Variables என்பவை நீங்கள் எழுதப் போகும் ஆக்சன்ஸ்கிரிப்டில் உள்ள தகவல்களுக்கு ஒரு பாதை அமைப்பவையாகும். அதாவது இவைதான் அடிப்படையானவை. ஒவ்வொரு வேரியபிளும் ஒரு valueஐ கொண்டிருக்கும்.
இந்த வேரியபிள் மதிப்பு ஒருமுறை அமைக்கப்பட்டால் மீண்டும் மாற்றப்படாது அல்லது அடிக்கடி மாற்றப்படும். ஒரு கேமில்(விளையாட்டில்) ஸ்கோர் உள்ளதல்லாவா? அது மாறிகொண்டே இருக்கும் வேரியபிள் மதிப்பு. பிளாஷ் பைல் உருவாக்கப்படு நேரம் மாறாத வேரியபிள் மதிப்பு.
வேரியபிள்கள் தகவல்களை சேமிப்பதால் நாம் அதன் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேரியபிளுக்கும் நாமே பெயரை அளிக்க வேண்டும். இதை declaration என்கிறார்கள். இந்த declaration மூலம் பிளாஷ் நாம் உருவாக்கும் வேரியபிளை அதில் உள்ள தகவலையும் அறிந்து கொள்கிறது. மதிப்பில்லாத வேரியபிள்களும் பயன்படுத்தபடுகின்றன.
variable_name = some value; இதுதான் வேரியபிளின் வடிவம்.
var country_name = "India";
இதில் country_name என்பது வேரியபிள் India என்பது அதன் மதிப்பு. ஒரு வேரியபிளை டிக்ளேர் செய்வதற்கு அதன் முன்னால் var என்ற வார்த்தை இருக்க வேண்டும்.
வேரியபிள் டிக்ளேரேசனின் பொதுவான வடிவம்:
var variablename:Classname; அல்லது
var variablename:datatype;
எடுத்துக்காட்டுகள்:
var addresses:Array; // addresses என்பது ஒரு வேரியபிள் Array என்பது class
var n:Number; // n என்பது வேரியபிள்
வேரியபிளின் வகைகள்:
வேரியபிளிகள் பலவித தகவல்களை குறித்து வைக்கப் பயன்படுகிறது. அவற்றிற்கு நாம் கொடுக்கும் பெயர் விதிகளுக்குளுக்கு உட்படாததாக இருந்தாலும், நாம் எந்த வகையான தகவலை தருகிறோம் என பிளாஷ் அறிய சில சுட்டிக்காட்டும் விஷயங்கள் தேவை. உதாரணமாக இரண்டு பெயர்களை பெருக்க முடியாது அந்த செயல் எண்களுக்கு மட்டும்தான்.
ஒரு வேரியபிளின் datatype அது எந்த வகையான தகவல் என்பதை உறுதி செய்கிறது. அடிப்படை டேடாடைப்கள்: Strings, Numbers மற்றும் Booleans.
Strings என்பவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறியீடுகளை குறிக்கும். எழுத்துக்கள், எண்கள், ஸ்பேஸ்(காலியிடம்) போன்றவற்றை குறிக்கும். String என்பதை நீங்கள் ஒரு வார்த்தை வாக்கியம் அல்லது சில குறியீடுகளை குறிப்பிட பயன்படும். String பிளாஷில் எழுத்துக்களை காண்பிக்கவும் பயன்படும்.
flower = "rose"
year = "2010"
Numbers என்பவை எண்களை குறிக்கவும் கணக்குகளை செய்யவும் பயன்படுகிறது.
capital = 1000;
interest = 100;
total = capital + interest;
இதில் capital என்பது ஒரு வேரியபிள். interest என்பது மற்றொரு வேரியபிள். total என்பது இந்த இரண்டையும் பயன்படுத்தி கிடைக்கும் மூன்றாவது வேரியபிள்.
Strings மற்றும் Numbers இரண்டும் எண்களை பயன்படுத்தினாலும் ஒரு வித்தியாசம் உள்ளது. அதாவது Strings எண்களை காண்பிக்க மட்டுமே. இது அடைப்பு குறிக்குள் வரும். Numbersல் எண்கள் மூலம் கணக்குகளை செய்யலாம்.
sum = 1+2+3; என்பது Numbers வேரியபிள் இதில் 6 என்ற புதிய மதிப்பு கிடைக்கும். ஆனால் sum = “1+2+3”; என்பது வேரியபிள். 1+2+3 இதில் என அப்படியே காண்பிக்கப்படும்.
Booleans என்பவை இந்த இரண்டு மதிப்புகளில் ஒன்றை கொண்டிருக்கும். true அல்லது false.
likeFlash = true;
வேரியபிள்களின் தொடர்ச்சி அடுத்த பதிவில் தொடரும்.
No comments:
Post a Comment