Sunday, August 8, 2010

அடோப் ஃபிளாஷ் (13)- Background looping

முதலில் ஒரு புதிய பிளாஷ் பைலை திறக்கவும்.

உங்களுக்கு தேவையான பின்னணி படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் இங்கே இந்த பின்னணியையும் முன்னால் காரையும் எடுத்துக் கொண்டுள்ளேன்.

உங்கள் படத்தின் அளவும் ஸ்டேஜ் அளவும் ஒன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மேலும் அதன் ஓரங்கள் ஸ்டேஜோடு சரியாக பொருந்தி இருக்க வேண்டும்.



உங்கள் படத்தை செலக்ட் செய்து Control+C அழுத்தி செய்து காபி செய்து கொள்ளுங்கள். பிறகு Control+V அழுத்தி மூன்று முறை பேஸ்ட் செய்யுங்கள். அவற்றை ஒன்றை அடுத்து ஒன்று வரும்படி பக்கத்தில் வைக்கவும் படத்தில் உள்ளபடி நான்கு படங்கள் அடுத்தது இருக்க வேண்டும் அதன் ஓரங்கள் இணையாக இருக்கும்பாடி பார்த்துக் கொள்ளவும்.


முதல் படம் மட்டுமே ஸ்டேஜில் இருக்க வேண்டும் மீதி மூன்று படங்களும் அதற்கு அருகில் இருக்க வேண்டும். இடைவெளி தெரியாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
இப்போது control + A அழுத்தவும். இதனால் நான்கு படங்களும் செலக்ட் ஆகும். பிறகு ரைட் கிளிக் செய்து convert to symbolஐ கிளிக் செய்து Movie clipஐ தேர்ந்தெடுக்கவும்.


இப்போது 30 வது பிரேமில் ரைட்கிளிக் செய்து ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். பிறகு கடைசி படத்தின்(நான்கு படங்களும் இணைந்தது) வலது பக்க ஓரம் ஸ்டேஜின் வலது பக்க ஓரத்தோடு பொருந்தும் வகையில் வைக்கவும்.
இதனை பிரப்பார்டி சேனலில் Xல் ஸ்டேஜின் அகலத்தின் மும்மடங்கை மைனஸில் போடுவதன் மூலமும் மாற்றலாம்.

பிறகு கீபிரேமிற்கு நடுவில் ரைட்கிளிக் செய்து Create Motion Tween என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது ஒரு புதிய லேயரை உருவாக்கி காரை(அதாவது முன்னால் இருக்க வேண்டிய படம்) நீங்கள் விரும்பும் இடத்திற்கு எடுத்து வாருங்கள்.

அந்த லேயரின் 30வது பிரேமில் ரைட் கிளிக் செய்து Insert Frame என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்போது உங்கள் மூவியை பார்க்க Control+Enterஐ கிளிக் செய்யவும். இதை  சேமிக்க File என்பதில் Export என்பதை கிளிக் செய்து Export to movie என்பதை கிளிக் செய்து swf ஃபைலாக சேமிக்கவும்.

DEMO:







பிடித்திருந்தால் கருத்துரை சொல்லவும். நன்றி!

9 comments:

  1. அருமை... உங்களுக்கு, flash script நல்லா தெரியுங்களா?

    ReplyDelete
  2. adobe flash cs5 டவுன்லோட் செய்துவிட்டேன்
    நீங்கள் சொன்ன அத்தனையும் முயற்சி செய்து பார்த்துவிடுகிறேன்
    மிக நல்ல விளக்கங்கள் வுடைய பதிவு :)

    ReplyDelete
  3. //Jey said...
    அருமை... உங்களுக்கு, flash script நல்லா தெரியுங்களா?//
    ரொம்ப நல்லாத் தெரியும்னு சொல்ல முடியாதுங்க ஏன்னா எல்லாம் நானா கற்றுக் கொண்டது!
    ஆனால் எதாவது சந்தேகம்னா எப்படியாவது கண்டுபிடித்து சொல்லி விடுவேன்.

    //Maduraimohan said...
    adobe flash cs5 டவுன்லோட் செய்துவிட்டேன்
    நீங்கள் சொன்ன அத்தனையும் முயற்சி செய்து பார்த்துவிடுகிறேன் மிக நல்ல விளக்கங்கள் வுடைய பதிவு :)//
    தங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  4. பிளாஷ் ஸ்கிரிப்ட் ல எனக்கு அப்பப்ப சந்தேகம் வாறதுண்டு. கேக்கலாமுங்களா?

    ReplyDelete
  5. //கொல்லான் said...
    பிளாஷ் ஸ்கிரிப்ட் ல எனக்கு அப்பப்ப சந்தேகம் வாறதுண்டு. கேக்கலாமுங்களா? //
    கேளுங்க தெரிஞ்சத சொல்றேன் :-)

    ReplyDelete
  6. If you segregate tech posts from other posts you can get into top ten.

    ReplyDelete
  7. //suthanthira.co.cc said...
    If you segregate tech posts from other posts you can get into top ten.//
    நான் ஏற்கனவே தொழிற்நுட்பம் என்று lable மூலமாக பிரித்து வைத்துள்ளேன். அதை மட்டும் கிளிக் செய்தால் போதுமே அனைத்து தொழிற்நுட்ப பதிவுகளையும் காணலாமே.

    ReplyDelete
  8. ஆனால் எதாவது சந்தேகம்னா எப்படியாவது கண்டுபிடித்து சொல்லி விடுவேன்//
    சூப்பர் பதில்

    ReplyDelete
  9. உங்களுக்கு பிளாஷ் தவிர பிரிமியர், மாயா, லைட்வொர்க்ஸ், பையர்வொர்க்ஸ் தெரியுமா.தெரிந்தால் அதையும் பதிப்பிடவும்.ரொம்ப உதவியாக இருக்கும்.நன்றி

    ReplyDelete