Sunday, August 15, 2010

அடோப் ஃபிளாஷ் (22) - Blur Mask

இதுவும் blur effect வகைதான். நாம் ஏற்கனவே பார்த்த டைனமிக் மாஸ்க் எஃபக்டை போன்றதே இது. இதற்கு இரண்டு ஒரே மாதிரியான படங்கள் தேவை. ஒன்று மங்கலானது மற்றொன்று தெளிவானது. மங்கலான படத்தை ஃபோட்டோஷாப்பில் அந்த படத்தை வைத்து Filter-> Blur-> Gaussian Blur மூலம் மங்கலாக்கி கொள்ளலாம் அல்லது ஃபிளாஷிலேயே அந்த படத்தை Movie Clip சிம்பலாக கன்வர்ட் செய்து blurஐ சேர்க்கலாம்.

சரி, நம்மிடம் இப்போது இரண்டு படங்கள் உள்ளது. தெளிவானது மற்றும் மங்கலானது. இரண்டு லேயர்களை உருவாக்கி முதல் லேயரில் மங்கலான படத்தையும் இரண்டாவது லேயரில் தெளிவான படத்தையும் வைக்கவும். (படங்கள் ஸ்டேஜ் அளவு சமமாக இருக்க வேண்டும்.)


மூன்றாவதாக ஒரு லேயரை உருவாக்கி ஒரு பார்டர் இல்லாத வடிவத்தை வரையவும். நான்காவதாக ஒரு லேயரை உருவாக்கி ஒரு பார்டர் மட்டும் வரையவும். (பார்டர் அழகுக்காக சேர்க்கப்படுவது அது இல்லாமலும் செய்யலாம்.) முடிந்தவரை பார்டரரும் வடிவமும் பொருந்தியிருக்குமாறு வைக்கவும். (அதன் அளவுகள் சரியாக இருப்பது நல்லது).

வடிவத்தை ரைட்கிளிக் செய்து convert to symbolஐ கிளிக் செய்து Movie typeஐ தேர்ந்தெடுக்கவும். அதன் Instance Nameல் px1 என எழுதவும்.பார்டரை ரைட்கிளிக் செய்து convert to symbolஐ கிளிக் செய்து Movie typeஐ தேர்ந்தெடுக்கவும். அதன் Instance Nameல் px2 என எழுதவும்.

பிறகு Mask(வடிவம்) லேயரின் முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்து கீழ்கண்ட ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
speed = .9;
setInterval(CursorMovement, 40);
function CursorMovement() {
px1._x = speed*(px1._x-_xmouse)+_xmouse;
px1._y = speed*(px1._y-_ymouse)+_ymouse;
}
பிறகு Border(வடிவம்) லேயரின் முதல் பிரேமில் ரைட்கிளிக் செய்து Actionsஐ கிளிக் செய்து கீழ்கண்ட ஸ்கிரிப்டை பேஸ்ட் செய்யவும்.
speed = .9;
setInterval(CursorMovement, 40);
function CursorMovement() {
px2._x = speed*(px2._x-_xmouse)+_xmouse;
px2._y = speed*(px2._y-_ymouse)+_ymouse;
}
ஹைலைட் செய்யப்பட்டுள்ள இடத்தில் அதனதன் Instance Name வர வேண்டும்.
மேற்கண்ட ஸ்கிரிப்ட்களை பேஸ்ட் செய்யாவிட்டால் கர்சர் நகரும்போது மாஸ்க் நகராது.

கடைசியாக மாஸ்க்(வடிவம்) லேயரை ரைட்கிளிக் செய்து Mask என்பதை கிளிக் செய்யவும்.



இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும். இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:



8 comments:

  1. so nice blog.i dont know ur blog yet u commented on my blog. becaz i wish to learn flash eagerly. No one to write about flash. now i am very happy about this blog. i will learn one by one. so thanks very much.and keep it good on coming posts.very well.

    ReplyDelete
  2. Thank you for expressing your words. If this blog useful for few peoples like you, that gives me immense pleasure. Keep going, if you have any suggestions or doubts please deliver them here.

    ReplyDelete
  3. ணா...
    ரெண்டு வருஷம் முன்னாடி காலேஜ்ல நானா பிளாஷ் கத்துக்க முயற்சி செய்தேன். அப்ப பல சைட்ட பார்த்துதான் கத்துகிட்டேன்(english சைட்ஸ்). இந்த மாதிரி தமிழ்லயும் யாராவது எழுதுனா நல்லாயிருக்குமே நெனச்சேன்.இப்போ உங்க ப்ளாக்க பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. பிளாஷ்யோட மாயா கூட எழுதலாமே? (அப்பறம் இந்தப் பதிவுகள அப்பப்ப pdfக்கு மாத்தி வெச்சுகிட்டா மொத்தமா கடைசியா e-bookஆ கொண்டு வரலாமே)

    ReplyDelete
  4. //கொழந்த said... //
    ரொம்ப சந்தோசம். நீங்க சொன்ன மாதிரி e-book ஐடியா எனக்கும் இருக்கு! அப்புறம் மாயா, 3டிமேக்ஸ் கூட போடலாம்னுதான் நெனெச்சேன். வரவேற்பு எப்படி இருக்கும்னு டவுட்டு..! சரி இப்பத்தான் நீங்க சொல்லிட்டீங்கல்ல! செஞ்சுடலாம்!

    ReplyDelete
  5. oh you know maya also. very interesting pleasure news. write it after flash tutorials. and give more flash tutorials.

    ReplyDelete
  6. //பொன்மலர் said... //
    YES MADAM

    ReplyDelete
  7. articles was also fine,Nice Post Thanks...

    ReplyDelete
  8. //Thomas Ruban said... //
    Thank you sir for sharing your thoughts and coming.

    ReplyDelete