Monday, August 9, 2010

அடோப் ஃபிளாஷ் (14)- Motion guide

Motion guideக்கும் Motion tweenக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. இரண்டு குறிப்பிட்ட பிரேம்களுக்கிடையே ஒரு பொருளை நகரச் செய்வதுதான் இரண்டுமே.
ஆனால் Motion Guideல் நாம் ஒரு பாதையை வரைந்து விடுவோம் அந்த பாதையின் வழியே நம் பொருள் தானாகச் செல்லும். அவ்வளவுதான். அந்த எபஃக்டை பார்ப்போம்.



முதலில் பேக்ரவுண்ட்.

பிறகு நீங்கள் நகரவைக்க வேண்டிய படத்தை கொண்டு வரவும். நான் இங்கே 100 பிரேம்கள் எடுத்துக் கொண்டுள்ளேன்..

இப்போது படத்தின் லேயரை ரைட் கிளிக் செய்து Add Motion Guide என்பதை கிளிக் செய்யவும் இப்போது அந்த லேயருக்கு மேல் புதிய லேயர் உண்டாகியிருக்கும்.

அந்த Guide லேயரில் நீங்கள் கார்(உங்கள் படம்) எப்படி செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த பாதையை வரையுங்கள். இதற்கு பென்சில் டூலைபயன்படுத்தலாம். ஒழுங்காக பாதை போட முடியவில்லை என்றால் ஒரு வட்டத்தை வரையவும்,(Fill color இல்லாமல்). பிறகு எரேசர் டூலைபயன்படுத்தி ஒரு இடத்தில் அழித்து விட்டால் போதும். அந்த பாதை கீழ்காணுமாறு இருக்கும்.


இப்போது மற்ற லேயர்களின் 100வது பிரேமில்  ரைட் கிளிக் செய்து Insert frame என்பதை கிளிக் செய்யவும். இல்லாவிட்டால் பேக்ரவுண்டும் கைடு லேயரும் தெரியாது.

இப்போது கார் உள்ள லேயரின் முதல் பிரேமில் கிளிக் செய்யவும். பிறகு காரை கிளிக் செய்தால் அதன் நடுவில் ஒரு குமிழ் தோன்றும் இப்போது காரை நகர்த்தி அந்த குமிழ் அந்த பாதையில் சரியாக இருக்குமாறு செய்யவும்.
பிறகு கார் லேயரின் 100வது பிரேமில் கிளிக் செய்து ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு பாதையின் கடைசி முனையில் காரை வைக்கவும் (அந்த குமிழ் சரியாக பாதையிலேயே இருக்க வேண்டும்).
கீபிரேமுக்கு இடையில் ரைட் கிளிக் செய்து create motion tween என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது control+Enter அழுத்தி பார்த்தால் மூவி இப்படி இருக்கும்.

கார் திரும்ப வேண்டுமல்லவா? அதனால் 1 முதல் 100வது பிரேமில் கிளிக் செய்த பிறகு கீழே பிராப்பர்டி சேனலில் orient to path என இருக்கும் அதை டிக் செய்யுங்கள். அவ்வளவுதான்!


[மற்றொரு முறை: 25, 50, 75வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்து அதை திருப்ப வேண்டும். இதை செய்ய Modify->Transform->Rotate 90 CCW என்பதை கிளிக் செய்யவும்.
இல்லையென்றால் நீங்களாக கூட சுழற்றலாம். Rotate 90 CCW அல்லது Rotate 90 CW என்பது எதிர் கடிகார அல்லது கடிகார திசையில் பொருளை சுழற்றுவதை குறிக்கும்.]




இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும்.

இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:

3 comments:

  1. மிகவும் அருமை...

    தெரியாத தகவல்.. கற்றுக்கொண்டேன்....

    நன்றி...

    ReplyDelete
  2. //வெறும்பய said..//
    மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  3. ஹைய்யா..இத் சூப்பர்

    ReplyDelete