ்குமார் said... //
    செஞ்சு பாருங்க!

    ReplyDelete
  3. அற்புதம் நான் தற்போது தான் தங்கள் ஃபனாக்கை பார்த்தேன்.உங்களை தொடர்வது எனத் தீ்ர்மானித்துள்ளேன்
    flash player download செய்ய நீண்ட நேரம் ஆகிறது.
    ஏன்
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
  4. //krish48 said... //
    தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி! பொதுவாக ஃபிளாஷ் பிளேயர் டவுன்லோட் செய்ய அதிக நேரம் ஆவது உங்கள் இணைய வேகம், system configuration ஆகியவற்றை பொறுத்தது!

    ReplyDelete
  5. அண்ணே..உங்க பதிவ எல்லாம் படிச்சுட்டு உங்களோட மானசிக சீடன ஆகிக்கிட்டே வரேன்... இந்த கோட ரன் பன்னும் போது கீழ் கானும் பிழை செய்தி வருகிறது... தீர்வு சொல்லுங்கள்... Please...
    **Error** Scene=Scene 1, layer=Layer 1, frame=1:Line 10: ';' expected
    mc = _root.createEmptyMovieClip(LTR+"l", LTR);

    **Error** Scene=Scene 1, layer=Layer 1, frame=1:Line 29: Unexpected '}' encountered
    }

    Total ActionScript Errors: 2 Reported Errors: 2

    ReplyDelete
  6. //Blogger tamizhkavi said...//

    நண்பருக்கு,

    முதலில் நீங்கள் ஃபிளாஷ் ஃபைலை actionscript 2ல் open செய்துள்ளீர்களா என உறுதிசெய்து கொள்ளவும். பிறகு மீண்டும் இந்த ஸ்கிரிப்டை பயன்படுத்தவும் (ஸ்கிரிப்டில் சிறிய பிழை இருந்தது மாற்றி விட்டேன் மன்னிக்கவும்.)

    ReplyDelete